சிரியாவில் குர்து நகரம் ஒன்றை முற்றுகையிட்டுள்ள
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்
படைகள் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தின. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முழுவதும் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், சவூதி
அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜோர்டான் ஆகிய நாடுகளும்
பங்கேற்றன. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முற்றுகை காரணமாக 1.3 லட்சத்தும் மேற்பட்டோர்
சிரியாவிலிருந்து வெளியேறி, துருக்கிக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதிகளில் ஐ.எஸ்.ஸýக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் கூட்டுப் படையினர் இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் விமானங்கள் மூலமும், ஏவுகணைகள் மூலமும் கூட்டுப் படையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ்., அல்-காய்தா அமைப்புகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலை நாடுகளில் தாக்குதல் நிகழ்த்த திட்டம் தீட்டியுள்ள பயங்கரவாதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், ""பயங்கரவாதிகளை எதிர்ப்பதில் உலக நாடுகள் ஒன்றுபட்டு நிற்பதை இந்தத் தாக்குதல் உணர்த்துகிறது'' என்று தெரிவித்தார்.
முக்கிய அல்-காய்தா தலைவர் சாவு?
பெய்ரூட், செப். 24: சிரியாவில் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் மேற்கொண்டு வரும் தாக்குதலில் அல்-காய்தாவின் முக்கிய தலைவர் யூசஃப் அல்-துருக்கி (47) கொல்லப்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் பலியானதாகவும், அவர்களில் யூசஃப் அல்-துருக்கியும் ஒருவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலை நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.