விளம்பரம் என்று வரும் போது ஒவ்வொருவரும் வித்தியாசமாக யோசிப்பர் . அதுவும் விமானத்திற்கு விளம்பரம் என்று வரும் போது கட்டண குறைப்பு , விமானத்தின் அட்டகாசமான உள்கட்டமைப்பு என வித்தியாசமாக காட்டுவர் . ஆனால் வியட்ஜெட் என்னும் ஏர்லைன்ஸ் ஒரு படி மேலேப் போய் தன்னுடைய விமான பணிப்பெண்களை பிகினியில் வைத்து போட்டோஷுட் நடத்தி உள்ளது .
இதற்காக தனது 10 பணிப் பெண்களை மஞ்சல் மற்றும் சிவப்பு நிற பிகினியில் வரவைத்து போட்டோஷுட் நடத்தி உள்ளனர் . ஏன் மஞ்சல் சிவப்பு நிறமென்றால் அது அந்த விமான நிறுவனத்தின் நிறமாம் .
இதனை அந்த போட்டோஷுட்டில் இடம்பெற்ற ஒரு மாடல் ஒருவர் பேஸ்புக்கில் பரவ விட்டு விட்டார் . இதனால் காட்டுத்தீப் போல பரவியது . இதனால் உஷாரன அந்த நிறுவனத்தினர் இந்த போட்டோஷுட்டை விள்ம்பரத்திற்காக எடுக்கவில்லை என்று கூறி மழுப்பி விட்டனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.