இன்று மோடியின் " மேக் இன் இந்தியா " கேம்பேய்ன் தொடங்கப்பட்டது . ( http://www.satrumun.net/2014/09/modi-started-make-in-india-plan.html ) அந்த கூட்டத்தில் பல உலக முதலீட்டாளர்கள் மற்றும் உயர்மட்ட வணிக தலைவர்கள் கலந்து கொண்டனர் . அவர்கள் அளித்த பேச்சுகளில் முக்கியமான சிலவற்றை கீழ்க் காணலாம் .
பிரதமர் நரேந்திர மோடி
நான் நல்லாட்சி பற்றி மட்டும் பேச மாட்டேன் . பயனுள்ள மற்றும் எளிதான ஆட்சி குறித்தும் பேசுவேன்
கிழக்கில் பாருங்கள் , மேற்கில் இணையுங்கள் .
நமக்கு ஹைவேஸ் தேவைப்படுகிறது . ஐ- வேஸும் தேவைப்படுகிறது .
இந்த உலகிற்கு நமது முகவரியை சொல்லத் தேவையில்லை , இங்கு ஒவ்வொரு முலையிலும் ஒரு வாஸ்-கோடா-காமா ஒழிந்துள்ளார் .
இந்தியாவில் இருந்து எந்த தொழிலதிபரும் வெளியேறுவதை நாங்கள் விரும்புவதில்லை .
FDI என்றால் FOERIGN DIRECT INVESTMENT இல்லை FIRST DEVELOP INDIA
இது வெறும் கோஷம் அல்ல , ஒரு பணியை முடிக்க பல எண்ணங்களின் அமைப்பு .
முகேஷ் அம்பானி :
இந்தியா இது போன்ற தலைவரை பெற கொடுத்து வைத்து இருக்க வேண்டும் .அவரின் தலைமைப் பண்புகள் பல இந்தியர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது .
சைரஸ் மிஸ்ட்ரி :
டாட்டா குழுமம் பிரதமரின் இந்த முயற்சியை வரவேற்கிறது . இந்தியாவை சர்வதேச அளவில் போட்டி போட வைக்க இது தான் சரியான முயற்சி .
சந்தா கோச்சார் :
உங்களின் இந்த திட்டம் எங்களை ஊக்கம் அடைய வைத்து இருக்கிறது . இது தான் இட்நியாவின் முன்னேற்றத்திற்கு ஊந்து சக்தியாக இருக்கும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.