ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் சகோதரி வந்தனா ஷர்மா போட்டியிடுகிறார் . அவர் தனது சொத்து மதிப்புகளை தேர்தல் ஆணையத்திடம் வெளியிட்டார் . அவர் கொடுத்த விவரங்களின் படி அவரின் சொத்து மதிப்பு 33.06 கோடி ரூபாய் .
இவர் சபிடான் தொகுதியில் போட்டியிடுகிறார் . இவர் அரசியல் அறிவியலில் பி.எச்.டி முடித்துள்ளார் . இவரின் அசையும் சொத்துக்கள் 31.41கோடி ரூபாய் . இந்த சொத்து பட்டியலில் இவரது கணவரின் சொத்துகளும் அடங்கும் . இவரது கணவர் மருத்துவர் .
இவர் எஸ்.டி பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார் . இவர் 25 வருடங்கள் பணியாற்றிய பின் 2010 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார் . இவருக்கு இதற்கு முன் அரசியல் அனுபவம் இல்லை . இப்போது தான் முதல் முறை தேர்தலில் போட்டியிடுகிறார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.