ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் நேற்று திடீரென உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பை கருதி சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்தில் வழங்க வேண்டும் என்று நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் தமக்கு பாதுகாப்பு இல்லை எனில் ஜெயலலிதாதான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
நாளை காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட அனைத்தும் உறுதியான நிலையில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பரப்பன அக்ரஹாரம் நீதிமன்ற வளாகத்தில் 19 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.
நாளை காலை தனி விமானத்தில் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு ஹெ.ஏ.எல் விமான தளத்திற்கு செல்கிறார், அங்கிருந்து ஹெலிக்காப்டர் மூலம் பரப்பன அக்ரஹாரம் செல்கிறார், தீர்ப்பு குறித்து முதல்வர் தரப்பு தெம்பாக உள்ளதாம், முதல்வர் விடுவிக்கப்படுவார் என்றும் மீதமுள்ளவர்கள் சிறிய அளவில் தண்டனையை பெறுவார்கள் என்றும் அதிகார வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.