தற்போது உள்ள இந்திய அணியில் தோனி ,கம்பீரை தவிர மூத்த வீரர் என்று சொல்லி கொள்ளும் படி யாரும் இல்லை . இதனால் இந்திய அணி வெளிநாடுகளில் தடுமாறி வருகிறது. இந்த இளம் வீரர்களுக்கு மூத்த வீரர்களின் அலோசனை தேவை என்பதை உண்ர்ந்து இருக்கிறார் தோனி. எனவே முன்னாள் இந்திய அணி வீரர் டிராவிட்டை அலோசகராக்க வேண்டும் என்று டோனியும் ,இந்திய அணியின் பயிற்சியாளர் ஃப்ளட்சரும் பிசிசிஐக்கு கோரிக்கை வைது இருந்தனர்.
அவர்களது இதனை ஏற்று டிரவிட்டை அணுகினர். சற்றும் யோசிக்காத டிராவிட் இதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அவரை அதிகாரபூர்வ ஆலோசகராக நியமிக்கபடவில்லை என்றது பிசிசிஐ .டிராவிட்டும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் அணி வீரர்களை சந்தித்து அலோசனை வழங்குவார். இந்திய அணியின் சுவராக விளங்கிய டிராவிட் அணிக்கு அலோசனை வழங்குவது என்பது இந்திய அணியை பலபடுத்தும். ஏனவே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.