இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் 2014-ஆம் ஆண்டு ஜூன் 12 முதல் 19 வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தலா ரூ.30 ஆயிரம் ஏற்கெனவே வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது இருவழி விமானப் பயணக் கட்டணம், நுழைவுக் கட்டணம், விசா கட்டணம், காப்பீட்டுக் கட்டணம், கையாளுதல் கட்டணம் போன்ற செலவினங்களுக்காக தலா ரூ.1.39 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், தங்களுக்கு மொத்த தொகையை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற எஸ். குருநாதன், பி. ராசாத்தி, சி. பூங்கொடி, கே.ஜே. அந்தோணி, கே. சாந்தமுத்துவேல், பி. படைத்தலைவன், எஸ். திருமலைக்குமார் ஆகிய ஏழு பேருக்கு நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர் எஸ்.
சுந்தரராஜ், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் வி.கே.ஜெயக்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.