கடந்த சில வாரங்களாக ஹேக்கர்கள் நடிகைகளின் நிர்வாண படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் . இந்நிலையில் ஹாரிபாட்டர் நடிகை எம்மா வாட்சன் அழுவது போன்று ஒரு படம் வைத்து யு ஆர் நெஸ்ட் !! ( நீ தான் அடுத்தது ) என்ற தலைப்பில் 4சான் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது . இந்த செய்தி EmmaYouAreNext.com என்ற இணையதளத்திற்கு எடுத்துச் சென்றது . ஏற்கனவே இந்த 4 சான் இணையதளத்தில் தான் பல நடிகைகளின் நிர்வாண படங்களை வெளியிட்டான் ஹேக்கர் .
அந்த EmmaYouAreNext.com என்ற இணையதளம் செவ்வாய்கிழமை இரவு வரை ஒரு கவுண்ட் டவுன் கடிகாரத்துடன் இருந்தது . ஆனால் இன்று rantic.com என்ற சைட்டுக்கு ரிடைரக்ட் செய்யப்பட்டது . அந்த இணையதளத்தில் அவ்வாறு வெளியிட்டது வெறும் கட்டுக்கதை என்றும் மக்களின் கவனத்தை பெறவே அவ்வாறு செய்யப்பட்டதாக கூறியது . மேலும் 4சான் இணையத்தை முடக்குவதற்காகவே அந்த திட்டம் என்றும் மேலும் நடிகைகளின் நிர்வாண படங்கள் வெளியாகாமல் தடுக்க 4சான் இணையதளம் தடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த தளத்தை முடக்க எங்களுடன் இணையுங்கள் என்றுஅந்த தளத்தில் செய்தி ஒன்று இருந்தது .
ஆனால் பல தகவல்களின்படி அந்த rantic.com இணையதளமே வெறும் புரளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது .
ஐ.நா வின் பெண்கள் நல்லெண்ண தூதுவராக இருக்கும் எம்மா வாட்சன் இவ்வாறு புரளி கிளம்புவதற்கு முன் ஆண் பெண் சம உரிமைப் பற்றி நியுயார்க்கில் பேட்டி கொடுத்து இருந்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.