கார்க் கதவை மூட மறுத்த காரணத்துக்காக சவூதி அரேபியர் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டிலிருந்து வெளியாகும் "அரபு நியூஸ்' இதழில் வெளியான தகவல்: சவூதியில் குழந்தைகளுடன் காரில் உல்லாசப் பயணம் சென்ற தம்பதி ஒன்று,
தங்களது வீட்டுக்குத் திரும்பியுள்ளது. அப்போது காரிலிருந்து இறங்கிய
மனைவி, தனது குழந்தைகளையும் இறக்கிவிட்டு வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.
மனைவி கார்க் கதவை மூடாமல் சென்றதைக் கண்ட கணவர், கோபமுடன் அதனை மூடச்
சொல்லியிருக்கிறார். ஆனால், காருக்கு அருகில் கணவர் இருப்பதால் அவரையே
மூடச் சொல்லியிருக்கிறார் மனைவி. இதனால் கோபம் தலைக்கேறிய கணவர், மனைவியை
விவாகரத்து செய்வதாகக் கூறியிருக்கிறார். மனைவியும் தனது தாய் வீட்டுக்குச்
சென்றுவிட்டார்.
உறவினர்கள் அவரை திரும்ப அழைத்தபோது, பொறுப்பில்லாத கணவனுடன் மீண்டும்
சேர விருப்பமில்லை என அவர் மறுத்துவிட்டதாக அந்தக் கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.