இன்று மோடி அமைச்சரவையின் முதல் ரயில்வே பட்ஜெட் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டது . இந்த பட்ஜெட்டில் அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளதால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார் .
இன்று கூட்டம் ஒன்றில் மம்தா அளித்த பேட்டியில் , " முதலில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்தனர் , பின்னர் பாதுகாப்பில் கொண்டு வந்தனர் , இப்போது ரயில்வே துறையிலும் அந்நிய முதலீட்டைக் கொண்டு வந்துள்ளனர் . நாட்டை அவர்கள் விற்க ஆரம்பித்துவிட்டனர் . உங்களுக்கு உணவு சரியாக கிடைக்கவில்லை என்றால் உங்கள் மகளை வித்து விடுவீர்களா ?? இவ்வாறு செய்வதற்கு எதற்காக அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்கு கொடுத்தீர்கள் . இதை அவர்கள் தேர்தல் முன்னரே நாங்கள் நாட்டை வெளிநாட்டினரிடம் விற்று விடுவோம் என்று கூறியிருக்க வேண்டும் . இதனால் சிறு வியாபாரிகளின் நிலமை என்னவாகும் ?? மேலும் இந்த பட்ஜெட்டில் மேற்கு வங்கத்திற்கு எந்த வசதியும் கிடைக்கவில்லை . நாங்கள் என்ன பிச்சைக் காரர்களா ??
மக்கள் காங்கிரஸ் ஆட்சியில் அடைந்த அதிருப்தியினால் , வேறு வழி இல்லாமல் பாஜக விற்கு வாக்களித்தனர் . ஆனால் மேற்கு வங்களம் , ஓடிசா , மற்றும் தமிழகத்தில் இந்த நிலமை இல்லை . அவர்களிடம் மாற்று கட்சி ஒன்று இருக்கிறது . இதனால் தான் மூன்றாம் அணி அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன் . என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.