செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான்
விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதன் மூலம் விண்வெளித் துறையில் இந்திய
விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
தெரிவித்தார். பெங்களூரு பீன்யாவில் அமைந்துள்ள விண்வெளி தரைக் கட்டுப்பாட்டு
மையத்தில், மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில்
செலுத்தும் பணியை புதன்கிழமை நேரில் பார்வையிட்ட பிறகு, அங்கு கூடியிருந்த
விஞ்ஞானிகளிடையே அவர் பேசியது:
செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்திய இந்திய விண்வெளி விஞ்ஞானிகளை மனதாரப் பாராட்டுகிறேன். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் விண்கலத்தைச் செலுத்தியதன் மூலம் இந்திய விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்துள்ளனர்.
உலக அளவில் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை சுற்றுப்பாதைக்குள் செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மங்கள்யான் விண்கலத் திட்டம், பெங்களூரு முதல் புவனேசுவரம் வரையிலும், ஃபரீதாபாத் முதல் ராஜ்கோட் வரையிலும் ஒட்டுமொத்த இந்தியாவின் சொந்த முயற்சியாகும். மங்கள்யான் விண்கலத்தின் வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தேன். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை போற்றுதலுக்குரியது. மேலும், பல புதிய இலக்குகள் கொண்ட சவால்களை வகுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் பணியாற்ற வேண்டும். அந்தச் சவால்களையும் இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
சாதிக்க முடியாததையும் சாதித்துக் காட்டும் திறமையை இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டுள்ளனர். நவீன இந்தியா, உலகின் குருவாக பங்களிக்க நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். விண்வெளித் திட்டங்களின் வெற்றி, பல்வேறு துறைகளில் புது வகையான பயன்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் முயற்சிகள், பொருளாதாரத்தை பலப்படுத்தவும், நமது வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவியாக உள்ளன. மங்கள்யான் வெற்றி, பல மங்களகரமான விளைவுகளை இந்தியாவில் ஏற்படுத்தவுள்ளது. ஆயிரம் மடங்கு உயர்ந்த வெற்றி: கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால், அதை நமது நாடே கொண்டாடி மகிழ்கிறது. கிரிக்கெட் வெற்றியைக் காட்டிலும், மங்கள்யான் விண்கலத்தின் வெற்றி ஆயிரம் மடங்கு உயர்வானது. நமது இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் சாதனையை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும். விஞ்ஞானிகளின் சாதனையை இந்தியா முழுவதும் கொண்டாட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விஞ்ஞானிகளின் சாதனையை கரவொலி எழுப்பிப் பாராட்ட வேண்டும் என்றார் அவர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.