லடாக்கில் நிகழ்ந்த சீன ராணுவத்தினர் ஊடுருவலைத் தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் எல்லைப் பகுதியில் அந்நாட்டுக் கடற்படையின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதி ராபின் தோவான் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
இந்தியப் பெருங்கடலில் நமது எல்லைப் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக சீனக் கடற்படையின் போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், லடாக்கில் அந்நாட்டுப் படையினர் அத்துமீறி ஊடுருவியுள்ளதால், சீனக் கடற்படையின் இந்த நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.