இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்கள் என்றால் உடனே நம் நினைவிற்கு வருவது கங்குலியும் தோனியும் தான். இவர்களில் கங்குலியின் பங்கு மிக அதிகம் . சோர்ந்து கிடந்த இந்திய அணியை தான் ஒருவராக முன் இருந்து நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். அந்த கங்குலிக்கு இன்று 42 வது பிறந்த நாள். இவரை அனைவரும் செல்லமாக தாதா என்று அழைப்பார்கள். அந்த பேருக்கு ஏத்தது போல இவரும் உண்மையான தாதா. யாருக்கு அஞ்சியது இல்லை. எப்போதும் சரியான் முடிவுகளை பயப்படாமல் எடுப்பார்.
இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். வங்கத்து புலி என அந்த ஊர் ரசிகர்களால் அழைக்கப்படுவார். தனது சொந்த ஊர் மக்களிடம் இவருக்கு இருக்கும் ஆதரவு இந்தியாவில் வேறு எந்த வீரருக்கும் கிடையாது. ஒருமுறை ஐபிஎல் போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் புனே வாரியர்ஸ் அணியும் விளையாடின. அதில் கங்குலி புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது ,ஆனால் ரசிகர்கள் அனைவரும் கங்குலிக்கு தான் ஆதரவாக இருந்தார்கள். ஒரு ரசிகர் மைதனத்துக்கள் நுழைந்து இவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு சென்றார்.
பேட்டிங்கிலும் பல சாதனைகள் செய்து உள்ளார். 311 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11363 ரன்களையும் குவித்து உள்ளார். 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7212 ரன்களையும் குவித்து உள்ளார். ஒரு முறை இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போது அங்கேயே தனது சட்டையை கழற்றி சுற்றினார். இது அனைவரையும் கவர்ந்தது. எப்படி வெற்றியை கொண்டாட வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு சொல்லி தந்து உள்ளார்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாதா !!!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.