BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 31 August 2014

சர்க்கரை நோயாளிகளா ? - சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்


நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலானவற்றை தீர்க்க இயற்கையிலேயே பல வழிமுறைகள் உள்ளன. மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மனிதனுக்கு மரணத்தைத் தரும் நோய்களைக் கூட விரட்டு முடியும் என்பது உண்மை.அந்த வகையில் மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது.

சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன. மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அதுதொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.

 இயற்கையான உணவுகளைக் கொண்டு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என்று பேசும் போது, சீத்தாப்பழம் அந்த உணவுப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். உண்மையில், சீத்தாப்பழத்திற்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் உள்ளன. எண்ணற்ற விதைகளை கொண்டுள்ள இந்த ஆப்பிளுக்கு இணையான பலன்கள் வேறெங்கும் இல்லையென்றும் சொல்ல முடியும். புற்றுநோயை எதிர்க்கும் அக்சிடோஜெனின்களை பெருமளவு கொண்டிருக்கும் உணவாக உள்ளது சீத்தாப்பழத்தில் சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட குணம் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி, தசைகளுக்கு குளுக்கோஸ் சென்றடையும் வழிகளை மேம்படுத்துகிறது. உடலில் குளுக்கோஸ் பயன்படும் செயல்பாட்டை இந்த குணம் தான் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும்.

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி நிறைய உள்ளதால், இதை சாப்பிடுவதால், மருந்துகளை சாப்பிடுவதை விட அதிகமான பலன் கிடைக்கும். இதன் மூலம் மிகவும் எளிதாக, இயற்கையான வழிமுறையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், விரட்டிடவும் முடியும். மக்னீசியம் உடலுக்குத் தேவையான மிக முக்கியமான தாதுக்களில் மூன்றாவது இடத்தை மக்னீசியம் பிடிக்கிறது. குறைவான அளவு மக்னீயம் உடலில் இருந்தால், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக வைத்திருக்கவும், குளுக்கோஸை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, மக்னீசியம் நிறைந்திருக்கும் சீத்தாப்பழத்தை சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து என்றால் அது தவறில்லை.

பொட்டாசியம் குறைவான அளவு பொட்டாசியம் இருந்தால், சர்க்கரை நோய்க்கான கதவு வேகமாக திறக்கப்படும்.முறையான வழிமுறையில் பொட்டாசியத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதிகளவு மக்னீசியமும், பொட்டாசியமும் நிறைந்திருப்பது தான்

சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. பொதுவாகவே பொட்டாசியமானது செல்லுலர் செயல்பாடுகளை கவனிக்க உதவும், ஆனால் சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும். இரும்பு மிகவும் அதிகமான இரும்புச்சத்தை கொண்டிருப்பதும் சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் ஒன்றாகும்.இரத்த சோகைக்கு எதிராகப் போராடவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் இந்த சத்து உதவுகிறது. எனினும், சர்க்கரை நோயாளியின் உடலில் அளவுக்கு அதிகமாக இரும்புச்சத்து இருந்தால், அது வேறு சில பிரச்சனைகளை வரவழைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழர்கள் உணவையே மருந்தாக கொண்டும், மருந்தையே உணவாக கொண்டும் இயற்கை சார்ந்த வாழ்வியலை உலகிற்கு கொடையாக கொடுத்துள்ளனர்

ரவுடி வரிச்சூர் செல்வத்தின் அருகில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம், பாதுகாவலர்கள் எங்கே? அதிர்ச்சி படம்


மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், வரிச்சூர் செல்வத்தின் மீது பல்வேறு கொலை, ஆட்கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் உள்ளன, பலமுறை சிறை சென்ற இந்த ரவுடி மீது ஒரு முறை போலிஸ் என்கவுண்டர் போட்டது, அதில் வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளி போலிசால் சுடப்பட்டு சாக அதிஷ்டவசமாக அதில் தப்பிய வரிச்சூர் செல்வம் திருந்தி வாழ்வதாக கூறி கலெக்டர் ஆர்டிஓ மற்றும் மாஜிஸ்ட்ரேட்டிடம் மனு கொடுத்து தப்பித்தார், கொஞ்சம் நாட்கள் அமைதியாக இருந்தவர் மீண்டும் ரவுடித்தனம் செய்ய ஆரம்பித்தார்.

இந்நிலையில் காலையில் ரவுடி வரிச்சூர் செல்வத்துடன் முன்னாள் குடியரசுத்தலைவரும் எளிமையான தலைவருமான ஏபிஜே அப்துல்கலாம் இருப்பது போன்ற படம் வெளியானது, இந்த படம் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் எடுக்கப்பட்டுள்ளது, ரவுடி வரிச்சூர் செல்வம் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் அருகில் போய் அமர்ந்து எடுத்துள்ளார் போல் உள்ளது.

வரிச்சூர் செல்வம் ஒரு பிரபல ரவுடி என்பதும் அவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன என்பதும் உன்னத தலைவரும் மனிதருமான அப்துல்கலாமுக்கு தெரிந்திருக்காது, எத்தனையோ பொதுமக்கள் அவருடன் படம் எடுத்ததை போல இவரும் ஒருவர் என்று நினைத்து படம் எடுக்க அனுமதி தந்திருப்பார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் சிறந்த மனிதர், பெரும் அறிவு ஜீவி, குடியரசுத்தலைவராக இருந்த போது கூட ஆடம்பரத்தையும் தேவையற்ற பாதுகாப்பையும் அறவே வெறுத்தவர். அவர் இந்த தேசத்திற்கு மிக முக்கியமானவர், அவர் இந்த தேசத்தின் கெளரவமும் கூட, அத்தனை சிறந்த மனிதர் அருகில் வரிச்சூர் செல்வம் போன்ற ரவுடிகள் நெருங்கி படம் எடுக்க அப்துல்கலாமின் பாதுகாவலர்கள் எப்படி அனுமதித்தார்கள்? அல்லது முன்னாள் குடியரசு தலைவர் அவர்களின் அருகில் பாதுகாவலர்களே இல்லையா? ஒரு வேளை அப்துல்கலாம் அவர்களே பாதுகாப்பு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் அவருக்கு எங்கள் கோரிக்கை, அப்துல்கலாம் அய்யா உங்கள் எளிமையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் ஏற்கிறோம், அதே சமயம் இந்த தேசத்தின் கவுரவமான உங்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். தயவு செய்து பாதுகாவலர்கள் இல்லாமல் இருக்காதீர்கள்.

தமிழரின் அறிவியலில் - மழைப் பொழிவு

மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது.

பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்துமலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது.

இதேபோல,
‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99)
என்ற பாடல் வரிகள் கடல் நீர் ஆவியாகி மேகமாகி பின்னர் மழையாகப் பொழிகிறது. இப்படியாக மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது.

அகநானூறு, ‘மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி …………….. பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை’ என்று கூறுகிறது. இதுவும் கடலில் இருந்த நீர் மேகமாகி மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது.

ஆனால் அந்தக் கால மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாக கிரேக்க நாட்டு ஞானிகளான ‘தேல்ஸ்’ மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ‘அரிஸ்டாட்டில்’ போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்ணீருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளனர். மேலும் இப்படிக் கடல் நீரை உறிஞ்சும்போது அதன் உப்பு மண்ணில் கரைகிறது. வானத்தில் உள்ள காற்று குளிர்ந்ததும் அது மழையாகிறது என்றும் கூறியுள்ளனர் (Hydraulics and hydraulic research – a Historical Review ) இதுதான் கி.பி 1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news




மனைவியின் தீராத செக்ஸ் வெறியால் விவாகரத்து பெற்ற கணவர்
http://www.satrumun.net/2014/08/a-man-got-divorced.html

தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு ...!!
http://www.satrumun.net/2014/08/blog-post_62.html

காதலை யார் முதலில் சொல்ல வேண்டும் , எப்படி சொல்ல வேண்டும் என விரும்புகின்றனர் ?? - ஆய்வின் முடிவுகள் !!
http://www.satrumun.net/2014/08/how-men-want-to-be-proposed.html

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் , ரசிகர்கள் போஸ்டரால் பெரும் பரபரப்பு
http://www.satrumun.net/2014/08/bomb-in-ajith-house.html

கத்தி படத்துக்கு வந்து இருக்கும் புதிய பிரச்சனை, தீபாவளிக்கு
வெளிவருமா ??
http://www.satrumun.net/2014/08/a-new-problem-to-kaththi-movie.html

கவர்சியில் கலக்கிய சன்னிலியோன் உட்பட பல செக்ஸ் புயல்கள் ஆக்சனில் கலக்க இருக்கும் படங்கள் தகவல்கள் !!
http://www.satrumun.net/2014/08/heroines-who-jumps-into-action.html

செக் குடியரசில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் சூப்பர் டெக்னிக்
http://www.satrumun.net/2014/08/creative-idea-to-stop-urinating-people-in-public.html

தேடிப்போனார் தனுஷ், வாடிப்போனார் சிவகார்த்திகேயன் , இதற்கு தானா ஆசைப்பட்டாய் விஜய் சேதுபதி
http://www.soundcameraaction.com/hot-news/sivakarthikeyan-upset/

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியின் போது நீங்கள் பார்த்திடாத ஆச்சரிய போட்டோ
http://www.satrumun.net/2014/08/a-new-photo-in-cricket-match.html

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவதாக ரகசிய அழைப்பு விடுத்த பாஜக
http://www.satrumun.net/2014/08/kumar-vishwas-approached-for-delhi-cm.html

ஐஸ் பக்கெட் சேலஞ்சை நிறைய மக்கள் செய்ததால் தீவு ஒன்றில் தண்ணீர் தீர்ந்து போனது !!
http://www.satrumun.net/2014/08/water-system-shut-down-in-an-island-due-to-ice-bucket-challenge.html

நீங்கள் குடிக்கும் காபியின் நன்மை தீமைகள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்
http://www.satrumun.net/2014/08/must-known-facts-about-coffee.html

35,000 மக்கள் இணைந்து உருவாக்கிய உலகின் பெரிய கொடி . சாதனை புரிந்தது நேபாள் !! (படங்களுடன் )
http://www.satrumun.net/2014/08/nepal-makes-world-record-by-forming-human-flag-with-35000-people.html

3 வது ஒரு நாள் போட்டியின் போது உலக சாதனை படைத்த தோனி
http://www.satrumun.net/2014/08/dhoni-did-world-record.html

சளித்தொல்லைக்கு சிறந்த மருந்து கருந்துளசி
http://www.satrumun.net/2014/08/blog-post_60.html

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம் அறிவுரை ..!
http://www.satrumun.net/2014/08/blog-post_53.html

மனைவியின் தீராத செக்ஸ் வெறியால் விவாகரத்து பெற்ற கணவர்





நாம் செய்தித்தாள்களிளும் செய்திகளிளும் கட்டாயம் படிக்கும் செய்தி ஆண்களினால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள். ஆனால் இங்கே சற்று மாறாக ஒரு பெண் ஒரு ஆணை எப்படியெல்லாம் கொடுமைபடுத்தியுள்ளார் என்று தான். அந்த கொடுமைகளால் அந்த பெண்ணிடம் விவாகரத்து வாங்கிவிட்டார் அந்த கணவர்.

அந்த தம்பதிகளுக்கு ஏப்ரல் மாதம் 2012 இல் திருமணம் நடந்தது. அதில் இருந்து அந்த பெண் அவரது கணவரிடம் அதிக செக்ஸை எதிர்பார்த்து உள்ளார். கணவரும் தன்னால் முடிந்தளவு மனைவியை திருப்திபடுத்த நினைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி திருப்தியடைய வில்லை. தீவிர செக்ஸ் வெறியால் மனைவி அவளது கணவரை அதற்கான மருந்து எடுத்துக்க சொல்லி கட்டாயப் படுத்தியுள்ளார். இப்படி பல முறை கட்டாயபடுத்தி செக்ஸில் ஈடுபட வைத்துள்ளார். அவர் சம்மதிக்காவிட்டால் செக்ஸுக்காக வேறு ஆணை நோக்கி சென்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஒரு முறை அவர் வைத்து வலியால் பாதிக்கப்பட்டு அப்பண்டிஸ் ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்த நிலையில் டாக்டர் அவரை செக்ஸில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவரது மனைவி அப்போதும் விடாமல் செக்ஸில் ஈடுபடுத்தியுள்ளார். மனைவி நல்ல மனநல மருத்துவரிடம் பரிசோதிக்க நினைத்த கணவரின் முடிவுக்கு மனைவி சம்மதிக்கவில்லை.

கொடுமைகள் பொருக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் கணவர், அங்கு தான் சந்தித்த கொடுமைகளை பட்டியலிட்டுள்ளார்.வழக்கை விசாரித்த நீதிபதி அந்த ஆணுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

நீங்கள் குடிக்கும் காபியை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை





நாம் குடிக்கும் காபியை பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். காபியினால் நன்மைகளும் உள்ளது , தீமைகளும் உள்ளது.

* காபி குடித்தால் நம்மால் சுறுசுறுப்பாகசெயல்பட முடியும். ஏதாவது டென்ஷனாக இருந்தால் அந்த டென்ஷனை அது போக்கும்.

* எந்த கல்லீரல் பிரச்சனையும் வராமல் செய்யும்.

* நாம் தினமும் காபி அருந்துவதால் டைப் 2 சக்கரை நோய் வராமல் தடுக்கலாம். இதன் மூலம் சில கேன்சர்களையும் தடுக்க முடியும்.

* நமது மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். அதனால் படிக்கும் போது, மூளைக்கு வேலை தரும் செயல்களை செய்யும் போது சோர்வுற்றால் காபி தருகிறார்கள்.

* ஒரு விளையாட்டுக்கு முன் காபி அருந்துவது நம்மை சிறப்பாக செயல்பட வைக்கும். இது நமது இதயம் துடிக்கும் வேகத்தை அதன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும்.

இது போல சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் காபியில் பல விளைவுகளும் உள்ளன.

* ஒரு நாளைக்கு 5 காபிக்கு மேல் குடித்தால் அது நமக்கு வாரிசு இல்லாமல் செய்து விடும். பிரசவமாக இருக்கும் பெண்கள் கட்டாயம் காபியை தவிர்க்க வேண்டும்.

* காபி குடித்தவுடன் நமது மூளை சிறப்பாக செயல்பட்டாலும் அதன் பிறகு நமது மூளையின் செயல்பாடு குறைந்து விடும்.

* காபி குடிப்பதனால் நமது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

* ஒரு நாளைக்கு 3 காபிக்கு மேல் குடிப்பவர்களால் சரியாக தூக்கம் வராது. அவர்களது தூக்கத்தை கெடுப்பது கட்டாயம் காபியாக தான் இருக்கும்.

* காபி குடிப்பதனால் நமது இதயத்தின் செயல்பாடு குறையும். 

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் , ரசிகர்கள் போஸ்டரால் பெரும் பரபரப்பு




தல அஜித்தின் வீடு சென்னையில் உள்ள திருவான்மியூரில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று இரவு 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்த ஒருவர் தல அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும் விரைவில் அது வெடிக்க போவதாகவும் சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டார். இது குறித்து உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் அஜித் வீட்டுக்கு சென்ற போலீஸார் அங்கு தீவிர சோதனை செய்துள்ளார்கள். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சந்தேகத்துக்கு இடமாக இருப்பவர்களை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

போலீஸார் 108 க்கு போன் செய்த அந்த நபரை தேடி வருகிறார்கள். இந்நிலையில் அஜித்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபரை விரைவில் கைது செய்ய வேண்டும் என மதுரையில் அவரது ரசிகர்கள் அடித்த போஸ்டர் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஐஸ் பக்கெட் சேலஞ்சை நிறைய மக்கள் செய்ததால் தீவு ஒன்றில் தண்ணீர் தீர்ந்து போனது !!



ஐஸ் பக்கெட் சேலஞ்ச் , இந்த சேலஞ்சை தெரியாத மக்கள் கண்டிப்பாக மிக குறைவான எண்ணிக்கையில் தான் இருப்பார்கள் . குறைந்த காலத்தில் பிரபலமான இந்த சேலஞ்சை அனைவரும் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர் . ஆனால் அதன் முக்கியமான காரணமான நன்கொடை கொடுத்தார்களா என்பது சந்தேகமே . சிலர் இதைப் பொழுது போக்காக தண்ணீரை தூக்கி தலையில் ஊற்றிக் கொண்டு ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்று சொல்லுகின்றனர் .



அதேப் போன்று ஸ்காட்லாந்தில் உள்ள 135 மக்கள் வசித்து வரும் காலன்செ என்ற தீவில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் பரவ ஆரம்பித்தது . ஆர்வத்தில் மக்கள் அனைவரும் பக்கெட் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டனர் . இதனால் அந்த தீவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . தண்ணீரை சிறிது காலம் அடைத்து உள்ளனர் , இதனால் இப்போது தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர் .


மேலும் சில கடைகளில் ஐஸ் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது . 

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவதாக ரகசிய அழைப்பு விடுத்த பாஜக




70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் பாஜக 31 தொகுதிகளிளும், தனது முதல் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி 28 தொகுதிகளிளும் வெற்றி பெற்றது. கடந்த மூன்று முறையாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்  ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் ஆனார். ஆனால் இந்த ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருந்த ஒத்துழைப்பு இல்லாததால், அரவிந்த் கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். அதன் பிறகு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

இந்நிலையில் முடிந்த லோக் சபா தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ் ஒரு பேட்டி தந்துள்ளார். அதில் பாஜக கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் அவரை முதல்வராக்குவதாகவும் , அதற்காக அவர் ஆத் ஆத்மி கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ. க்களுடன் பாஜக வில் இணைந்து விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த பாஜக எம்.பி.யின் பெயரை அவர் சொல்லவில்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த படங்களில் ஆக்சனில் கலக்க இருக்கும் அழகு தேவதைகள் !!


இப்போது நடிகைகள் சினிமாவில் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள  ஏதாவது ஒரு வித்தியாசமான ரோல் ஒன்று செய்ய வேண்டும் என நினைக்கின்றனர் . எனவே பலரும் இப்போது ஹிரோக்களைப் போன்று ஆக்சனில் குதிக்க உள்ளனர் . அப்படி குதிக்க உள்ள நடிகைகள் யார் யார் என்று பார்ப்போமா :

1 ) ராணி முகர்ஜி ( மார்தானி )

தற்போது ரிலிசான மார்தானி படத்தில் போலிசாக நடித்துள்ளார் . இவர் ரவுடிகளை துரத்தி பிடித்து அடிக்கும் போலிசாக வலம் வந்துள்ளார் .




2 ) கத்ரினா கைப் ( பேங் பேங் , பாண்டோம் )

பேங் பேங் படத்தில் ஒரு ஒற்றனுடன் சேர்ந்த பின் அவர் படும் கஷ்டங்களை இவரும் அனுபவிக்கிறார் . பாண்டோமில் பாகிஸ்தானின் ரகசிய உளவாளியாக இருக்கிறார் .





3 ) பிரியங்கா சோப்ரா ( மேரி கோம் )

இந்தியாவின் பிரபல குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்ட படத்தில் பிரியங்கா மேரி கோம் ஆக நடிக்க இருக்கிறார் . படத்திற்காக பல உடற்பயிற்சிகளை மேற் கொண்டுள்ளார் .




4 ) சன்னி லியோன் ( டினா அன்ட் லோலா )

இந்த படத்தில் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ஆக்சனில் கலக்க உள்ளார் .




5 ) அனுஷ்கா ஷெட்டி ( ருத்ரமா தேவி )

இந்தியாவின் முதல் வரலாற்று 3-டி படமான இந்த படத்தில் அனுஷ்கா ராணி ருத்ரமா தேவி ஆக நடிக்க உள்ளார் .



கத்தி படத்துக்கு வந்து இருக்கும் புதிய பிரச்சனை, தீபாவளிக்கு வெளிவருமா ??




இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் கத்தி. இந்த படத்தை துப்பாக்கி படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்.  இந்த படம் தொடங்கியதில் இருந்தே இதற்கு பிரச்சனையாக தான் இருக்கிறது. முதலில் இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தமிழர்களை கொன்று குவித்த கொலைவெறி கொடூரன் ராஜபக்ஷேவுக்கு நெருங்கியவரின் நிறுவனம். அப்படிப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் படத்தை எப்படி தமிழில் அனுமதிக்கலாம், எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என மாணவர் அமைப்பு முதல் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்பு படத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளன என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் படம் வெளிவருவதற்கு முன் இது குறித்து எதுவும் சொல்ல முடியாது என நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.

இந்நிலையில் படத்துக்கு புதிய பிரச்சனை வந்துள்ளது. கத்தி படத்தின் கதை தன்னுடையது என மிச்சூர் கோபி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கத்தி படத்தின் இரண்டரை மணி நேர கதை தான் முருகதாஸிடம் கூறியதாகவும், அவருக்கு கதை பிடித்து போக முருகதாஸ் கம்பெனியில் அதனை இயக்கி விடலாம் என கூறியுள்ளார். அதற்காக கதையை சிறிது மாற்ற சொல்லியுள்ளார். அதற்காகவே கோபி ஒன்றரை வருடம் செலவிட்டுள்ளார். ஆனால் இப்போது கோபியை ஏமாற்றி விட்டு முருகதாஸ் அந்த கதையை திருடியுள்ளார் என்று கோபி நீதிமன்றத்தில் புகார் கூறியுள்ளார். அவருக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடி வருகிறார்.

நீதிபதி இருதரப்பினரையும் தங்கள் கதையை சமர்பிக்க சொல்லியுள்ளார். கோபி தரப்பு சமர்ப்பித்து விட்டது. ஆனால் முருகதாஸ் தரப்பு இன்னும் சமர்பிக்கவில்லை. ஏனென்றால் கதையை நீதிமன்றத்தில் சமர்பித்தால் படத்தின் கதை லீக் ஆகிவிடும். இது படத்தின் வெற்றியை பாதிக்கும் என பயப்படுகிறார். ஏற்கனவே பல பிரச்சனைகள் உள்ள நிலையில் இந்த புதிய பிரச்சனையால் , கத்தி படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டுள்ளார்கள்.


35,000 மக்கள் இணைந்து உருவாக்கிய உலகின் பெரிய கொடி . சாதனை புரிந்தது நேபாள் !! (படங்களுடன் )



நேபாளின் காட்மாண்டுவில் 35,000 மக்கள் சேர்ந்து நேபாள் நாட்டின் கொடியை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர் . இதற்கு முந்தைய உலக சாதனை பாகிஸ்தானின் லாகூரில் 28,957 மக்களால் செய்யப்பட்டது . அந்த சாதனை இப்போது நேபாளில் முறியடிக்கப்பட்டுள்ளது .

நேபாள் நாட்டின் கொடி மட்டும் தான் செவ்வக வடிவில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த சாதனையை செய்ய மக்கள் அனைவரும் சில கார்டுகளை கையில்  பிடித்துக் கொண்டு நின்றனர் . அவர்களிடம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப கொடியின் நிறங்களுக்கு ஏற்ற கார்டுகளை கையில் பிடிக்கச் செய்தனர் .










இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியின் போது நீங்கள் பார்த்திடாத ஆச்சரிய போட்டோ




இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது  அந்த மைதானத்தில் யுவராஜ் சிங் இருந்தது போல ஒரு போட்டோ வந்துள்ளது. இது யுவராஜ் சிங்கா அல்லது வேறு யாரோவா என்று தெரியவில்லை. இது குறித்து யுவராஜ் சிங்கிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.



சளித்தொல்லைக்கு சிறந்த மருந்து கருந்துளசி

சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது.

நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி, பல்கி, பெருகி, வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி. ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்.

3 வது ஒரு நாள் போட்டியின் போது உலக சாதனை படைத்த தோனி




சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்ஸ் எடுத்த கிரிக்கெட் வீரர் என்னும் உலக சாதனை தோனியின் கைகளுக்கு சென்றது. இங்கிலாந்துக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியின் போது இந்த சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் இந்த சாதனையை தோனியும் இலங்கை வீரர் சங்ககராவும் பகிர்ந்து வந்தார்கள்.

வீரர்   நாடுபோட்டிகள்ஸ்டம்பிங்ஸ்
மகேந்திர சிங் தோனிஇந்தியா  382131
குமார் சங்ககராஇலங்கை  563129
ரோமேஷ் குலவைத்தராஇலங்கை  238101
மொயின் கான்பாகிஸ்தான்  288 93
ஆடம் கில்கிறிஸ்ட்ஆஸ்திரேலியா  396 92

காதலை யார் முதலில் சொல்ல வேண்டும் , எப்படி சொல்ல வேண்டும் என விரும்புகின்றனர் ?? - ஆய்வின் முடிவுகள் !!



எப்போதும் காதலை முதலில் ஆண்கள் தான் வெளிப்படுத்துவர் . ஆனால் இப்போது நடந்துள்ள ஆய்வின் படி , ஆண்கள் தான் விரும்பும் பெண் முதலில் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர் .

ஷாதி.காம் நடத்திய இந்த ஆய்வில் 6,500 கல்யாணம் ஆகாத இந்திய ஆண்கள் கலந்து கொண்டனர் . அந்த ஆய்வு முடிவின் படி 63.8% ஆண்கள் காதலை பெண்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர் . அதற்கான நம்பிக்கை பெண்களிடம் இருக்கும் என்றும் நம்புகின்றனர் . மற்ற 36.2% ஆண்கள் பெண்களிடம் அந்த நம்பிக்கை இல்லை என்றும் , ஆண்கள் சொல்லுவது தான் வழக்கம் என்றும் கூறியுள்ளனர் .

மேலும் 61.2% ஆண்கள் நேராக வந்து பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர் . 21.4% ஆண்கள் போனில் காதலை சொன்னால் போதும் என்று நினைக்கின்றனர் . 9.8% வாட்ஸ்அப் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர் . மற்ற 7.6% ஆண்கள் பேஸ்புக் மூலம் சொன்னாலே போதுமானது என்றனர் .


ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம் அறிவுரை ..!


ஆசிரியர்கள் தங்கள் பணியை நேசிக்க வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தினார். இதுகுறித்து, லூதியானாவில் உள்ள சத்ய பாரதி பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட அப்துல் கலாம் பேசியதாவது:- 



”வாழ்க்கை என்ற கடலில் வழிதெரியாமல் நிற்கும் மாணவர்களை நெறிப்படுத்தி அவர்களுக்கு தகுந்த பாதையை காட்டும் கலங்கரை விளக்கமாக ஆசிரியர்கள் விளங்க வேண்டும். மாணவர்களை நாட்டுக்காக சேவை செய்ய ஊக்கப்படுத்த ஆசிரியர்களின் வாழ்க்கையையே ஒரு வாழும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாணவனை அனைத்து துறைகளிலும் வெற்றி பெற செய்யவேண்டும் என்றால் அதற்கு ஆசிரியர்கள்  முன்மாதிரியாக இருக்க வேண்டும்.” என்றார். 

இதற்காக, 11 விதிகள் கொண்ட உறுதிமொழியையும் ஆசிரியர்களுக்கு கலாம் அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, பணியை நேசித்தல், இளைய சமுதாயத்திற்கு ஊக்கம் அளித்தல் போன்றவை அதில் இடம்பெற்றது. ஆசிரியர்களிடம் உரையாற்றிய பிறகு அப்துல் கலாம் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிறகு, மாணவர்களின் படைப்புகளை கொண்டு நடத்தப்பட்ட கண்காட்சியையும் பார்வையிட்டார். 

மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை வினோதமான முறையில் செக் குடியரசில் தடுக்கின்றனர் !!



இந்தியாவில் திறந்த வெளி பல்கலைக்கழகம் போன்று திறந்த வெளி கழிப்பிடம் தான் பலருக்கு பிடித்து இருக்கிறது . அதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் என்று அறிந்து இருந்தாலும் , யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை . அதனால் இதை தடுக்க யாரும் முயற்சியும் எடுப்பதில்லை .  ஆனால் செக் குடியரசில் மக்கள் பொது இடங்களில்  சிறுநீர் கழிப்பதை தடுக்க வித்தியாசமான முறையை கையாண்டு வருகின்றனர் .

செக் குடியரசு குடிமகன் ஒருவர் இணையத்தில் அப்லோட் செய்த ஒரு போட்டோ ஒன்று இந்த முறையை தெளிவாக விளக்குகிறது . அதாவது பொது இடங்களில் யாரேனும் சிறுநீர் கழித்தால் அதனை அங்கு இருக்கும் ஒரு கேமரா வீடியோ எடுத்து உடனடியாக யு-ட்யுபில் அப்லோட் செய்துவிடும் .



ஆனால் இதை எந்த அளவுக்கு அங்கு பயன்படுத்துகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை . 

தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு ...!!

 தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார்.. என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.. ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

நாடாளுமன்ற தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது. ஆனாலும் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதனையும் அறிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா, ரஜினியை தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு, அரசியலில் குதிக்க வலியுறுத்தினார். பாஜக மேலிடம் அழுத்தம் கொடுக்க கொடுக்க ரஜினிக்கு வீட்டு தரப்பிலும் இருந்தும் சரி.. அரசியலில் குதித்தால் என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டதாம்.

அதாவது திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியதில்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்ததுதான் இதுவரை அவர் அரசியலுக்கு வராமல் இருந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இதை சுட்டிக்காட்டும் ரஜினி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அடுத்த சட்டசபை தேர்தலில் கருணாநிதி ஆக்டிவ் பாலிட்டிக்ஸில் இருக்கமாட்டார். அதனால் உங்களது தயக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு களத்துக்கு வாருங்கள் என்று சொல்கின்றனராம். அதே நேரத்தில் பாஜக அழைப்பை ஏற்று அக்கட்சியில் இணைந்துவிட வேண்டாம் என்பதும் ரஜினியிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறதாம். தனிக் கட்சி தொடங்கி பாஜக அணியில் உள்ள இதர கட்சிகள் அனைத்தையும் விட மிக மிக கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டால்தான் மரியாதையாக இருக்கும் என்பதும் ரஜினியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆலோசனையாக உள்ளது.

ரஜினிகாந்தும் இதுதான் சரியான வழியாக இருக்க முடியும் என்ற அடிப்படையில் ஆமோதித்தபடியே தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறாராம். தமிழகத்தில் ஒரு கட்சியின் எண்ணிக்கை கூடுகிறது . மக்கள் இவரை எந்த அளவிற்கு நம்புவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 

Saturday, 30 August 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news


அவன் மனைவியை நீ வைத்துக்கொள் - பேக்கரி டீலிங் டைப்பான பஞ்சாயத்து தீர்ப்பு
http://www.satrumun.net/2014/08/keep-his-wife-if-he-eloped-with-yours.html

பீச்சில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட 51 ஜோடிகளின் வீடியோ பிடிப்பட்டது - பெற்றோருக்கு தகவல்
http://www.satrumun.net/2014/08/lovers-caught-by-police.html

இந்திய கிரிக்கெட் அணியில் புதிய மாற்றம்
http://www.satrumun.net/2014/08/new-change-in-indian-team.html

எமி ஜாக்சனின் டாப்லெஸ் போட்டோக்கள் வெளியானதால் ஷங்கர் கோபம்
http://www.satrumun.net/2014/08/emmys-glamour-photo-released.html

விநாயகர் சதுர்த்தியை கலக்கிய டைரக்டர் பாலா-பூஜா ‘டீப் கிஸ்’ படங்கள்!
http://www.soundcameraaction.com/hot-news/bala-pooja-kiss/

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை திட்டி டிவிட் செய்து வம்பில் மாட்டிக் கொண்ட இயக்குநர் !!
 http://www.satrumun.net/2014/08/ram-gopal-varma-created-new-controversey-by-tweeting-against-lord-ganesha.html

"உலகம் இருக்கும் வரை கற்பழிப்புகள் இருந்து கொண்டு தான் இருக்கும் " - சர்ச்சையைக் கிளப்பியதலைவர் !!
http://www.satrumun.net/2014/08/another-bad-talk-by-tmc-leader.html

இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் - மோடி அரசின் சர்ச்சைக்குரிய கருத்து
http://www.satrumun.net/2014/08/all-indians-are-hindus.html

பிறந்தநாளுக்காக பிளைட் பிடித்து ஓடோடி வந்த விஷால்!
http://www.soundcameraaction.com/hot-news/vishal-birhtday-press-meet-news/

அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனை செய்தார் பிவி சிந்து !! வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார் !!
http://www.satrumun.net/2014/08/pv-sindhu-into-the-semis-of-word-championship-again.html

எபோலா நோயிற்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதா ??
http://www.satrumun.net/2014/08/drug-for-ebola-gives-good-result-in-laboratory.html

மத்திய ரெயில்வே அமைச்சர் மகன் மீது காதல் புகார்
http://www.satrumun.net/2014/08/central-railway-minister-son-caught-in.html

வாதாபியை வென்று தமிழ்நாட்டுக்குள் வந்த விநாயகர்.
http://www.satrumun.net/2014/08/when-ganesh-came-to-tamilnadu.html

மாபெரும் ஆன் லைன் மார்க்கெட், ஆன் லைன் விளம்பரங்கள் செய்யலாமா? அறியாத பல தகவல்கள்
http://www.satrumun.net/2014/07/online-marketing-industry-in-tamil.html

நீங்கள் எங்கே சென்றாலும் உங்கள் ஸ்மார்ட்போன் கூகுளிற்கு தெரிவித்து விடும் !!
http://www.satrumun.net/2014/08/google-tracking-us-wherever-we-go.html

ஆண் - பெண் செக்ஸ் உறவுக்கு தடைகளாக இருப்பவைகள் எவை?
http://www.satrumun.net/2014/08/what-are-hurdles-for-male-female.html

அவன் மனைவியை நீ வைத்துக்கொள் - பேக்கரி டீலிங் டைப்பான பஞ்சாயத்து தீர்ப்பு


கிராம பஞ்சாயத்துகளில் வினோதமான தீர்ப்புகள் அளிக்கப்படுவதுண்டு, அப்படி ஒரு பஞ்சாயத்தால் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பு  பரபரப்பை கிளப்பியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் ஹப்பூர் என்ற பகுதியை சேர்ந்த ஒருவரின் மனைவி அந்த கிராமத்தில் உள்ள வேறொருவருடன் ஆகஸ்ட் 3 ம் தேதி ஊரைவிட்டு ஓடிவிட்டார், இதையடுத்து காவல்நிலையத்தில் அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்தார், ஆனால் அந்த புகாரை காவல்துறை ஏற்கவில்லை, இதையடுத்து ஹப்பூர் பஞ்சாயத்தில் அந்த கணவர் முறையிட்டார்.

உன் மனைவியை அவர் இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதால் அவர் மனைவியை நீ வைத்துக்கொள் என்று பஞ்சாயத்தார் தீர்ப்பளித்ததாக அந்த கணவர் கூறினார், மேலும் ரூபாய் 10,000ம் மட்டும் ஓடிப்போன கணவரின் மனைவிக்கு இவர் தரவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்கள் என்றும் கூறினார்.

# பட் இந்த டீலிங் ரொம்ப புடிசிருக்குன்னு சொல்லிட்டாரோ அவர்?

"உலகம் இருக்கும் வரை கற்பழிப்புகள் இருந்து கொண்டு தான் இருக்கும் " - மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் !!



திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான திபக் ஹல்டார்  தனது பேச்சினால் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் . ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டபாஸ் பவுல் தனது பேச்சினால் மனித உரிமைகள் இயக்கங்களிடம் இருந்து கடுமையான கண்டனங்களை வாங்கிக் கொண்டார் .

நேற்று திபக் ஹல்டார் அளித்த பேட்டியில் , " கற்பழிப்புகள் முந்தியும் நடந்து கொண்டு இருந்தது , இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது . அது போல உலகம் இருக்கும் வரை கற்பழிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கும் மேலும் , நாங்கள் கற்பழிப்பை எப்போதும் ஆதரிக்க மாட்டோம் . ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி நினைத்தால் மற்றும் கற்பழிப்பை தடுத்து விட முடியாது  " என்றார்  .


இப்படி பேசிய அமைச்சர் மீது கட்சி தலைமையகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அல்லது மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும் .

இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் - மோடி அரசின் சர்ச்சைக்குரிய கருத்து




மோடி அரசின் அமைச்சரவையில் மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருப்பவர் நஜ்மா ஹெப்துல்லா. இவர் சமீபத்தில் தந்த ஒரு பேட்டியில் இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என கூறியுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எப்படி ஒரு அமைச்சர் பதவியில் உள்ளவர் இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்தை கூறலாம் என எதிர்ப்ப்பு கிளம்பியது. தனது கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும என பலர் கூறினார்கள். இது மோடி மீதான பார்வையையும் மாற்றம் என பலர் கூறி இருந்தார்கள்.

இது குறித்து பதிலளித்த நஜ்மா நான் இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என கூறவில்லை. அவர்கள் அனைவரையும் ஹிந்திக்கள் என்று தான் கூறினேன் . அரபு மொழியில் ஹிந்திக்கள் என்றால் இந்தியர்கள் என்று தான் அர்த்தம். தான் மதத்தை வைத்து எந்த கருத்தை கூறவில்லை என்றார்.

அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனை செய்தார் பிவி சிந்து !! வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார் !!



இந்தியாவின் முன்னனி ஷட்டில் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து உலக சேம்பியன்ஷிப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்து புதிய வரலாறு படைத்தார் .

19 வயதான இவர்  அரையிறுதிக்குள் நுழைந்து  உலகின் இரண்டு முன்னனி பேட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை செய்ய உள்ளார் . இதற்கு முன்னர் சென்ற வருடம் உலக சேம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார் .

மற்றோரு வீராங்கனையான சாய்னா நேவால் மீண்டும் ஒரு முறை காலிறுதிப் போட்டியில் வெளியேறினார் .


பீச்சில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட 51 ஜோடிகளின் வீடியோ பிடிப்பட்டது - பெற்றோருக்கு தகவல்





மும்பையில் தாதர் சிவாஜி பார்க், பாந்திரா, ஜூகு உள்ளிட்ட கடற்கரைகள் காதல் ஜோடிகளின் சொர்க்க பூமியாக திகழ்கின்றன. மாலை 3 மணியில் இருந்தே கடற்கரைக்கு படையெடுக்க தொடங்கி விடுவார்கள். அங்கு வந்தவர்கள் முதலில் பேசுகிறார்கள் , அதன் பிறகு நேரம் செல்ல செல்ல ஆபாச செயல்களில் ஈடுபடுகிறார்கள். அருகில் யார் இருந்தாலும் அவர்கள் கவலைபடுவதில்லை. இதனால் கடற்கரைக்கு வரும் பலரால் நிம்மதியாக நடமாட முடியவில்லை. குழந்தைகளை இது பாதிக்கும் வண்ணம் உள்ளது.

இது குறித்து போலீஸுக்கு பல புகார்கள் வந்துள்ளது. எனவே போலீஸார் இங்கு வந்து இவை அனைத்தையும் படம் பிடித்துள்ளனர். இதில் 51 ஜோடிகள் பிடிபட்டுள்ளனர். உடனடியாக அந்த ஜோடிகளின் பெற்றோர்களை அழைத்து இதனை காண்பித்துள்ளார்கள். அவர்களை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என எச்சரித்து அனுப்பியுள்ளார்கள்.

எபோலா நோயிற்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதா ??



உலகை உலுக்கி வரும் எபோலா நோயினை தீர்க்கும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் , கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 18 குரங்குகளின் எபோலா நோயினையும் சரி செய்தது . இது ஆராய்சியாளர்களின் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது .

இசட்-மேப் (z-map) என்னும் பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து , குரங்குகளுக்கு எபோலா நோய் தாக்கப்பட்ட மூன்று முதல் ஐந்து நாளில் கொடுக்கப்பட்டது . முக்கியமாக எபோலா நோய் அறிகுறிகள் தென்பட்டப் பிறகே மருந்து கொடுக்கப்பட்டது .

இது குறித்து ஆய்வு நடத்திய கேரி கோபிங்கர் கூறுகையில் , " இந்த ஆய்வின் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தற்கு அதிகமாகவே கிடைத்துள்ளது " என்றார் .

இந்த மருந்து மனிதர்களிடம் எந்த அளவு வேலை செய்யும் என்று தெரியவில்லை . இன்னும் சில ஆய்வுகள் முடிந்த பின்னரே மனிதர்களுக்கு பாதுகாப்பானதா என்று அறிய முடியும் . இதுவரை எபோலா நோயினால் 1,500 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் . மேலும் 20,000 மக்கள் அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

கூடிய விரைவில் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது .


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media