சரவணன் மீனாட்சி என்ற தொடர் விஜய் டிவியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது, இந்த தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவரும் சிறந்த ஜோடிகளாக டிவிகளில் வலம் வந்தனர், இந்நிலையில் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
சரவணன் செந்தில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர், இவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே வழக்கம்போல மறுத்து வந்தார்கள்.
இந்நிலையில் திருப்பதியில் செந்தில், ஸ்ரீஜா இருவரும் ரகசியமாக சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணமான செய்தியினை நடிகர் பாலாஜி முதன்முதலில் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் வெளியிட்டு உறுதி செய்திருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.