எப்போவாது கார் கதவை மூடாமல் போனால் விவாகரத்து ஆகும் என்று நீங்கள் நினைத்தது உண்டா ?? ஆனால் இவ்வாறு உண்மையில் சவூதி அரேபியாவில் நடந்துள்ளது . தனது மனைவி காரின் கதவை சாத்த மறுத்ததால் விவாகரத்து கேட்டுள்ளார் கணவர் .
கணவன் மனைவி இருவரும் தனது குழந்தைகளுடன் சுற்றுலா சென்று வந்தனர் . வீட்டை அடைந்தவுடன் தனது குழந்தைகளை இறக்கி விட்ட பின் கார் கதவை மூடாமல் சென்று விட்டாள் மனைவி . இதனால் கணவன் தனது மனைவியை அழைத்து கதவை மூடும்படி கேட்டுக் கொண்டார் . ஆனால் மனைவியோ அவர் கதவின் அருகில் இருப்பதால் அவரை மூடச் சொன்னார் . அவர் முடியாது எனக் கூறவே விவாதம் ஆனது , விவாகரத்து வரைச் சென்றது . மனைவி தனது அம்மா வீட்டிற்குச் சென்று விட்டார் .
மற்றவர்கள் எவ்வளவு சமாதானப் படுத்தியும் இருவரும் சமாதானம் ஆவதாக இல்லை . அந்த பெண் இது போன்ற பொறுப்பில்லாத கணவனுடன் வாழ விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார் .
கோவம் மற்றும் சிறு காரணங்களுக்காக விவாகரத்து பெறுவது இஸ்லாமியத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.