இப்போது உலகம் முழுவதும் அனைவராளும் பார்க்கப்பட்டு , பேசப்பட்டு வருவது கால்பந்து உலக கோப்பை ஆகும். அனைத்து பிரபலங்களும் , விளையாட்டு வீரர்களும் இதனை கண்டு களித்து வருகிறார்கள். இதனால் மற்ற விளையாட்டுகளுக்கு மவுசு குறைந்து விட்டது. இந்தியவிற்கும் இங்கிலாந்துக்கும் எதிரான டெஸ்ட் தொடர் என்கிற எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். இப்போது விம்பிள்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதனை தீவிர டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமே கவனித்து வருகிறார்கள்.
ஆனால் நமது சச்சின் கால்பந்தை விரும்பாமல் டென்னிஸை பார்க்க சென்று உள்ளார். அவர் பெடரரின் தீவிர ரசிகர் ஆவார். இவருடன் கால்பந்தின் கதாநாயகன் டேவிட் பெக்காமும் சென்று இருந்தார் . இது டென்னிஸ் வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தது. ஸ்டராஸ், பிராட் போன்ற பிரபலங்களும் வந்து இருந்தனர் .என்ன தான் நாம் கால்பந்து உலக கோப்பை, விம்பிள்டன் என் இரண்டையும் கவனித்து வந்தாலும் நாம் மற்ற அணி வீரர்களை ஆதரிக்கும் நிலையில் தான் இருக்கிறோம் என்பதை வெட்கத்துடன் சொல்கிறேன்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.