BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 June 2014

இந்தியா ஒலிம்பிக்கில் ஜொலிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு !!!



இன்னும் 2 வருடத்தில் ஒலிம்பிக் போட்டிகள் வர உள்ளது . இந்தியா இதுவரை ஒலிம்பிக்கில் பெரிய அளவு  சாதித்தாது இல்லை . இது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நமக்கு பெரும் அவமானமாகவே இருக்கிறது . எனவே பெரும்பாலான மக்கள் புதிய அரசு இந்த பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கொண்டு வருமா என்று எதிர்பார்த்து காத்து இருந்தனர் . அது போலவே இப்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது .

அந்த தீர்வின்படி மத்திய விளையாட்டு அமைச்சரவை ,  ஒலிம்பிக் போட்டியில் வெல்லும் அளவு திறமை வாய்ந்த வீரர்களை கண்டறிய நிபுணர் குழு ஒன்றை அமைத்து செயல்பட உள்ளனர் .

இந்த குழுவில் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிர் அவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . அவரும் இந்த முயற்சியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் . ராகுல் காந்தி தலைவராக இருப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை .

பிரபல விளையாட்டு வீரர்களும் , இந்திய ஒலிம்பிக் ஆணைய்த்தில் இருந்த அதிகாரிகளும் இந்த குழுவில் இருப்பார்கள் . இவ்வாறு பிரபல விளையாட்டு வீரர்களை குழுவில் இணைப்பதன் மூலம் இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட் வீரர்கள் சரியான வீரர்கள் ஆகத் தான் இருப்பார்கள் என்னும் நம்பிக்கை மக்களிடேயே வரும் என்று மத்திய அமைச்சகம் நம்புகிறது .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media