BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 8 July 2014

ரயில்வே பட்ஜெட் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை !!



மோடி அரசின் முதல் இரயில்வே பட்ஜெட் இன்று இரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்தார் .

பட்ஜெட்டை முழுமையாக படியுங்கள் !!

 இந்த பட்ஜெட்டில் உள்ள நன்மைகளையும் , தீமைகளையும் அந்த பட்ஜெட்டைப் பற்றி  நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களைக் காணலாம் .

1 ) மோடி அரசின் முதல் தேர்வு !!

இந்த பட்ஜெட்டை பலர் மோடி அரசின் முதல் தேர்வாகவே பார்க்கின்றனர் . இதன் மூலம் அவர்களின் ஆளுமைத் திறனை கணித்து விடலாம் என்று இருந்தனர் . இதனால் இரயில்வே அமைச்சருக்கு கூடுதல் சுமை இருந்தது . ஆனாலும் எந்தவொரு பதற்றமும் இல்லாமல் , ஒரு தொலைநோக்கு பார்வையுடன் ஒரு வலுவான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் .

2 ) இரயில்வேயும் ஒரு சேவைத் துறை தான் !!

இதுவரை அனைத்து பட்ஜெட்டுகளும் இரயில்வே கட்டமைப்பை வலுபடுத்துவதில் கருத்தாக இருக்கும் . ஆனால் அந்த பட்ஜெட்டில் இரயில்வே ஒரு சேவைத் துறை என்பதை மறந்து ஒரு லாபம் பார்க்கும் இயந்திரமாகவே பார்த்தனர் . அதனை சதானந்த கவுடா அவர்கள் அழகாக இந்த பட்ஜெட்டில் செய்துள்ளார் . மக்களுக்கு அதிக சேவை வழங்கும் விதமாக இரயில்வேயில் வைபி வசதி , பயணிகளுக்கு உணவு வழங்குவதை மேம்படுத்துதல் , சிசி டிவி கேமரா பொருத்துதல் , பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றை இந்த பட்ஜெட்டில் இடம் பெற வைத்து இரயிவே துறையை சேவைத் துறையாகவும் மாற்ற முயற்சித்து இருக்கிறார் .

3 ) பல நாள் கனவு நினைவேறியது !!

இந்தியாவில் பல ஆண்டுகளாக புல்லட் ரயிலை செலுத்த முயற்சிகள் நடை பெற்று வந்தது . ஆனால் இறுதியாக இந்த பட்ஜெட்டில் தான் புல்லட் ரயில் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது . இப்போது இந்த அறிவிப்பினால் பல இந்தியர்களின் கனவு நனவாக இருக்கிறது . மேலும் 54 புதிய ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளனர் .

4 ) ரயில்வேயில் அந்நிய முதலீட்டை அனுமதித்து கொடுத்த வாக்கை மீறியது!

இந்த ரயில்வே பட்ஜெட்டில் பெரிய பெரிய திட்டங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க இருக்கிறோம் என்று கூறினார் . மேலும் பெரிய பெரிய திட்டங்களில் முதலீடு செய்யும் அளவுக்கு நிதி அந்நிய முதலீட்டில் தான் கிடைக்கும் என்றும் . மக்களிடம் ரயில் டிக்கெட்டின் விலை ஏற்றத்தை வைத்து மட்டும் இந்த நிதியை திரட்டி விட முடியாது . வேறு வழியில் தான் செல்ல வேண்டும் . எனவே தான் அந்நிய முதலீட்டை  இரயில்வே துறையில் , ஆதரிக்கிறோம் என்று அவர் கூறி உள்ளார் . ஆனால் இதற்கு முன்னால்  மத்திய அமைச்சகம் , ரயில்வேத் துறை போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காது என்று கூறி இருந்தனர் . ஆனால் இப்போது இவரின் இந்த அறிவிப்பால் பெரும் சர்ச்சைக் கிளம்பியுள்ளது . இரட்டை வேடம் போடுவதாக கூறுகின்றனர் .

5 ) விலை ஏற்றத்தை மறைக்க புதிய திட்டங்களா ??

எப்பவும் ஒரு சேவைக்கேற்ற விலையை நாம் கொடுத்தாக வேண்டும் . இந்த பட்ஜெட்டில் பல சேவைகளை அறிவித்த அமைச்சர் , விலை ஏற்றத்தைக் கட்டுபடுத்த முடியவில்லை என்றும் , எரிவாயு விலை உயர்விற்கேற்ப ரயில் கட்டணமும் உயரும் என்று அறிவித்தார் . இதனால் விலை ஏற்றத்தை மறைக்க தான் இத்தனை திட்டங்கள் என்று கூறுகின்றனர் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media