BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 June 2014

சர்வதேச மணற் சிற்ப போட்டியில் அசத்திய இந்திய கலைஞர் !!!!


சர்வதேச அளவிலான மணற்சிற்ப போட்டி கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்றது . இந்த போட்டியில் பலவேறு நாடுகளைச் சேர்ந்த 20 கலைஞர்கள் பங்கேற்றனர் . இந்தியாவின் சார்பில் ஓரிசாவில் இருந்து 37 வயதான சுதர்சன் பட்நாயக் கலந்து கொண்டார் .

இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் 10 டண் மணல் கொண்டு 30 மணி நேரத்தில் சிற்பத்தை வடிவமைக்க வேண்டும் . இந்த போட்டியின் தனி நபர் பிரிவில் , " மரம் காப்போம் , எதிர்காலத்தைக் காப்போம் " என்ற தலைப்பில் அவர் வடிவமைத்த சிற்பம் மக்களைக் கவர்ந்ததால் , பெரும்பாலான மக்கள் அவருக்கு வாக்களித்தனர் . இதனால் ஒற்றையர் பிரிவில் அவர் வென்றார் . இரட்டையர் பிரிவில் 5ஆம் இடம் பிடித்தார் .

இவருக்கு இந்திய அரசு இந்தாண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது . 



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media