சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின்
கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்
படைகள் வியாழக்கிழமை தாக்குதல் நிகழ்த்தின. இதில் 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து, மேற்கொண்டு தாக்குதல் நடைபெறுவதைத் தடுத்து
நிறுத்தும் நோக்கில், தங்களிடமிருந்த ஏராளமான பிணைக் கைதிகளை பயங்கரவாதிகள்
விடுவித்தனர். சிரியாவிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான
கூட்டுப் படைகள் செவ்வாய்க்கிழமை முதல் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. தாக்குதலின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை, ஐ.எஸ்.ஸின் முக்கிய நிதி ஆதாரமான எண்ணெய் வயல்கள் குறி வைக்கப்பட்டன. சிரியாவின் அண்டை நாடான இராக்கில், அந்த அமைப்பின் மீது ஒரு மாதத்துக்கும் மேலாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
அந்நாட்டில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி, தலைநகர் பாக்தாதுக்கு 50 கி.மீ. வரை முன்னேறி வந்த ஐ.எஸ். அமைப்பைத் தோற்கடிக்கும் வகையில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இராக்கைப் போலவே சிரியாவிலும் ஏராளமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்., அங்குள்ள மிகப் பெரிய எண்ணெய் வயல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
அவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெயை கள்ளச் சந்தையில் விற்பதன் மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு கணிசமான அளவு நிதி கிடைக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் தீர் எல்-ùஸளர் மாகாணத்திலுள்ள மயாதீன் நகரைச் சுற்றிலுமுள்ள நான்கு எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்க, அரபுக் கூட்டுப் படைகளின் விமானங்கள் குண்டு வீசியதாக சிரியாவில் இயங்கிவரும் பிரிட்டனைச் சேர்ந்த கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது. அப்பகுதியில் இயங்கிவரும் சமூக ஆர்வலர்களும் இத்தகவலை உறுதி செய்துள்ளனர்.
இதுதவிர, ஹஸாக்கே மாகாணத்திலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் கூட்டுப் படையினர் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில், 5 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் பயங்கவாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் எனக் கூறப்படுகிறது. தாக்குதலை நேரில் கண்ட சமூக ஆர்வலர் ஒருவர், உயிரிழப்பு இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் எனத் தெரிவித்தார். கைதிகள் விடுவிப்பு: இதற்கிடையே, மேற்கொண்டு தாக்குதல் நிகழ்த்தப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், பயங்கரவாதிகள் தங்களிடமிருந்த 150 கைதிகளை விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராக்கா நகரில், அந்த 150 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
பிற இலக்குகள்: எண்ணெய் வயல்கள் தவிர, ஐ.எஸ். கட்டுப்பாட்டிலுள்ள சுங்கச் சாவடிகள், பயிற்சி மைதானங்கள், வாகனங்கள் மீதும் கூட்டுப் படைகள் தாக்குதல் நிகழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.