மத்திய அரசுப் பணியில் உள்ள சுமார் 40 ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு இடமாற்றம் செய்துள்ளது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும் உள் துறை அமைச்சக இணைச்
செயலருமான ஐ.எஸ். சஹல் இடமாற்றம் செய்யப்பட்டு, பெண்கள், குழந்தைகள்
மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.பஞ்சாபைச் சேர்ந்த திலீப் குமார் உள்துறை அமைச்சக இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா, ரஜித் புன்ஹனி, கோபால் கிருஷ்ண துவிவேதி ஆகியோரும் உள்துறை அமைச்சக இணைச் செயலர்களாக நியமிக்கப்பட்டதாக மத்திய மனிதவள மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 40 ஐஏஏஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.