ஆவடி சிவா அவர்கள் T3 கொரட்டூர் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் வேலை செய்கிறார், முகலிவாக்கம் இடிந்த கட்டிடத்தில் விடிய விடிய மீட்பு பணியில் பங்கெடுத்துள்ளார், அப்போது நடந்த உருக்கமான சம்பவங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார்
மாவட்ட ஆட்சியர்கள் , பல உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை, தீயணைப்புப் துறை சகோதரர்கள், பேரிடர் மீட்பு குழு நண்பர்கள், மெட்ரோ ரயில் ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்! விடிய விடிய ஒரு ஆள் கூட அங்கிருந்து நகரவில்லை! இரவு 23 பேர் வரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்! அரசு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தது!
நள்ளிரவு 3 மணிக்கு பெயர் தெரியாத ஒருவர் 50 பிஸ்கெட் பாக்கெட்களை கொண்டு வந்து எங்கள் பசியாற்றினார்! இன்னொருவர் சைக்கிளில் டீ விற்பனை செய்பவர்களை மொத்த பேரயும் அழைத்து வந்து அனைவருக்கும் டீ வாங்கிந்தந்தார்! சிக்னலில் பிச்சை எடுக்கும் பெரியவர் கடைசி வரை அவரால் முடிந்ததை அப்புறப்படுத்தி கொண்டிருந்தார். ஒருவருக்கு கூட உறக்கம் என்ற பேச்சே வரவில்லை விடியும் வரை! எல்லாரயும் காப்பாத்திடனும்னு எல்லாருக்குமே வெறி! கண்டிப்பாக காப்பாற்றி விடுவோம்! இரவு பணி முடித்து நாங்கள் வந்துவிட்டோம்!
இன்னும் என் சகோதரர்கள் அங்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்! அனைவரையும் காப்பாற்றி விடு இறைவா ! மிகுந்த களைப்போடு உறங்க செல்கிறேன்! வணக்கம்! என்னவோ இதெல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு தோணுச்சி அதான்!
Avadi Shiva சார்க்கு ஒரு சல்யூட்
மீட்பு பணி குழுக்கு ஒரு லைக் போட்டு இவர்களின் சிறப்பு அனைவரையும் சென்று சேர ஷேர் செய்வோம்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.