பெங்களுர் போலீசார் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது, ஆனால் அதனை மதிக்காமல் ஒரு கார் வேகமாக சென்றது. அதனை போலீசார் பின் தொடர்ந்து சென்றார்கள். சுமார் 4 கிமீ பிறகு அந்த காரை மடக்கி பிடித்தார்கள். அதனை ஒட்டியவர் 17 வயது மிக்க ஒரு கல்லூரி மாணவர். அவரிடம் ஒட்டுனர் உரிமம் இல்லை . வண்டியை சிக்னலில் நிறுத்தாமல் ஒட்டியது, ஒட்டுநர் உரிமம் இல்லாதது என 17 பிரிவுகளிள் வழக்கு பதிவு செய்யபட்டது.
இது மிகவும் தவறான செயல் ஆகும், அதுவும் ஒரு இளைஞர் இதனை செய்தார் என்னும் போது நாம் இதற்காக வெட்கப்பட வேண்டும். நாளைய இந்திய இளைஞர்களை நம்பி என்று அப்துல் கலாம் கனவு காண்கிறார். ஆனால் நமது இளைஞர் சமுதாயமோ மிகவும் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை, சினிமா அவர்களை தவறான பாதையில் எடுத்து செல்கிறது. இது தப்பாச்சே இளைஞர்களே ,சீக்கிரம் மாற்றி கொள்ளுங்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.