மஹாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவுகான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார் . தேசியவாத காங்கிரஸ் தனது 15 வருட காங்கிரசுடன் இருந்த கூட்டணியில் இருந்து விலகியது . இதனால் இவருக்கு பதவியில் நீடிக்க போதிய பெரும்பான்மை இல்லை . இவரின் அரசு மைனாரிட்டி அரசு ஆனது .
இதனால் இன்று மாலை மஹாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களிடம் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார் .
இந்த வியாழன்கிழமை தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியது . வருகிற சட்டமன்ற தேர்தலில் இருக்கும் 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் சமமான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் , கிடைக்கும் 5 வருட ஆட்சி காலத்தில் முதல் பாதி ஒரு முதல்வரும் அடுத்த பாதி இன்னோரு முதல்வரும் இருக்கும் வகையில் அவர்கள் கோரிக்கை வைத்தனர் . இதனால் இவர்களின் கூட்டணி முறிந்ததாக கூறப்படுகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.