இந்தியா மற்றும் அமெரிக்கா இடயே உள்ள நல்லுறவை வலியுற்த்துவதற்கா அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு தலைமை அதிகாரி வில்லியம் கோஹன் இன்று கூறுகையில் , " இந்தியாவிற்கு உள்ள ஆபத்துகள் , குறிக்கோள்கள் , ஆசைகள் அனைத்தும் அமெரிக்காவிற்கும் இருக்கிறது . எனவே ஒரே நோக்கம் உடைய இரண்டு நபர்கள் முன்னேற்றத்திற்காக இணைவது இயற்கை தான் " என்றார் .
மோடியின் அமெரிக்க பயணத்திற்கு முன்னர் நடந்த வட்டமேசை மாநாடில் பேசிய கோஹன் , உலக அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு இரு நாடுகளும் முக்கிய பங்காற்றும் என்றார் . ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைந்து உழைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார் .
மேலும் அவர் சீனாவை உதாரணம் காட்டி சீனா குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சியை பெற்றுள்ளது . அது ஏன் என்றால் அவர்கள் தங்களின் கனவுகளை வெற்றிகரமாக நிறைவேற்றியது தான் அதற்கு காரணம் என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.