Antoine Fuqua என்ற பெயர் ஆக்ஷன் பட ப்ரியர்களின் மத்தியில் பிரபலமானது. இவர் இயக்கிய அனைத்துப் படங்களுமே ரசிக்கத்தக்கவை.
தி ரீப்ளேஸ்மெண்ட் கில்லர்ஸ், ட்ரெய்னிங் டே, டியர்ஸ் ஆஃப் சன், கிங்
ஆர்தர், ஷுட்டர், ப்ரூக்ளின் பைனஸ்ட்... எதுவுமே மோசமானவை அல்ல. கடைசியாக
இவரது இயக்கத்தில் வெளியானது, ஒலிம்பஸ் ஹேஸ் ஃபாலன்.
இந்த வாரம் இவரது தி ஈகுவலைசர் (The Equalizer) திரைப்படம் வெளியாகிறது.
படத்தில் நடித்திருப்பவர் டென்சல் வாஷிங்டன். இவர்கள் இணைந்து உருவாக்கிய
ட்ரெய்னிங் டே திரைப்படம் இன்றும் கோடம்பாக்க ஜாம்பவான்களால்
நினைவுகூரப்படும் அளவுக்கு முக்கியமானது.
அப்படத்தில் வரும் சில காட்சிகளை இயக்குனர் சரண் தனது ஜே.ஜே. சிலகுறிப்புகள் படத்தில் பயன்படுத்தியிருப்பார் (பாலியல் பலாத்காரத்துக்கு உள்படும் தாதாவின் தங்கை பூஜாவை மாதவன் காப்பாற்றுவது. தாதா மாதவனை பாத்ரூமில் வைத்து கொலை செய்ய முற்படுகையில் தனது தங்கை பூஜாவின் புகைப்படம் மாதவனிடம் இருப்பதைப் பார்த்து பூஜாவிடம் விசாரிப்பது என அந்த எபிசோட் முழுக்க ட்ரெய்னிங் டே படத்தில் வருவதுதான்).

தி ஈகுவலைசர் ஆக்ஷன் பட ப்ரியர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்பது
நிச்சயம். வரும் வெள்ளிக்கிழமை யுஎஸ்ஸில் வெளியாகும் இப்படம் அக்டோபர் 3
-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.