BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 8 July 2014

இந்திய ரயிவேயின் நிலைமையை எவ்வாறு மாற்றுவது ??


இன்று பாஜக அரசு போறுப்பேற்ற பின் முதல் ரயிவே பட்ஜெட் வரப் போகிறது . பல மக்கள் பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் . எவ்வளவு முறை விலையை ஏற்றினாலும் , குறைத்தாலும் நாம் எதிர்பார்க்கின்ற சேவைகள் ரயில்வேயில் கிடைப்பதில்லை . இப்போது உள்ள ரயில்வேயின் நிலைமையை மாற்ற என்ன தான் வழி ?? வாருங்கள் பார்ப்போம் !!


1 ) ரயில்வே உள்கட்டமைப்பை சீரமைப்பதில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும் !!!

ரயில்வே உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் அதிக ரயில்கள் , வசதிகளுடன் கூடிய ரயில் நிலையங்கள் , அதிக ரயில் பாதைகள் ஆகியவை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது . இதுவரை அரசு தான் உள்கட்டமைப்புகளை அமைத்து கொண்டு இருந்தது . தனியார் நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு கொடுக்கலாம் . ஆனால் முழு உரிமம் அரசிடம் தான் இருக்க வேண்டும் .

2 ) ரயில்வே துறையும் ஒரு சேவை துறை தான் !! வெறும் லாபத்தை மட்டும் பார்க்கும் துறை அல்ல !!

இதை இந்த அரசு கவனத்துடன் பார்க்க வேண்டும் . மேலும் தனது ஊழியர்களுக்கும் இதை தெரிவு படுத்த வேண்டும் . ரயில்வே நிலையங்களில் கிடைக்கும் சேவையை கூட்டுவதன் மூலம் , கிடைக்கும் லாபம் பெருகவும் செய்யும் , மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளும் அதிகரிக்கும் .

3 ) விலைகள் நியாமானதாக இருந்து பண வீக்கத்தை கட்டுபடுத்த வேண்டும் !!

விலை ஏறியவுடன் நாம் உடனே ரயில்வே நிர்வாகத்தை குறை கூறிவிட முடியாது . ஆனால் அந்த விலை ஏற்றம் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லதாக இருக்க வேண்டும் . இதுவரை பணவீக்கம் 6 சதவீதத்தைக் குறையவில்லை . விலை ஏறினால் மக்களுக்கு கிடைக்கும் சேவைகளும் நன்றாக இருக்க வேண்டும் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media