சென்னை போரூர் முகலிவாக்கம் கட்டிடம் நேற்று இடிந்து விழுந்து தரைமட்டமானது . கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 12 பேர் பலியாயினர் .
சம்பவம் நடந்த இடத்தை தமிழக் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்தார் . மீட்பு பணிகளை பற்றி முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் . கட்டிடம் எவ்வாறு இடிந்தது என்றும் , அங்கே உள்ள பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்தார் .
இதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் , மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் , காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , விபத்து நடக்கும் போது கட்டிடத்தில் 72 பேர் இருந்தனர் அவர்களில் 20 பேர் பெண்கள் எனவும் , காயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கு தங்க இடமும் உணவும் அளித்து வருவதாகவும் , கட்டிடல் கட்டுவதில் தான் விதிமீறல் நடந்து உள்ளதாகவும் , அனுமதி கொடுப்பதில் விதிமீறல் நடக்கவில்லை எனவும் அரசு அனைத்து நடவடிக்கைளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.