கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனை வெளியிட முடிவு செய்துள்ளது . இப்போதைக்கு அதனை ஆண்ட்ராய்ட் - எல் என்று அழைத்து வருகின்றனர் . அதன் பெயர் என்னவென்று நமக்கு தெரியவில்லை என்றாலும் அந்த தொகுப்பு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது .
கூகுள் நிறுவனம் தனது நெக்சஸ் 6 மற்றும் டேப்ளட் நெக்சஸ் 9 ஆகிய மொபைல்களை அக்டோபர் மாதம் நடுவில் வெளியிட உள்ளது . இந்த மொபைல்களில் ஆண்ட்ராய்ட் - எல் தான் இடம் பெற்று இருக்கும் . ஆனால் ஆண்ட்ராய்ட் - எல் நவம்பர் 1 ஆம் தேதி தான் வெளிவருகிறது என்பதால் அதுவரை இந்த மொபைல்கள் விற்பனைக்கு வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது .
சில புதிய மொபைல்களுக்கு இந்த அப்டேட்கள் கிடைக்கும் . மோட்டோ எஸ் , மோட்டோ ஜி ஆகிய மொபைலகளுக்கு கண்டிப்பாக கிடைக்கும் . கூகுளின் ஆண்ட்ராய்ட் - ஒன் மொபைல்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.