சர்வ இ அபர்கோஹ் (sarv e-abarkooh) என்ற சைப்ரஸ் மரம், அபர்கொஹ் யாத் ( Abarkuh, Yazd) என்ற இடத்தில் , ஈரானில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய இயற்கை நினைவுச்சின்னம் என, ஈரான் கலாச்சார பாரம்பரிய நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மரம் 18 மீட்டர் சுற்றளவு 25 மீட்டர் உயரம் கொண்டுள்ளது இதன் காரணமாக இது ஒரு முக்கிய சுற்றுலா மையமாக உள்ளது. இந்த மரம் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகவும் பழமையான மரமாக இருக்கலாம் என கருதப்படுகிறது . உலகின் டாப் 10 பழமையான மரங்களை சீனா டெய்லி (China Daily) செய்தித்தாள் தரவரிசைப்படுத்தியுள்ளது, இதில் சர்வ இ அபர்கோஹ் (Sarv e Abarkooh), முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலகின் பழமையான மரம் மட்டும் அல்லாமல் அது வலுவான மத சித்தாந்தங்களை எடுத்துரைப்பதோடு அனைத்து ஈரானியர்கள் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. ( இந்த மரத்தை ஜோரோஸ்ட்ரியரோடு ஒப்பிட்டு கூறுவதும் உண்டு )
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.