BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 22 May 2013

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன்


திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் மேலும் குறிப்பிட்டதாவது மரக்காணம் கலவரத்திலும் முதல்-அமைச்சரை கலைஞர் கண்டித்தது பிரச்சினையின் அடிப்படையில்தானே தவிர தேர்தல் அடிப்ப டையில் அல்ல. தேர்தலை மனதில் வைத்து பா.ம.க. இப்படிப்பட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என முதல்- அமைச்சர் கூறியுள்ளார்.

மரக்காணம் கலவரத்தில் தி.மு.க.விற்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் எழவில்லை. எங்கள் உறவில் எந்த கசப்பும் உருவாகவில்லை. உரசலோ, விரிசலோ ஏற்படவில்லை. இந்த பிரச்சினையை தேர்தல் அரசியலாக யாரும் கருதவில்லை.

#டக்ளஸ் அண்ணே, கடை ஓனரை சொல்ல சொல்லுங்க‌

ஊழலை பற்றி பேச பாஜக-க்கு அருகதை இல்லை: நாசா என்கிற நாராயணசாமி

இன்று புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த 15 நாள் ஸ்பெசலிட் அமைச்சர் நாசா என்கிற நாராயணசாமி பாஜக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் ஆகியவற்றில் காங்கிரஸ் அரசு சிக்கித் திணருவதாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசும் போது பாரதிய ஜனதா கட்சிக்கு ஊழலை பற்றி பேசு அருகதை இல்லை என தெரிவித்தார்.

#ஊழல்ல எங்க எக்ஸ்பீரியன்ஸ் என்ன, எங்க சாதனை என்ன, கிட்ட நெருங்க முடியுமா மற்றவர்களால், ஊழல் பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு சுண்டக்கா பசங்க அப்படிதான் நாசா சார்.

கீழ்பாக்கம் துப்பாக்கி விஜய்கர் கைது செய்யப்பட்டார், அவரது வீட்டில் போலிஸ் சோதனை நடைபெறுகிறது

சென்னை கீழ்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் விஜயகர் என்ற நபர் மிரட்டலில் ஈடுபட்டுள்ளதால், அந்த குடியிருப்பு வாசிகள் பீதியில் உறைந்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த விஜயகர் என்ற நபர் இன்று காலை 10 மணியளவில் சாலைக்கு வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவரது வீட்டுக்குள் மீண்டும் புகுந்து கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டுள்ளார். தன்னைத் தானே சுட்டுக் கொல்வேன் என மிரட்டியதைத் தொடர்ந்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஐபிஎல் சூதாட்டத்தில் ஆரம்பித்து சினிமா வரை ஏகப்பட்ட பிரச்சினைகளை பற்றி கூறிவருகிறார், ஆனால் கடந்த 3 மாதமாக வாடகையை தரவில்லையாம்.

இது அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் நேரடி கவரேஜ்ஜாக வெளியாகிறது



கீழ்பாக்கம் துப்பாக்கி விஜய்கர் கைது செய்யப்பட்டார், அவரது வீட்டில் போலிஸ் சோதனை நடைபெறுகிறது

காலை 10 மணியிலிருந்து ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு அலப்பறை செய்து கொண்டிருந்த விஜய்கர் கைது செய்யபட்டார். காலையிலிருந்து எல்லோரையும் டரியல் ஆக்கிய விஜய்கர் ஒரு முறை குளித்து வேறு சட்டை மாற்றியுள்ளார்.

#கீழ்பாக்கம் கேஸ்ங்கறது சரியாத்தான் இருக்கிறது.

#இவனுங்க கையில் எல்லாம் துப்பாக்கி எப்படி கிடைத்தது.

இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரான எம்.கோபாலகிருஷ்ணனுக்கு சிபிஐ நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை



இந்தியன் வங்கி தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனை நினைவிருக்கிறதா? அவருடையை பதவியின் இறுதி காலத்தில் தமிழக பத்திரிக்கைகளில் இந்தியன் வங்கி தலைவர் கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் என்று புகழ்ந்து தள்ளின, பல பள்ளிகளின் விழாக்கள் சமூக நல கிளப்புகள் விழாக்கள் தலைமையேற்பு என ஒரு சில மாதங்கள் எங்கும் கோபாலகிருஷ்ணன் மயம் தான். ஓய்வு பெறும் நேரத்திலேயே அவர் மீது பல குற்றச்சாட்டுகள் கிளம்பின, அதிலும் மறைந்த தலைவர் மூப்பனார் அவர்களின் ரெக்கமண்டேஷனில் கொடுத்த பல கடன்கள் திரும்பி வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் கிளம்பின.

ஓய்வு பெற்ற ப்பின் இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக எம்.கோபாலகிருஷ்ணன் பதவி வகித்த போது பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடாக செயல்பட்டார் என்பது புகார். அவர் மீது மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் அவர் விடுதலையானார்.

இந்த வழக்குகளில் ஒன்று அகிலம் கட்டுமான நிறுவனத்துக்கு ரூ1.75 கோடி கடன் கொடுத்தது. 1998ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணன், இந்தியன் வங்கி முன்னாள் மண்டல மேலாளர் சண்முகசுந்தரம், கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த தனசிங், ஆனந்த் பிள்ளை ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை சி.பி.ஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்விமாலதி இந்த வழக்கை விசாரித்து

எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தன்சிங்குக்கு 2 ஆண்டு சிறறத் தண்டனையும் ரூ.1.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தப்பிள்ளை இறந்து விட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

#கோபாலகிருஷ்ணனிடம் விழாக்களில் பரிசு வாங்கிய மாணவர்கள் இப்போது என்ன நினைப்பார்கள்?

Indian Bank charman M.Gopalakrishnan convicted and sentenced by chennai CBI court for one year jail

Tuesday, 21 May 2013

FLASH NEWS: புனே வாரியர்ஸ் ஐபிஎல் லிருந்து விலகல்.

ஸ்பாட் பிக்சிங் என்று ஸ்ரீசாந்த் உட்பட 3 ஆட்டகாரர்கள் கைது, மாடல் அழகிகளுடன் விடிய விடிய கூத்து என்று போய் கொண்டிருக்கும் ஐபிஎல்லில் புதிய திருப்பமாக புனே வாரியர்ஸ் அணி ஐபிஎல் லை விட்டு விலகியுள்ளது.

இந்த அணி  பேங்க் காரன்டி தவனை பணம் கட்டாததால் பிசிசிஐ எடுத்து கொண்டது. சஹாரா நிறுவனம்  10 ஆண்டுகளுக்கு 1702 கோடிக்கு புனே வாரியர்ஸ்சை வாங்கியிருந்தது

Pune Warriors India withdraw from IPL Indian Premier League

மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்திற்கும் தலா ரூபாய் 3 லட்சம் நிதி வழங்குகிறது பாமக. - அன்புமணி அறிவிப்பு

மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்திற்கும் தலா ரூபாய் 3 லட்சம் நிதி வழங்குகிறது பாமக. - அன்புமணி அறிவிப்பு

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்கச் சென்றவர்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது, இதில் இரண்டு வன்னியர்கள் கொல்லப்பட்டனர் மேலும் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்கியது ஆனால் கொல்லப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் அரசு எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி கொல்லப்பட்ட கட்சி தொண்டர்கள் இருவர் குடும்பத்திற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்போவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க. அரசால் பழி வாங்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 89 பேர் இதுவரை குண்டர் சட்டத்திலும், தேசியப்பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை செய்யப்படும் வரை இவர்களின் குடும்பத்திற்கான நிதி மற்றும் பொருள் உதவிகளை கட்சி வழங்கும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சட்ட உதவி வழங்குதல் மற்றும் அதற்கான அனைத்துச் செலவுகளையும் பாட்டாளி மக்கள் கட்சியே ஏற்றுக் கொள்ளும் என்று அறிக்கையில் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

#தொண்டர்களை கட்சி கைவிட்டால் கட்சியை தொண்டர்கள் கைவிட்டு விடுவார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்து வைத்துள்ளார் போல சின்ன டாக்டர்

ஐ-கேட் சிஈஓ பனீஷ் மூர்த்தி அதிரடி நீக்கம், பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் போர்ட் நடவடிக்கை.

ஐ-கேட் சிஈஓ பனீஷ் மூர்த்தி அதிரடி நீக்கம், பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் போர்ட் நடவடிக்கை.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்த பனீஷ் மூர்த்தி பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் 2002ல் இன்ஃப்சிஸ்லிருந்து விலக நேரிட்டது, அதன் பின் அவர் ஐ-கேட் நிறுவனத்தி சிஈஓவாக சேர்ந்தார். தற்போது ஐ-கேட் நிறுவனத்தின் போர்ட் தனியாக நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

#சிஈஓவா சேரும்போதே குற்றச்சாட்டு இருந்தது, இப்போ போய் நடவடிக்கை எடுக்க இதில் என்ன உள்குத்தோ.

பிரியாணிக்கு ஆசைப்பட்டு வாந்தி பேதி புடுங்கிருச்சே - திமுக ஆலோசனை கூட்டத்தில் நடந்த கொடுமை

பிரியாணிக்கு ஆசைப்பட்டு வாந்தி பேதி புடுங்கிருச்சே.

ஈரோட்டில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோழி பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து 82 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் நேற்று நடைபெற்றது, இதில் அதிரடி புகழ் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர், இதில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன , இதை எடுத்துச் சென்று மாலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 82 திமுகவினர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

#தொண்டர்களுக்கு கடசியில் மிஞ்சுவதே இந்த பிரியாணி லெக்பீஸ்சும் குவார்ட்டரும் தான், அதைக்கூட நல்லதா போட முடியவில்லையா?

ஐபிஎல்லை தடை செய்யாதாம் சொல்வது உச்சநீதிமன்றம்.

கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டாக இருக்க வேண்டுமாம், ஐபிஎல்லை தடை செய்யாதாம் சொல்வது உச்சநீதிமன்றம்.

சூதாட்ட புகார் காரணத்தால் மீதம் உள்ள நான்கு ஐபிஎல் ஆட்டங்களையும் நிறுத்த தடை கோரிய வழக்கை டிஸ்மிஸ் செய்தது உச்சநீதிமன்றம், மேலும் உச்ச நீதிமன்றம் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்களின் ஆட்டமாக இருக்க வேண்டியதை பிசிசிஐ உறுதிசெய்ய வேண்டும் என்றும் இது தொடர்பான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

பெட்டி, புட்டி, குட்டி புகுந்த விளையாட்டை இன்னும் எப்படி ஜென்டில்மேன்களின் விளையாட்டாக வைத்திருக்க முடியும். ஒரு வேளை ஜட்ஜ் ஷங்கர் பட ஜென்டில்மேனை சொல்றாரோ?

Monday, 20 May 2013

சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். - 15 நாள் புகழ் நாசா கோரிக்கை

சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். - 15 நாள் புகழ் நாசா கோரிக்கை

சீமானையும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும் கடுமையாக விமர்சித்து பேசிய 15 நாள் புகழ் அமைச்சர் நாராயணசாமி சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சீமான் கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதி யாஸ்மின் மாலிக்கை அழைத்து வந்து பேச செய்துள்ளார். தீவிரவாதத்தையும், பிரிவனை வாதத்தையும்தூண்டுபவர்கள் தேச துரோகிகள். சீமானை பொறுத்த வரையில் பல முறை அவர் சிறைக்கு சென்றுள்ளார். தற்போது அவர் சிறைக்கு செல்லவே விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாக உள்ளார்.

அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். நக்சலைட்டு தீவிரவாதத்தையும், அசாம் தீவிரதத்தையும் அடக்கி உள்ளோம். எங்களை பொறுத்தவரை சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களை மக்கள தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு நாசா பேசினார்.

ஐபிஎல் சூதாட்டம் ஸ்ரீசாந்ததின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

ஐபிஎல் சூதாட்டம் ஸ்ரீசாந்ததின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்கில் சிக்கியுள்ள ஸ்ரீசாந்த் பற்றி தினம் ஒரு தகவல் வெளிவருகிறது, பெண்களுடன் கும்மாளம் அடித்தார், லேப்டாப்பில் மாடல் கேர்ள்ஸ்களின் நிர்வாணப்போட்டோ உள்ளது, 2 ஜீன்ஸ் பேண்ட்டை இரண்டரஒ லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்கள் என இன்னொரு ஆட்டக்காரர் மீது புகார், இந்நிலையில் ஸ்ரீசாந்தின் விவகாரங்களை அடிப்படையாக வைத்து பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஷாஜி கைலாஷ் திரைப்படமாக எடுக்க உள்ளார்.

#ஹோட்டல் அழகிகள் ரோலுக்கு மங்காத்தா லஷ்மிராய்யும், டர்ட்டிபிக்சர்ஸ் வித்யாபாலனையும் பிக்ஸ் பண்ணுங்க ஷாஜி சார்.

#அட்மின் சாய்ஸ் லஷ்மி ராய் அண்ட் வித்யா பாலன், உங்கள் சாய்ஸ் என்ன என்று சொல்லுங்க?

Sunday, 19 May 2013

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஒரு சிறப்பு திருமணம்


மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஒரு சிறப்பு திருமணம்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தையடுத்த என்.வேடப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் -உலகுமுத்து தம்பதியினர் மகன் முத்துப்பாண்டிக்கும் (32),மதுரை தெற்கு பழங்காநத்தத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் - மகேஸ்வரி தம்பதியினர் மகள் முத்துலட்சுமிக்கும்(27) திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி சன்னதியில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இருவரும் சுமார் 3 அடி உயரம் மட்டுமே உள்ளவர்கள். முத்துலட்சுமி 9 வரையிலும், முத்துப்பாண்டி 7 வரையிலும் படித்துள்ளனர்.

இவர்களுக்கு புதூர் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், வேடப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆவுடையப்பன், மதிமுக மாநில விவசாய அணி துணை செயலர் அ.வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் இத்திருமணம் நடந்தது.

#நாமும் ஒரு லைக் போட்டு இந்த தம்பதிகளை வாழ்த்துவோம்

நன்றி நெல்லை ஆன்லைன்.காம்

ஓட்டுக்கோ படையாட்சி சாதி, டிவியிலோ சாதியில்லை முழக்கம் இது தான் முற்போக்கு


ஓட்டுக்கோ படையாட்சி சாதி, டிவியிலோ சாதியில்லை முழக்கம் இது தான் முற்போக்கு

சிதம்பரம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் பாலகிருஷ்ணன், மற்ற பல கம்யூனிஸ்ட் தோழர்களை போலவே இவரும் நல்லவர், லஞ்சம் வாங்காதவர், எம்.எல்.ஏ பதவியை வைத்து கட்டைப்பஞ்சாயத்து செய்யாதவர், அதிகார துஷ்பிரயோகம் செய்யாதவர், சொத்து சேர்க்காதவர். தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்த இருந்த அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை எதிர்த்து கடும் முயற்சிகளுக்கு பின் அண்ணாமலை பல்கலையை அரசு கையகப்படுத்த முக்கிய காரணமாக இருந்தவர், இதற்காக யாருக்கும் விலை போகாதவர்.

சமீபத்திய சாதி மோதல்கள் தொடர்பாக டிவியில் விவாதத்தில் வன்னியர்கள் சாதிவெறியோடு நடந்து கொள்கிறார்கள் என்றும் சாதியில்லை என்றும் வன்னியர் சங்கத்தையும் வன்னியர் சமூகத்தையும் கடுமையாக சாடி பேசினார்.

சென்ற தேர்தலில் இவர் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் பல இடங்களில் தோழர் பாலகிருஷ்ணன் என்று மட்டும் எழுதாமல் பாலகிருஷ்ணன் படையாட்சி (படையாட்சி என்பது வன்னியர்களை குறிப்பது) என்று அவரது சாதிப்பெயரையும் இணைத்தே சுவர் விளம்பரங்கள் எழுதி வாக்கு கேட்டனர்.

அரசியலுக்கும் ஓட்டுக்கும் சாதிப்பெயரை சொல்வது, டிவியிலும் மேடையிலும் சாதியில்லை என்று முழங்குவது எல்லா கட்சிகளுக்கும் வழக்கமாகி போய்விட்டது.

கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா?


கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா? அனுமதிபெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடியது தொடர்பாக அனைத்து மினரல் வாட்டர் நிறுவனங்களின் ஸ்ட்ரைக்.

திருட்டு விசிடி ரெய்டு நடத்தினால் சினிமாக்காரர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், போலி மருத்துவர்கள் மீது நடவடிகை எடுத்தால் ஒரிஜினல் மருத்துவர்கள் மகிழ்வார்கள் ஆனால் அனுமதி பெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடினால் ஏன் அனுமதி பெற்ற மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஏன் ஸ்ட்ரைக் செய்கின்றன? அப்படி என்றால் இதில் இவர்களின் பங்கு என்ன?

ஏற்கனவே சென்னையில் கேன் வாட்டர்களில் 30%க்கும் மேலும் பாக்கெட் வாட்டரில் 70%க்கும் மேலான தண்ணீரும் குடிப்பதற்கு கூட தகுதியில்லாத தண்ணீர்கள் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் கேன் வாட்டரை வாங்கி அதை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையில் உள்ளது. மேலும் கேன் வாட்டரை வீட்டில் புழங்குவது தற்போது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகவும் போய்விட்டது.


சாதாரண க்ளோரினேட்டட் மெட்ரோ வாட்டரை கொதிக்க வைத்து, துண்டால் வடிகட்டினாலே போதும்.. இதுவேமிக ஆரோக்கியமான குடிநீர்தான்.. இதை விடுத்து கேன் வாட்டர் மட்டும் குடித்தால்தான் உயிருடன் இருக்க முடியும் என்பது மிகப்போலியான அபத்தமான வியாபார உத்தி..என டாக்டர் அருணாசலம். இந்திய மருத்துவ சங்கம்.. தெரிவித்துள்ளார்.

மினரல் வாட்டர் நிறுவனங்களின் இந்த ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி அனைவரும் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து பயன்படுத்தி அதனால் தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து இந்த மினரல் வாட்டர் நிறுவனங்களை ஊத்தி மூட வையுங்கள்.

#தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்.

Saturday, 18 May 2013

தடையை மீறி மெரினாவில் மாணவர்கள் பேரணி, 50க்கும் மேற்பட்டோர் கைது

தடையை மீறி மெரினாவில் மாணவர்கள் பேரணி, 50க்கும் மேற்பட்டோர் கைது

இலங்கை முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவாக இன்று மெரினாவில் Students' Federation For Free Eelam அமைப்பினர் பேரணி ஏற்பாடு செய்திருந்தனர், ஆனால் இன்று பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் மாணவர் ஜோ பிரிட்டோ, தமிழ் உட்பட நிர்வாகிகளை நிகழ்ச்சியை ரத்து செய்ய கோரினர், ஆனால் இன்று மாலை  சென்னை மெரினாவில் தடையை மீறி பேரணியாக சென்ற மாணவர் கூட்டமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர் காவல்துறையினர்.

JKLF மாலிக் கலந்து கொள்ள கடலூரில் நடைபெறும் நாம் தமிழர் கூட்டம். பொதுக்கூட்டத்துக்கு தடை

ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனியின் (JKLF) முகமது யாசின் மாலிக் கலந்து கொள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெறும் நாம் தமிழர் கூட்டம். பொதுக்கூட்டத்துக்கு தடை

கடலூரில் மே18 இன எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது, இந்நிலையில் நீதிமன்றத்தில் காவல்துறை போட்ட வழக்கினால் பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டது, இன்று காலை பொதுக்கூட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கல்யாண மண்டபத்தில் உள் அரங்கில் கூட்டம் நடைபெறுகிறது இதில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனியின் (JKLF) முகமது யாசின் மாலிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாலை பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வாங்கும் பொறுட்டு கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் அமைப்பின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

#அம்மா அம்மா என்று சீமான் உருகினார், நீ போ சும்மா சும்மா என்கிறார் அம்மா


ஈழத்தமிழர் படுகொலை, காங்கிரஸ் சத்தியமூர்த்தி பவனுக்குப் பூட்டு போட 5 பேர் கைது

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2 லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்க காரணமான காங்கிரஸ் கட்சியை தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு பூட்டு போடும் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பது இந்து மக்கள் கட்சியின் அறிவித்திருந்தனர்.

 இதன்படி நேற்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் எஸ்.ஆர்.குமாரவேல் தலைமையில் 5 பேர் பூட்டுடன் சென்னை சத்தியமூர்த்தி பவன் நோக்கி சென்றனர். ஆனால் அவர்களை அண்ணாசாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.குமாரவேல், தென் சென்னை மாவட்ட செயலாளர் கே.பூபாலன், கோபிகுமார், நாராயணன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரபாகரன் படத்துக்கு தடை, கடலூரில் நாம் தமிழர் கட்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தடை, SFFE மெரினா கூட்டத்துக்கு தடை, ஒரிஜினல் முகம் காட்டும் ஈழத்தாய் ஜெயலலிதா.


பிரபாகரன் படத்துக்கு தடை, கடலூரில் நாம் தமிழர் கட்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தடை, SFFE மெரினா கூட்டத்துக்கு தடை, ஒரிஜினல் முகம் காட்டும் ஈழத்தாய் ஜெயலலிதா.

ஈழத்தமிழர்களுக்கும் புலிகளுக்கும் அதிக ஆதரவளித்த எம்ஜிஆர் காலத்து அதிமுக கட்சியும் ஆட்சியும் ஜெயலலிதா கைக்கு வந்த பின் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்தனர். 2009ல் தேர்தலின் போது மட்டும் நாங்கள் வெற்றி பெற்றால் ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்று தருவோம் என்று கூறியும் தோல்வி அடைந்தனர். அதன் பின் அமைதியாக இருந்த ஜெயலலிதாவை கருணாநிதியின் தொடர்நாடகங்களாலும் ஈழம் தொடர்பான போராட்டங்களை நேரடியாகவும், நயவஞ்சகமாகவும் நசுக்கிய கருணாநிதியினால் வெறுப்புற்றிருந்த தமிழ் ஆர்வலர் இயக்கங்கள் ஆதரித்தன.

சட்டசபையில் இலங்கைக்கு எதிரான தீர்மாணம், இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னயில் ஆட மறுப்பு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கிளம்பி மாணவர் போராட்டங்களை அதிரடியாக ஒடுக்காமல் கையாண்டது என ஜெயலலிதா அரசு சற்று ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாக  ஒரு கருத்தை உருவாக்கிய நேரத்தில் இன்றைய முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு கூட்டங்களை நடத்துபவர்களுக்கு காவல்துறையிடமிருந்து ரத்து செய்ய சொல்லு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. கடலூரில் இன்று நாம் தமிழர் கட்சி நடத்துவதாக இருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. இன்றைய கூட்டங்களில் பிரபாகரன் மற்றும் புலிகள் தொடர்பான எந்த படங்களையும் பேனரையும் அனுமதிக்காமல் நீக்க சொல்லியுள்ளது காவல்துறை.

இது ஜெயலலிதா அரசின் புதிய நிலைப்பாட்டை அல்ல பழைய நிலைப்பாட்டையே மீண்டும் எடுத்துள்ளதை காட்டுகிறது.

Students' Federation For Free Eelam இன்று மெரினா கடற்கரையில் பேரணி நிகழ்ச்சி ஏற்பாடு



இன்று மாலை நான்கு மணிக்கு Students' Federation For Free Eelam SFFE  அமைப்பின் சார்பில் இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு இன படுகொலைக்கு எதிரான பேரணி நடைபெறுகிறது. காவல்துறை அனுமதி மறுத்தால் போராட்டம் நடத்த முயன்றுள்ள நிலையில் மாணவர் ஜோ பிரிட்டோ மற்றும் ஏற்பாட்டளர்களுக்கு இந்நிகழ்ச்சியை ரத்து செய்ய சொல்லி காவல்துறையினர் மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புக்கு
ஜோ பிரிட்டோ +919751030028
தமிழ் +919790847172

புல்லுக்கட்டு முத்தம்மா கீரோயின் மினு குரியன் ஒரு லேடி பவர் ஸ்டார்.

தமிழ் திரை உலகில் பவர்ஸ்டார் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கினார், அதே லைனை பிடித்து லேடி பவர்ஸ்டாராக முனைகிறார் புல்லுக்கட்டு முத்தம்மா படத்தின் கீரோயின் மினு குரியன்

புல்லுக்கட்டை ஆடு மேய்வது போல இந்தப் படத்தில் 'கீரோயினை' வில்லன் மேய்ந்திருக்கிறாராம். அதாவது 'கீரோயின்' வாழ்க்கையில் புகுந்து விளையாடி விடுகிறாராம் வில்லன்.பிறர் பொருளை அபகரிப்பவன் தன் பொருளை இழப்பான் என்பதுதான் படத்தோட ஒன் லைன் என்கிறார் டயர‌டக்கர்.

#படங்களை பார்த்து பஞ்சரானால் கம்பெனி பொறுப்பல்ல‌

#பவர்ஸ்டாருக்கு கொடுத்த ஆதரவை இந்த லேடி பவர்ஸ்டாருக்கும் தருவீர்கள் என்றால் ஒரு லைக் போடுங்கள்.

ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டனர் மூவரும்

ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டனர் மூவரும் என போலிஸ் அறிவிப்பு

ராஜஸ்தான் ராயல் அணியின் மூன்று ஆட்டக்காரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவான் சூதாட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டு அதற்கேற்றார்போல பந்து வீசியதாக கைது செய்யப்பட்டனர். மூன்று பேரும் போலிஸ் விசாரணையில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலிஸ் அறிவித்துள்ளது.

விசாரணையில் ஒப்புக்கொள்வதெல்லாம் கோர்ட்டில் எடுபடாது என்பதால் போலிஸ் வலுவான ஆதாரங்களையும் சாட்சிகளையும் நீதிமன்றத்தில் வைக்க வேண்டும்.

#இத்தனைக்கு பிறகும் நேற்று ஐபிஎல் மேட்ச் பார்த்தோம் அல்லவா, சூதாட்டமென்ன மேலும் என்னவேண்டுமானாலும் நடக்கும்

ஈழத்தமிழர் மீதான இன அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.

2009ம் ஆண்டு இந்த நாட்களில் மே 18ம் தேதிகளில் முள்ளிவாய்க்காலில் வைத்து தமிழர்களை கொன்று குவித்த படுகொலைகள் நடந்தேறியது. சிங்கள பேரினவாத ராணுவம் பல்லாயிரம் தமிழ்மக்களையும் புலிகளின் தலைமையயும் கொடூரமாக கொன்று குவித்தது, ஆயுத உதவி, உளவு உதவி மற்றும் புலிகளை முடக்க சிங்களத்துக்கு அனைத்துவிதமான ராஜதந்திர உதவிகளையும் செய்து போரை தங்கு தடையின்றி நடத்த உதவிய காங்கிரஸ்க்கும் அதன் கூட்டணி திமுகவுக்கும்
அங்கே சிங்களவன் தமிழர்களை கொன்று குவித்த நேரத்தில் இங்கே பெரும் அளவில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை வழங்கிக்கொண்டிருந்தார்கள் தமிழர்களும்.

முள்ளிவாய்க்கால் படுகொலை முள்வேலிக்குள் முடக்கப்பட்ட எம் தமிழனத்துக்கு என்றாவது ஒருநாள் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

Friday, 17 May 2013

கும்புடு குருசாமி ஆன தலைமைச் செயலர் ஷீலா IAS



ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு வருடம் நிறைவு பெற்றதற்கு முதல்வருக்கு வாழ்த்துக்களை கூறினார் தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்.

#மிஸ்டர் ஓபிஎஸ் குட் ட்ரெயினிங்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங், நெத்திலி மீன்கள் மட்டும் தான் கைதா? சுறா மீன்கள் சிக்குமா?

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் உட்பட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்நிலையில் இன்று அணி உரிமையாளர் ஷாருக்கான்னும் போலிசால்
விசாரிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்தன, ஆனால் இதை உறுதி செய்ய இயலவில்லை. ஐபிஎல் முழுக்க சூதாட்டம் நடத்தப்படுவதாக கடும் புகார்கள் ஆரம்பத்திலிருந்தே எழுந்தன, ஐபிஎல் அணிகள் அதன் உரிமையாளர்கள் மீது பணம், ஹவாலா மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள், அணிகளை வாங்க பணம் எப்படி வந்தது என்பதில் ஆரம்பித்து பல்வேறு முறைகேடுகளின் முக்கிய இடமாக ஐபிஎல் ஆட்டங்கள் உள்ளன.

சென்னையில் 8 கேலரிகள் பாதுகாப்பற்றவை என்று அறிவித்தும் கூட ரசிகர்களின் உயிரைப்பற்றிய எந்த கவலையுமின்றி உச்சநீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்கி போட்டிகள் நடத்தின. சில நாட்களுக்கு முன் ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் 30 இலட்சம் ரூபாயை இழந்த எம்பிஏ பட்டதாரி சொந்தக்காரர் மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டி பின் போலிசில் சிக்கிவிடுவோம் என்று சிறுவனை கொலை செய்தார்.

காசு பணம் துட்டு மணி மணி என்று போய்க்கொண்டுள்ளது ஐபிஎல் இதில் சில லோக்கல் புக்கிகள், ஸ்ரீசாந்த் போன்ற ஆட்டக்காரர்கள் கைது செய்யப்பட உண்மையில் ஐபிஎல்லில் எல்லா சட்ட விரோத நடவடிக்கைகளையும் ஆட்டிவைக்கும் சுறாக்கள் தப்பிவிடுகின்றன.

இனி ஈழ அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கும் போக முடியாதா? சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது.

இனி ஈழ அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கும் போக முடியாதா? சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது.

உயிரை கையில் பிடித்துக்கொண்டு தப்பித்தால் போதுமென்று கப்பலில் கூட பயணப்பட பயப்படும் கடலில் படகிலேயே பல ஆயிரம் கிமீ பயணப்பட்டு ஆஸ்திரேலியா சென்று சேர்ந்து கொண்டிருந்த ஈழ அகதிகள் உட்பட பல நாட்டு அகதிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக படகுமூலம் நுழைபவர்களுக்கு தங்க இடமளிக்காத வகையில் பிரதமர் ஜூலியா கில்லர்ட் தலைமையிலான அரசின் பாராளுமன்றத்தில் இம்மாதிரியான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு ஈழ அகதிகளுக்கு அடுத்தபடியாக ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து அதிக அகதிகள் குடியேறுகின்றனர்.

ஜெயலலிதா அரசின் இரண்டு ஆண்டுகால ஆட்சி சாதனையா? வேதனையா?

திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தின் ஆட்சியை கண்டு வெதும்பியிருந்த தமிழக மக்கள் தங்கள் வாக்கு என்னும் ஆயுதத்தை மே 13, 2011
ல் பயன்படுத்த படுதோல்வி அடைந்தது திமுக, அதிமுக பெரும் வெற்றி பெற்று மே 16, 2011ல் ஆட்சியில் அமர்ந்தார் ஜெயலலிதா.

இரண்டாண்டுகால ஜெயலலிதா ஆட்சி சாதனையா? வேதனையா?

சமச்சீர்கல்வி குழப்பம், நூலகமாற்றம், தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியது என்பதில் ஆரம்பித்து தொடக்கத்தில் தன் ஈகோவுக்காக பல அதிருப்திகளோடு ஆரம்பித்த ஜெயலலிதா அரசு மின்வெட்டை சரி செய்யாதது என மக்களின் அதிருப்தியில் சென்றிருந்தது. ஆனாலும் மக்களுக்கு திமுக மீதிருந்த அலர்ஜி கொஞ்சம் கூட மாறவே இல்லை. இந்நிலையில் ஒரு ரூபாய் இட்லி அம்மா மெஸ், அம்மா திட்டம் என்று சில செயல்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றன.

சசி குடும்பங்களின் கொட்டம் அடங்கியது.

சன் குடும்ப டிவிகள் தவிர வேறு எதுவுமே செயல்பட முடியாமல் இருந்த நிலையில் இன்று புதியதலைமுறை, விஜய் டிவி, தந்தி டிவி, சத்யம் டிவி என பல சேனல்களும் கலக்கலாக செயல்பட ஊடக கருணாநிதி குடும்பத்தில் ஊடக சாம்ராஜ்யம் நிச்சயமாக முறியடிக்கப்பட்டுள்ளதன் பின்புலம் ஜெயலலிதா அரசே.

சமீபத்தில் நடந்த மரக்காணம் கலவரம், தர்மபுரிகலவரம் அதைத்தொடர்ந்து பாமகவினர் மீது நடத்தப்படும் கடும் நடவடிக்கைகள் பாமகவினருக்கும் வன்னியர் சமுதாய மக்களிடமும் ஜெயலலிதா மீதான அதிருப்தி ஏற்பட்டாலும் பிற சமூக மக்கள் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர்.

திமுக காலத்தில் மத்தியதர வர்கத்திற்கு பெரும் பிரச்சினையாக இருந்த நில அபகரிப்பு தற்போது குறைந்திருந்தாலும் தற்போதும் அது வேறு சிலரால் நடது கொண்டு தான் உள்ளது.

டாஸ்மாக் சாதனை வேதனை விற்பனையாக தொடர்கிறது.

காங்கிரஸ் கொடியை கிழித்தால் அடித்து விரட்டுங்கள் - கார்த்திக் சிதம்பரம் டெரர் பேச்சு.

காங்கிரஸ் முன்னாள் எம்பி அடைக்கலராஜ் படத்திறப்பு விழாவில் பேசிய கார்த்திக் சிதம்பரம்

காங்கிரஸ்காரர்கள் இனி திருச்சி ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும். திருச்சியில் காங்கிரஸ் கொடிகளை அகற்றியவர்களை அடித்து விரட்டிய பிறகு, தமிழகத்தில் எங்கேயும் ஒருவர்கூட காங்கிரஸ் கொடி, பேனர்கள் கிழிக்கவில்லை. பதிலடி கொடுத்ததால், எதிரிகள் அடங்கிவிட்டனர். இனி எங்காவது காங்கிரஸ் கொடியை அவமானப்படுத்தினால், திருச்சி பாணியில் அடித்து விரட்டுங்கள். பயப்பட வேண்டாம் என்று பேசியுள்ளார்.

#வன்முறையை தூண்டும் விதமாக பேசினால் அந்த கட்சியை தடை செய்வார்களாமே அம்மா, காங்கிரஸை தடை செய்யலாமே

Tuesday, 14 May 2013

வன்னியர் தலித் மோதலை கூர்மை படுத்தும் விகடன், இணைக்க பார்க்கும் நக்கீரன்

விகடன் VS நக்கீரன்: தொடரும் ஆரிய திராவிட யுத்தம் என்ற தலைப்பில் நாடோடி என்பவர் ஃபேஸ்புக்கில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் இங்கே

இந்தியர்கள்/தமிழர்கள், அவர் தம் நிறுவனங்கள் எல்லாமே ஏதோ ஒரு ஜாதிய/வர்க்க நலனை முன்வைத்தே இயங்குகின்றன(ர்) என்கிற அடிப்படை உண்மையை பல சமயங்களில் பெரும்பான்மையான “பொதுமக்கள்” உணர்வதில்லை. இந்திய/தமிழக ஊடகங்கள் அவர்களை அதை உணரவிடுவதில்லை.

காரணம், பெரும்பான்மை இந்திய தமிழக ஊடகங்கள் உயர்ஜாதி அல்லது உயர்தர வருவாய் கொண்ட இந்தியர்/தமிழர்ககளால் நடத்தப்படுபவை; அவர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்படுபவை. எனவே “நடுநிலை” முகமூடியில் இவர்கள் முன்னெடுப்பதெல்லாம், முழுக்க முழுக்க உயர்ஜாதிய/உயர் வருவாய் பிரிவு மக்களின் பிரச்சனைகள்; நலன்கள மட்டுமே. 

சமூகத்தின் மற்ற பிரிவு மக்களின் பிரச்சனைகளுக்காக இவர்கள் குரல் கொடுப்பதாக சொல்வதும், செயற்படுவதும், காட்டிக்கொள்வதும் இந்த ஊடகங்களின் “நடுநிலை” வேஷத்தின் நம்பகத்தன்மையை அதிகமாக்கத் தேவைப்படும் அத்தியாவசிய நடிப்பு மட்டுமே. அதில் இந்த ஊடகங்களுக்கு உளப்பூர்வமான ஈடுபாடோ, உண்மையான அக்கறையோ, தொடர்ச்சியான பார்வையோ கிஞ்சிற்றும் கிடையாது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

அதற்கான சமீபத்திய உதாரணம் தமிழ்நாட்டு அரசியலில் தற்போது தீயாய் எரியும் வன்னியர் சங்கம் நடத்திய சித்ரா பவுர்ணமி விழாவும், அதில் அவர்கள் கக்கிய ஜாதித்துவேஷம் தொடர்பான தமிழக அரசின் கைதுகளும், அதையொட்டிய களேபரங்களும். இந்த பிரச்சனையை ஒட்டி விகடன் நிறுவனம் சார்பில் ஒரு வீடியோவை தயாரித்து அவர்களின் அதிகாரப்பூர்வ இலச்சினையுடன் விகடன் இணையதளத்தில் உலவ விட்டிருக்கிறார்கள்.

சாதிதாஸ் என்கிற தமிழ் தலைப்புடனும், ஆங்கிலத்தில் “Rise & Fall of Dr.Ramadoss -Ananda vikatan” என்கிற தலைப்புடனும் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோ சுமார் ஐந்து நிமிடம் ஓடுகிறது. வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் தலைவர் மருத்துவர் ராமதாஸின் அரசியல் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை இது அலசுகிறது. ஆனால் முழுக்க முழுக்க அவரது எதிர் நிலையிலிருந்து இதை விகடன் அலசுகிறது. அந்த வீடியோவை பார்க்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று காணலாம்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=azvX3znM_TM

மேலெழுந்தவாரியாக இந்த வீடியோவை பார்க்க நேரும் யாருக்கும் ராமதாஸை கிழி கிழியென்று கிழித்துத் தொங்கப்போட்ட விகடனின் ஊடக தைரியத்தை பாராட்டத்தோன்றும். அதிலும் நீங்கள் தலித் ஆதரவாளராகவும் இருந்தீர்களானால், தலித்துகளுக்கு எதிரான ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு அன் கம்பெனியின் ஜாதிய வன்மத்துக்கு எதிராக விகடன் ஓங்கி ஒலித்திருக்கிறது என்று பூரித்து புளகாங்கிதப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

ஆனால், விகடனை இதற்காக பாராட்ட முடியுமா என்றால் இல்லை என்பதே நேர்மையான பதிலாக இருக்கமுடியும். காரணம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய அரசியல் தலைமையான ராமதாஸின் அரசியல் தவறுகளை, இப்படி தைரியமாக, எந்தவித சமரசமுமின்றி அலசிய விகடன் நிறுவனம், இந்திய அளவில் செல்வாக்கு மிக்க மடாதிபதிகளாக விளங்கிய காஞ்சி சங்கராச்சாரிகள் இரண்டுபேருமே சங்கர ராமன் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றதையோ, அவர்களின் காமக்களியாட்ட விவரங்களையோ கடந்த காலத்திலோ அல்லது அவர்கள் இந்த வழக்கிலிருந்து தப்பிக்கவேண்டி அந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் பேரம் பேசிய விவரம் சமீபத்தில் வெளியான போதோ அவர்கள் குறித்தும் இப்படி நேர்மையாக அலசியிருந்தால், ராமதாஸ் குறித்த விகடனின் தற்போதைய இந்த அலசலை நாம் எந்த தயக்கமும் இன்றி பாராட்டலாம். கொண்டாடலாம். 

ஆனால் சங்கராச்சாரியாரின் கொலை வழக்குக் கைதுகள், அப்போது வெளியான அவர்களின் காமக்களியாட்டங்களையெல்லாம் மயில் இறகால் வருடி மறைக்கப்பார்த்த வரலாற்றுக்கு சொந்தமான விகடன் நிறுவனம், இப்போது வன்னியன் ராமதாஸின் அரசியல் வீழ்ச்சியை மட்டும் கொண்டாடுவது எப்படி நடுநிலையாக இருக்கமுடியும்? இதென்ன ஊடக அறம்? தலித் ஆதரவு, வன்னியர்களின் ஜாதித்திமிர் எதிர்ப்பு என்கிற பெயரில் விகடன் நடத்தியிருப்பது கடைந்தெடுத்த பார்ப்பண ஜாதித் திமிர்பிடித்த தனிப்பட்ட தாக்குதல் தானே?

விகடன் நிறுவனம் இப்படி செய்வது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தையும் விகடன் இப்படித் தான் கையாண்டது. அதில் வடநாட்டு ஊடகங்களைவிட ஒரு படி மேலே போய் “சொல்லுங்க ராசாவே” என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவை தனிப்பட்ட முறையில் குறிவைத்து தனியாக தொடர்கட்டுரையே எழுதியது. அதில் எல்லா ஊடக அறங்களையும் புறந்தள்ளி ராசாவின் மகள் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டது, கனிமொழிக்கும் ராசாவுக்கும் கள்ளத்தொடர்பு என்று அட்டைப்படக் கட்டுரையே வெளியிட்டது. அந்த அவதூறுகள் மற்றும் ஆபாசத்தைல்லாம் தொகுத்து தனி புத்தகமாக போட்டு காசுபார்த்த, இன்னும் காசுபார்த்துக் கொண்டிருக்கும் கயமைத்தனத்தை செய்தது இந்த விகடன் நிறுவனம்.

அந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலேயே கூட, ராசாவையும், கனிமொழியையும் மட்டும் குறிவைத்து குதறிய விகடனின் ஜாதித்திமிர் பிடித்த பேனாக்கள், உண்மையிலேயே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் மலை முழுங்கி மகாதேவன்களான மாறன் சகோதரர்கள் குறித்து அடக்கியே வாசித்தனர்.

காரணம் மாறன்களின் சன் டிவியில் விகடன் நிறுவனத்தின் தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகிவருகின்றன. மாறன்களை பற்றி பேசினால் சன் டிவி வருமானம் போய் விடும் என்பது விகடனாருக்குத் தெரியும். எனவே ஆண்டிமுத்து ராசா செய்ததாக சொல்லப்பட்ட ஊழலுக்கு எதிராக ஓங்கி ஒலித்த விகடன், மாறன்கள் என்றதும் மலத்துவாரத்தை கூட கையால் பொத்திக்கொண்டது. இது தான் விகடனின் “ஊழல்” ஒழிப்பு லட்சணம். 

சரி ராமதாஸ் விஷயத்தில் ஜாதிவெறிக்கு எதிராகவும், ராசா விஷயத்தில் ஊழலுக்கு எதிராகவும் இப்படி ஓங்கிக் குரல் கொடுத்த விகடன் என்கிற ஊடக நிறுவனத்தின் பெருமைமிகு முதலாளி பி சீனிவாசன் இந்த இரண்டு விஷயங்களில் (சாதி, ஊழல்) சொந்த வாழ்க்கையில் எப்படி நடந்துகொண்டார்?

குமுதம் நிறுவனத்தில் அதன் உண்மையான முதலாளி எஸ்ஏபிக்கு, வரதராஜனின் அப்பனுக்கு எஸ்ஏபி அனுபவ பாத்தியதைக்காக தனது நிறுவனத்தில் சில பங்குகளை இலவசமாக கொடுத்தார். அந்த பங்குகளை வைத்துக்கொண்டு, எஸ்ஏபி மனைவி உள்ளிட்ட உண்மையான வாரிசுகளை ஏமாற்றி, ஒட்டுமொத்த குமுதம் நிறுவனத்தையுமே அபகரிக்கப் பார்த்த 420 பேர்வழியான குமுதம் வரதராஜனுக்கு எதிராக எஸ்ஏபியின் உண்மையான வாரிசுகள் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து காவல்துறை, வரதராஜனை கைது செய்தது.

இது விகடனின் பிரதான தொழில் எதிரியான குமுதத்தில் நடந்த முழுக்க முழுக்க உள்வீட்டு பிரச்சனை. ஆனால் விகடனின் சீனிவாசன், குமுதம் வரதராஜனுக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு ஓடோடிப்போனர். அடிப்படையில் மோசடி மற்றும் கிரிமினல் வழக்கை, ஊடக சுதந்திரம் சம்பந்தப்பட்டது என்று ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்தார். ஒருவழியாக தனது சகல செல்வாக்கையும் பயன்படுத்தி சிறைக்கு செல்லவேண்டிய குமுதம் வரதராஜனை ஜாமீனில் எடுத்தார் விகடன் சீனிவாசன்.

இந்த பிரச்சனையில் விகடன் சீனிவாசனையும், குமுதம் வரத ராஜனையும் இணைத்தவை இரண்டு. இருவரின் முதுகிலும் இருந்த பூணூல், நெற்றியில் இருந்த திருமண். இருவருக்கும் இடையில் இருந்த பார்ப்பண ஜாதிப்பற்றை தாண்டி வேறு ஒரு இணைப்புமே இல்லை. அதென்ன விகடன் முதலாளிக்கு இருக்கும் சுயஜாதிப்பற்று, வன்னியனான ராமதாஸுக்கு வந்தால் ஜாதிவெறியா? ராசா கைதானால் அது ஊழல், குமுதம் வரதராஜன் கைதானால் அது ஊடக சுதந்திரமா?

இது தான் விகடனின் ஊடக அறம்; தலித் ஆதரவு மற்றும் ஊழல் ஒழிப்பின் லட்சணம். ஆனால் பெரும்பான்மையான முற்போக்குகள், தலித் அறிவுஜீவிகள், திராவிடத் திலகங்களே கூட விகடனின் இந்த சுயஜாதி பார்ப்பண வெறி குறித்து ஒன்று தெரிந்துகொள்வதில்லை; தெரிந்தாலும் காட்டிக்கொள்வதில்லை. காரணம் அவர்கள் தரும் இலவச ஊடக விளம்பர வாய்ப்பு.

அதுமட்டுமல்ல, தற்போது தலித் ஆதரவு என்கிற பெயரில் அதிமுக அரசு ராமதாஸ் மீது எடுக்கும் சட்டவிரோதமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை பொறுப்புள்ள நடுநிலை ஊடகம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் விகடன் கண்டிக்காமல் மறைமுகமாக ஆதரிப்பதும் அதன் பார்ப்பண அணுகுமுறையின் ஒரு பகுதியாகவே பார்க்கத் தோன்றுகிறது.

தலித் ஆதரவு திடீர் சாமியாடிகளை தவிர்த்துவிட்டு இந்த பிரச்சனையை கொஞ்சம் ஆழமாக பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும். தமிழ்ச் சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் வன்னியர், தலித் ஆகிய இந்த இரு ஜாதிக்குழுமங்களுக்கு இடையிலான ஜாதிய பகையை மேலும் ஊதிவிடுவது இரு ஜாதிகளுக்குமே நல்லதல்ல.

இதில் உண்மையான அக்கறையுள்ளவர்கள் யாருமே, இந்த நெருப்பை அணைக்கவே விரும்புவார்கள். ஆனால் வன்னிய ஆதரவு என்று ஒருபக்கம் காடுவெட்டி குருவும், தலித் ஆதரவு என்கிற பெயரில் அதிமுக அரசும் செய்வது இந்த பகையை மேலும் கூர்மைப் படுத்தும் செயல்களே. இதில் விகடன் தன் பங்குக்கு ஆளும் அதிமுகவின் அரசியல் முன்னெடுப்பை ஊடகத்தில் செய்வதன் ஒரு வடிவமே இந்த காரசாரமான காணொளி.

இதே பிரச்சனையை ஒட்டி, விகடனின் போட்டி ஊடகமான நக்கீரனும் ஒரு வீடியோவை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. “அந்த நாள் வரவேண்டும்” என்கிற தலைப்பிலான இந்த வீடியோ சுமார் நான்கு நிமிடம் ஓடுகிறது. அதில் ராமதாஸும் திருமாவளவனும் அரசியலில் ஒன்றாக இருந்த உருப்படியான காலகட்டத்தையும், தற்போது இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதலையும் மாற்றி மாற்றிக் காட்டி இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்கிற கோரிக்கை விடுக்கிறது நக்கீரனின் வீடியோ. அதில் இரு தரப்பு தவறுகளையும் காட்டி, இருவரும் மீண்டும் இணைவதே ஒட்டுமொத்த நன்மை தரும் என்கிற பொது நன்மைக்கான பார்வை நக்கீரனின் வீடியோவில் வெளிப்படுகிறது.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=98966

வன்னியர், தலித் ஆகிய இரண்டு ஆடுகளை மோதவிட்டு ரத்தம் குடிக்க ஆரிய விகடனும், இரண்டு ஆடுகளும் மோதிச்சாகாதீர்கள் என்கிற கோரிக்கை விடுக்கும் திராவிட நக்கீரனுமாக தமிழ் ஊடகத்துறையின் ஆரிய திராவிட யுத்தம் தொடர்கிறது.

இதில் நாடோடியின் ஆதரவு நக்கீரனுக்கு. நீங்கள் யார் பக்கம் என்பதை உங்கள் மனசாட்சி முடிவெடுக்கட்டும்.

சுயமரியாதை கொள்கையால் காதலியை இழந்தேன் - தி.மு.க. தலைவர் கருணாநிதி

சுயமரியாதை கொள்கையால் காதலியை இழந்தேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். 

சென்னை ராயபுரம் பகுதி கட்சி பிரதிநிதி வை.நான்குட்டி இல்ல திருமண விழா வில் பேசிய கருணாநிதி ஒரு காலத்தில் சுயமரியாதை திருமணங்களை நடத்திக்கொள்ள யாரும் முன்வர மாட்டார்கள். தற்போது சுயமரியாதை திருமணங்களை நடத்த முன் வருகிறவர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே வருகிறது.

நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாமல் சுயமரியாதை திருமணம் தான் செய்துகொள்ள வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்த காரணத்தால், நான் காதலித்த பெண் எனக்கு கிடைக்காமலே போய்விட்டாள். ஆக சுயமரியாதை கொள்கைக்காக 1944ஆம் ஆண்டிலேயே காதலித்த பெண்ணை இழந்தவன் தான் நான்" என்றார்.

#தலைவரே மூன்றுக்கே தமிழ்நாடு மட்டுமல்ல மொத்த இந்தியாவுமே தாங்கலை, இதிலே நான்காவது வேறு என்றால் அய்யோ இந்த உலகமே தாங்காதே.

டாஸ்மாக்கில் ஏசி பார்

டாஸ்மாக்கில் ஏசி பார்
அரசு ஆஸ்பத்திரியில் 
இதயநோயாளி பிரிவில் ஏசி இல்லை

வாழ்க சாராயம் விற்கும் அரசு!

பிரான்சு கேன்ஸ் திரைப்பட விழாவில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்


பிரான்சு கேன்ஸ் திரைப்பட விழாவில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்!! டர்ட்டி பிக்சர்ஸ் வித்யாபாலன் நடுவராகிறார்.

கேன்ஸ் திரைப்பட விழா ஹாலிவுட்டின் ஆஸ்கார் விழாவுக்கு அடுத்த படியாக மிகுந்த வரவேற்பை பெற்ற உலக திரைப்பட விழா, இந்த விழாவில் தான் தமிழின் வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்கள் திரையிடப்பட்டன,

இந்த 66வது கேன்ஸ் (
cannes)  சர்வதேச திரைப்பட விழாவின் ஒன்பது நடுவர்களில் ஒருவராக ,The Dirty Picture  படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நடித்துக் கலக்கிய நம்மூரு நடிகை வித்யா பாலனும் கடமையாற்றப் போகிறார். அத்தோடு உலகப் பேரழகி ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன், அங்கிள் அமிதாப் பச்சன் ஆகியோருடனும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த விழாவுக்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள், அழகி போட்டியில் பங்கேற்றவர்கள், அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சிறப்பு விருந்தினர்கள், திரைப்பட துறையினர், கோடீஸ்வரர்கள் வருவார்கள்.விழாவை முன்னிட்டு அசத்தலான ஏற்பாடுகள், பாதுகாப்பு என பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக மாடலிங் ஏஜென்சி நடத்துபவர்கள் கூறுவதாவது வழக்கமாகவே கேன்ஸ் திரைப்பட விழாவின்போது விபசார தொழிலும் பெரிய அளவில் நடக்கும்.உலகம் முழுவதும் இருந்து பிரபல புள்ளிகள் வருவார்கள் என்பதால் பண புழக்கமும் அதிகளவில் நடக்கும்.

அரபு நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர்கள் சிலர் விபசாரத்துக்காகவே விழாக்களுக்கு வருவதும் உண்டு. இது கடந்த 60 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.கேன்ஸ் திரைப்பட விழாவுக்காகவே பிரான்ஸ், இங்கிலாந்து, வெனிசுலா, பிரேசில், மொராக்கோ, ரஷ்யா உள்பட பல நாடுகளில் இருந்து பாலியல் அழகிகள் வருவதாக பொலிசார் கூறுகின்றனர்

Sunday, 12 May 2013

சத்யம் தொலைக்காட்சி இரண்டாம் இடமாம்

சத்யம் தொலைக்காட்சி இரண்டாம் இடமாம்.

சத்யம் தொலைக்காட்சி GRP ரேட்டிங்கில் இரண்டாம் இடமாம்? ஜெயா ப்ளஸ்சுக்கு மூன்றாமிடமாம், சன் நியூஸ் , தந்தி டிவி எல்லாம் 7 மற்றும் 8ம் இடமாம்.

சத்யம் டிவியின் ஃபேஸ்புக் பக்கத்திலேயே போட்டிருக்கிறார்கள்

சத்யம் டிவி இரண்டாம் இடம்? இதை நீங்கள் நம்புகிறீர்களா?

மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது கலெக்டர் உத்தரவு.

மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது கலெக்டர் உத்தரவு.

வன்னியர் சங்கத்தின் மாமல்லபுரம் சித்திரை திருவிழா நடந்த போது அதற்கு சென்றவர்களுக்கும் மரக்காணக்கம் பகுதியில் உள்ளவர்களுடனும் ஏற்பட்ட கலவரத்தால்  இருவர் கொல்லப்பட்டனர், இதைத்தொடர்ந்து நடந்த பிரச்சினைகளில் டாக்டர் இராமதாஸ், காடுவெட்டி குரு உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று டாக்டர் இராமதாஸ் சிறையிலிருந்து விடுதலையானார், இந்தநிலையில் மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

#கலெக்டர் சார் முதலில் இந்த உண்மை அறியும் குழுக்களை போகக்கூடாது என்று தடை போடுங்கள், தினமும் ஒரு குழு அறிக்கை என்ற பெயரில் பீதியை கிளப்புகிறார்கள்.

நாங்க ஜெயிச்சிருந்தா தான் பாஸ் ஆச்சரியமே, கர்நாடக தேர்தல் பாஜக தோல்வி பற்றி எல்.கே.அத்வானி


நாங்க ஜெயிச்சிருந்தா தான் பாஸ் ஆச்சரியமே, கர்நாடக தேர்தல் பாஜக தோல்வி பற்றி எல்.கே.அத்வானி

நாங்கள் கர்நாடகாவில் தோல்விஅடைந்ததிற்கு வருந்துகிறேன், ஆனால் ஆச்சரியப்படவில்லை, வென்றிருந்தால் தான் அது ஆச்சரியம். கர்நாடக தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மட்டுமல்ல காங்கிரஸ்க்கும் ஒரு பாடம் தான். இரண்டு கட்சிகளுக்குமான பொதுவான பாடம் பொதுமக்களை சாதாரணமாக எடுக்க கூடாது (let’s not take the common man for granted)

ஊழல் இப்படி ஒரு ரிசல்டை பெங்களூரில் தந்திருந்தால் டெல்லியில் தராதா என்ன? என்று நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்சின் ஊழல்கள் காரணமாக தோல்வி அடையுமென்று நம்பிக்கையில் உள்ளார்.

#அத்வானி சார், நீங்களா ஜெயிக்கமாட்டீங்க, காங்கிரஸின் ஊழலைத்தான் நீங்கள் ஜெயிக்க நம்பியுள்ளார்கள்.

சற்றுமுன் செய்திகள், இனி இணையதளத்திலும்


சற்றுமுன் செய்திகள் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் செய்திகள் அளித்துக்கொண்டிருந்த நாங்கள் இனி இணையதளத்திலும் செய்திகள் அளிக்க உள்ளோம், தொடர்ந்து எங்களுடன் இணைந்திருந்து ஆதரவளியுங்கள்



எங்கள் ஃபேஸ்புக் பக்கம்
http://www.facebook.com/Satrumun

எங்கள்  டிவிட்டர் பக்கம்
http://twitter.com/Satrumun_



நன்றி
சற்றுமுன் ஆசிரியர் குழு
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media