மொஹமத் டை அஸ்வால் நர்சிங் கல்லூரி லுதியானாவில் இருக்கிறது . இந்த கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும் ஒரு பெண் மொபைல் ஒன்றை திருடி விட்டதாக கல்லூரி முதல்வர் நிர்வாண சோதனை செய்துள்ளார் . இதனால் அந்த கல்லூரி வளாகத்தை அந்த பெண்ணின் உறவினர்கள் சுற்றி வளைத்தனர் . கல்லூரி வார்டன் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியவர்களை பதவியில் இருந்து விலக கோரிக்கை வைத்தனர் .
செய்திகளின்படி அந்த பெண் வார்டனின் போனை திருடியதாகவும் , இதனால் கல்லூரி முதல்வர் முன் அவரின் ஆடைகளை களைய கட்டளையிட்டு அவரை நிர்வாண சோதனை செய்துள்ளனர் . ஆனால் அவரிடம் எந்த மொபைலும் கண்டுபிடிக்கப்படவில்லை . இந்த சோதனைக்குப் பின் அந்த பெண் மயக்கமடைந்தார் .
இதனால் அந்த கல்லூரியை அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சுற்றி வளைத்தனர் . இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டதற்ஃபு திருடு போகும் சமயத்தில் இது போன்ற சோதனைகள் நடப்பது சாதாரணம் என்று கூறியுள்ளனர் .
போலிஸ் வந்து அவர்களை சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.