நிலநடுக்கத்தை தடுக்க வழி இல்லை என்பதால் அது வருவதற்கு முன்னர் கண்டு பிடித்தால் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன் சிறிதளவு காப்பாற்றிவிடலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர் . அதனால் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதை கணிக்க இயந்திரங்களை உருவாக்கி வருகின்றனர் .
அது போல குஜராத் ஐஐடி மாணவர்கள் உங்கள் மொபைல் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதை கண்டு பிடிக்க சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர் . இந்த சென்சாரை உங்கள் மொபைலுடன் இணைத்து சி.எஸ்.என் இணையதளத்தில் இருந்து ஒரு அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோட் செய்தால் போதுமானது . இந்த சென்சார் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை கண்காணித்து அந்த இணையதளத்திற்கு அப்லோட் செய்யும் .
இந்த சென்சார்கள் நில நடுக்கத்தின் இடத்தை மட்டும் கண்டுபிடிக்காமல் , அந்த மொபைலை பயன்படுத்துபவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தும் அலர்ட் கொடுக்கும் . நில நடுக்கத்தின் நடுமையத்தில் இருந்து பயனர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதையும் கூறும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.