BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 31 July 2013

தேர்தலுக்கு விளக்கமாறு சின்னம்.

ஆரம்பத்தில் அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து ஊழலுக்கு எதிராக போராடி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து அடுக்கடுக்காக காங்கிரஸ் மற்றும் பிஜெபி மீது குற்றசாட்டுகளை வீசி கொண்டிருந்தார்.

அவை அனைத்தும் விளம்பர நோக்கில் எங்கள் மீது வீசப்படும் குற்றசாட்டுகள் என இரு கட்சிகளும் சொல்லி வந்தாலும் எந்த குற்றசாட்டையும் மறுக்கவில்லை என்பது வேறு கதை

தற்பொழுது அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி தேர்தலுக்கு தங்களது சின்னமாக விளக்கமாறு சின்னம் கேட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டை சுத்தம் செய்யும் துடைப்பமாக எங்கள் கட்சி இருக்கும் என ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி வேறு அளித்துள்ளார்.

# பட்டுகுஞ்சத்தோடு ஏகப்பட்ட விளக்கமாறு பார்த்துட்டோமே!


மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ருபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது அறிந்ததே, சென்ற வாரம் 61 ருபாயை எதிர்கால வர்த்தகத்தில் கடந்த ருபாய் மீண்டும் 59 ருபாய் வரை வந்தது.

அப்போது ஏற்றிய பெட்ரோல் விலையை குறைக்க முயலாத பெட்ரோல் நிறுவனங்கள் நேற்று மீண்டும் டாலருக்கு எதிரான ருபாயின் மதிப்பு சரிந்ததை அடுத்து பெட்ரோல் விலையை .70 பைசா ஏற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை குறைந்தால் விலை குறைப்பை பற்றி யோசிக்காத அரசு, கொஞ்சம் ஏறினாலும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஆதரவாக பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது

மொத்த போக்குவரத்திற்க்கும் தற்பொழுது பெட்ரோல் மற்றும் டீசலையே நம்பியுள்ள இந்திய மக்கள் இதனால் பலமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் மற்ற பொருள்களின் விலையும் ஏறி இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் கொஞ்சமும் கவலைப்படாத மத்திய அரசு, அடுத்த வருடம் வர இருக்கும் தேர்தலில் மண்ணையே கவ்வும் என பல மத்தியதர மக்கள் பொதுவிலே பேசுவதை கேட்க முடிகிறது.

மக்களால் மக்களுக்காக அமைக்கப்படுவதே ஜனநாயக அரசு, ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களின் நலன் குறித்து எந்த அக்கறையும் காட்டுவதில்லை என்பது பல அரசியல் விமர்சகர்களின் கருத்து, இந்த போக்கு பி.ஜே.பி கட்சிக்கு ஓட்டு வங்கியாக மாறும் வாய்ப்புள்ளது என்று ஒரு தரப்பும், தேர்தல் நேரத்தில் விலை குறைப்பையும் சில சலுகைகளையும் காட்டி காங்கிரஸ் மீண்டும் வர முயற்சிக்கும் எனவும் சிலர் தகவல் தெரிவித்தனர்!

மீண்டும் பிசிசிஐ தலைவரானார் சீனுமாமா

மீண்டும் பிசிசிஐ தலைவரானார் சீனுமாமா

சீனுமாமாவின் மருமகன் குருநாதன் மெய்யப்பன் மீது ஸ்பாட்பிக்சிங் தொடர்பான புகாரை விசாரித்த பிசிசிஐ இரு நபர் குழு சீனுமாமாவின் மருமக புள்ளைக்கு க்ளீன் சர்ட்டிபிகேட் கொடுத்ததால் சீனு மாமா மீண்டும் பிசிசிஐ தலைவரானார். ஜக்மோகன் டால்மியா வகித்து வந்த இடைக்கால தலைவர் பதவி காலாவதியானது.

# சீனுவாசன்னா பொட்டு வச்சிக்கிட்டு பொங்கல் சாப்பிடுவார்னு நினைச்சிங்களா?

உத்திரபிரதேசத்தை 4 மாநிலமாக பிரிக்க மாயாவதி வலியுறுத்தல்.

உத்திரபிரதேசத்தை 4 மாநிலமாக பிரிக்க மாயாவதி வலியுறுத்தல்.

உத்திரபிரதேசத்தை பூர்வாஞ்சல், பண்டலேகாந்த், அவாத் மற்றும் மேற்கு உத்திரபிரதேசம் என 4 மாநிலங்களாக பிரிக்க கோருகிறார் உபியின் முன்னாள் முதல்வர் மாயாவதி, முன்பு உபியை சிறு மாநிலங்களாக பிரிக்க கோரிய சமாஸ்வாடி கட்சியோ தற்போது ஆட்சியில் இருப்பதால் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் உபியை பிரிக்க கோருவதை எதிர்க்கிறார்.

மத்திய அரசு தலையிட்டு உபியை பிரிக்க வேண்டும் என மாயாவதி வலியுறுத்துகிறார்.

# 4 ஸ்டேட்ல ஒரு ஸ்டேட்லயாவது சி.எம்.மா இல்லாமல போயிருவோம் என்கிற ஆசை தானே மேடம்?

பாமக போராட்டத்தால் நட்டம் டாஸ்மாக் பாமகவிடம் 20 கோடி நஷ்ட ஈடுகேட்கிறது

பாமக போராட்டத்தால் நட்டம், அரசு போக்குவரத்து துறைக்கு அடுத்து டாஸ்மாக்கும் பாமகவிடம் 20 கோடி நஷ்ட ஈடுகேட்கிறது


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை கைதுசெய்த போது ஏற்பட்ட கலவரம் போன்றவற்றால் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழங்கள், டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பா.ம.க மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாமகவின் போராட்டத்தினால் மே 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை நேரத்துக்கு திறக்க முடியவில்லை, மாலை 6 மணிக்கே மூட வேண்டியது ஏற்பட்டதால் டாஸ்மாக் தரப்பில் ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரி விக்கப்பட்டது. இதை பாமகவிடம் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட டாஸ்மாக் தரப்பு டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகையும் பெருமளவில் குறைந்ததே வியாபாரம் குறைவுக்கு காரணம் ஆகும் என்றும் குற்றம் சாட்டினார்கள்.

# 20 கோடி கொடுத்தாலும் இந்த விளம்பரம் கிடைக்காதே பாமகவுக்கு

மதுவுக்கு எதிராக மதுரையில் மூன்றாம் நாளாய் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள்

மதுவுக்கு எதிராக மதுரையில் மூன்றாம் நாளாய் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் 

மூன்றாவது நாளாக மதுரையில் ஜோ பிரிட்டோ மற்றும் நந்தினி உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

சென்னை மற்றும் கோவையில் மது கடைகள் முற்றுகை, காரைக்குடி மற்றும் தஞ்சை மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று தொடங்குகின்றனர்......

தொடர்புக்கு 9080655521,9043912494

டிஜிபி ஆபிசில் காணாமல் போன 17 ஏஎஸ்பிகளின் ஆவணங்கள்

டிஜிபி ஆபிசில் காணாமல் போன 17 ஏஎஸ்பிகளின் ஆவணங்கள்

டெபுடி ஜெனரல் ஆஃப் போலிஸ் அலுவலகத்தில் பதவி உயர்வுக்காக காத்திருந்த 17 கூடுதல் எஸ்பி களின் ஆண்டு ரகசிய ரிப்போர்ட் காணாமல் போய்விட்டது, இந்த ரிப்போர்ட்டின் படி தான் அமைச்சகம் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும், இந்த ரிப்போர்ட் காணாமல் போனதால் இந்த 17 ஏஎஸ்பிக்களுக்கும் எஸ்பி பதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

# சங்கிலி திருடர்கள் ஆந்திரா ஓடிட்டாங்க, ஆவணத்திருடர்கள் டிஜிபி ஆபிஸ்ல புகுந்துட்டாங்களா?

அதிமுக- 29 திமுக 5- தேமுதிக- 2 தொகுதிகள்: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

நாடாளுமன்ற‌ தேர்தல் கருத்து கணிப்பு: அதிமுக- 29 திமுக 5- தேமுதிக- 2 தொகுதிகள்: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கட்சிகள் வெல்லக்கூடிய இடங்கள் என டைம்ஸ் நவ் கருத்துகணிப்பு முடிவுகள்

அதிமுக - 29
திமுக  - 5
தேமுதிக  - 2
காங்கிரஸ் - 1

2009 நாடாளுமன்ற‌ தேர்தலின் போதும் கூட திமுக கூட்டணி படுதோல்வி என்று இதே போன்றே கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன, ஆனால் முடிவுகள் வேறு மாதிரி அமைந்தது.

# காங்கிரஸ் ஜெயிக்க போகும்னு சொல்கிற அந்த ஒரு தொகுதி எது?

மோடி பிரதமர் வேட்பாளர் இல்லையென்றாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை - நித்திஷ்குமார்.

மோடி பிரதமர் வேட்பாளர் இல்லையென்றாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை - நித்திஷ்குமார்.

மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்ப்பில் பாஜக கூட்டணியை விட்டு விலகிய பீகார் முதல்வர் நித்திஷ்குமார் மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வில்லையென்றாலும் கூட மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர இயலாது என்று கூறியுள்ளார்.

# கிளிக்கு றெக்கை மொளச்சிருச்சோ, பறந்து போயிருச்சி

Tuesday, 30 July 2013

கனகா இறந்துவிட்டதாக செய்தி வெளியானது தவறு, தவறான செய்திக்கு மன்னிப்பை கோருகிறது சற்றுமுன் செய்திகள்.

கனகா இறந்துவிட்டதாக செய்தி வெளியானது தவறு, தவறான செய்திக்கு மன்னிப்பை கோருகிறது சற்றுமுன் செய்திகள்.

நடிகை கனகா இறந்ததாக கிடைத்த செய்தியை அடுத்து நமது சினிமா தொடர்புகளில் விசாரித்த போது இறந்த செய்தி உண்மை என்று கிடைத்ததை அடுத்து நாம் செய்திகளில் வெளியிட்டோம், ஆனால் தற்போது கனகா உயிருடன் நிருபர்கள் முன் தோன்றியுள்ளார். கனகா இறந்து விட்டதாக தவறான செய்தியை வெளி இட்டதற்காக சற்றுமுன் செய்திகள் நடிகை கனகாவிடமும் வாசகர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறது.

இனி இம்மாதிரியான தவறு நிகழாது என்று உறுதியளிக்கிறோம்


கனகா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று வேண்டுகிறோம்

நடிகர் சாந்தனு ரசிகையை அவரது பெயரில் மோசடி செய்து பணம் பறித்த இளைஞர் கைது

நடிகர் சாந்தனு ரசிகையை அவரது பெயரில் மோசடி செய்து பணம் பறித்த இளைஞர் கைது

நடிகர் சாந்தனு சில வாரங்களுக்கு முன் போலிஸ் கமிஷனர் இடம் தன் பெயரில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்து ஒருவர் தனது ரசிகைகளையும் ரசிகர்களையும் ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக புகார் அளித்தார், இது தொடர்பாக விசாரித்த போலிஸ் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ரியாஸ்கான் என்ற 22 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். சாந்தனு போல ஃபேஸ்பூக்கில் சாட்டிங் செய்து தான் பணக்கஷ்டத்தில் இருப்பதால் 10,000 கொடுக்கவும் என்று கேட்டு ஒரு ரசிகையை மோசடி செய்துள்ளார்.

# ஃபேக் ஐட்க்களே உஷார் உஷார்

ராயல தெலுங்கான அறிவிப்பு இன்றிரவு? மாநிலம் முழுதும் துணை ராணுவப்படை குவிப்பு. ஐதராபாத் யூனியன் பிரதேசமாகிறதா?

ராயல தெலுங்கான அறிவிப்பு இன்றிரவு? மாநிலம் முழுதும் துணை ராணுவப்படை குவிப்பு. ஐதராபாத் யூனியன் பிரதேசமாகிறதா?

தனித்தெலுங்கானா கோரி நடந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்கும் நேரத்தில் காங்கிரஸ் தன் கட்சி நலனுக்காக தனது கட்சிக்கு செல்வாக்கு கிடைக்க வேண்டும் என்று தெலுங்கானாவை சேர்ந்த 10 மாவட்டங்களுடன் ராயலசீமாவை சேர்ந்த 2 மாவட்டங்களையும் இணைத்து 12 மாவட்டங்கள் கொண்ட ராயல தெலுங்கானா என்று அமைக்க முடிவெடுத்துள்ளது, இதை கடுமையாக எதிர்க்கின்றனர் தெலுங்கானா அமைய போராடியவர்கள், இதற்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தெலுங்கானாவில் இணைக்க கோரும் பிரச்சினைக்குறிய ஐதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக மாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது, யாருக்கும் திருப்தி இல்லாத தால் இது போன்று பிரித்தால் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதால் அதை கட்டுப்படுத்த மாநிலம் முழுவது துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

# காங்கிரஸ் கட்சியின் சுயநலத்துக்கு அளவே இல்லை போல

ஸ்பென்சர் பிளாசாவில் கீழே குதித்து வாலிபர் மரணம், It is just for Fun என்று தெரிவித்ததால் அதிர்ச்சி

ஸ்பென்சர் பிளாசாவில் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர் மரணம், It is just for Fun என்று தெரிவித்ததால் அதிர்ச்சி

சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுண்டன்ட்டாக வேலை பார்த்து வந்தவர் கிஷோர்குமார் (வயது 27).காலை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவிற்கு அவர் வந்தார்.அவர் திடீரென 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார், கடுமையான காயங்களுடன் இருந்தவரை மருத்துவமனையில் சேர்த்த போதும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இவரது செயல்குறித்து அவர் காயம்பட்டிருந்த போது காவலர்கள் விசாரித்தபோது இட் ஈஸ் ஜஸ்ட் ஃபர் ஃபன் என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தொடர்பின்றி உளறியுள்ளார், தலையில் பலமாக அடிபட்ட நிலையில் உள்ளவர்கள் உளறுவது எப்போதும் நடக்ககூடியதே என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Monday, 29 July 2013

தீவிரமாகும் கூர்க்காலேண்ட் போராட்டம், வாய்தா மேல் வாய்தா நீதிமன்றத்தில் கழுத்தை அறுத்துக்கொண்டவர், மேலும் செய்திகள்

தெலுங்கானாவை அடுத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க முழு அடைப்புப் போராட்டம் 

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா உருவாக்குவது போல மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை கூர்க்காலாந்து தனி மாநிலமாக அமைக்க வலியுறுத்தி 72 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங்கை சுற்றிய மலைப் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது 20 ஆண்டு கால கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களில் முன்பு பலர் உயிரிழந்துள்ளனர், ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான உருவாகப்போவது உறுதியான கட்டத்தில் கூர்க்காலாந்து கோரிக்கை வலுத்துள்ளது.
-----------------
வாய்தா மேல் வாய்தா , சென்னை உயர்நீதிமன்றத்தில் தொண்டையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்ற இளைஞர்

எம்.பாலசுப்ரணமியம் என்ற 30 வயது இளைஞர் 4 ஆண்டுகளுக்கு முன் மோட்டார் சைக்கிளில் ஒருவரை மோதி விபத்துக்குள்ளான வழக்கு இழுத்துக்கொண்டே சென்றதால் சம்பவ தினத்தன்றும் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதால் தன் தொண்டையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறையில் மேற்கொண்டுள்ளார், மயங்கி விழுந்தவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இவர் தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூரில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் மனநல பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்துவருவதாகவும் மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

# இவரென்ன அரசியல்வாதியா? வாய்தா மேல் வாய்தா வாங்க?

தீவிரவாதிகளை சுட வக்கில்லாத போலிஸ் சிறுவனை சுட்டு கொன்றுள்ளது - கரண் பாண்டேவின் தாய்

தீவிரவாதிகளை சுட வக்கில்லாத போலிஸ் சிறுவனை சுட்டு கொன்றுள்ளது - கரண் பாண்டேவின் தாய்

பாராளுமன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள சாலையில் பைக் ரேஸ் மேற்கொண்ட 30 இளைஞர்களை நிறுத்தும் பொறுட்டு போலிஸ் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கரண் பாண்டே என்ற இருவது வயது இளைஞர் கொல்லப்பட்டார், இதை விமர்சித்த அவரது தாய் மஞ்சு தீவிரவாதிகளையும் கிரிமினல்களையும் சுட வக்கில்லாத போலிஸ் இந்த சிறுவனை சுட்டு கொன்றுள்ளது என்றும் இதற்கு காரணமான போலிஸ்காரரை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்

மணல் மாஃபியாவை எதிர்த்த ஐஏஎஸ் அதிகாரி பொய்குற்றச்சாட்டில் சஸ்பெண்ட்

மணல் மாஃபியாவை எதிர்த்த ஐஏஎஸ் அதிகாரி பொய்குற்றச்சாட்டில் சஸ்பெண்ட்

துர்கா சக்தி நாக்பல் என்ற சப்-டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட்டை சஸ்பெண்ட் செய்துள்ளது அகிலேஷ் யாதவின் உத்திர பிரதேச அரசு. சட்டத்துக்கு புறம்பாக அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்ட மசூதியின் கட்டடப்பணியை நிறுத்த சொன்னதும் அதை இடிக்க சொன்னதும் ரம்ஜான் மாதத்தில் சமூக அமைதியை குலைக்கும் செயல் என்று கூறி அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஆனால் துர்கா சக்தி நாக்பல் என்ற இந்த ஐஏஎஸ் பெண் அதிகாரி கிரேட்டர் நொய்டா பகுதியில் இயங்கி வந்த சட்டத்துக்கு புறம்பான மணல் கொள்ளைகளை தடுத்து வந்துள்ளார், 300க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை மடக்கி பிடித்துள்ளார். இதனால் கோபமடைந்த மணல் மாஃபியா தான் இதை செய்துள்ளது என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

எதிர்கட்சி பாஜகவினர் மற்றும் மேலும் பலர் நல்ல அதிகாரிகளை அவமானப்படுத்தும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

# இருக்கிற ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளையும் இம்மாதிரி தண்டிக்கிறார்கள்.

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி, தொடரை வென்றது இந்தியா, இந்த ஆண்டின் 4 வது தொடர் வெற்றி

ஏற்கனவே ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் 2 ஒரு நாள் போட்டிகளில் வென்றிருந்த இந்திய அணி ஹராரேயில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியிலும் வென்றது. இதன் மூலம் 5 போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளையும் வென்றும் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி ஜிம்பாப்வேயை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஜிம்பாப்வே அணி 46 ஓவர்களில் 183 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 35.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

இந்திய அணிக்கு இது வெற்றி ஆண்டாக உள்ளது இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர், சாம்பியன்ஸ் கோப்பை, மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு தொடர் ஆகியவற்றிலும் இந்தியா வென்றுள்ளது, இது நான்காவது வெற்றியாகும்.

# ஆல் தி பெஸ் டீம் இந்தியா

India won the series against Zimbabwe cricket team 

Sunday, 28 July 2013

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் - சீனுமாமா மருமக புள்ளை மெய்யப்பனை ரொம்ப நல்லவர்னு சொல்லிட்டாங்க பிசிசிஐ



ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னை கிங்ஸ் சீனுமாமாவின் மருமகன் குருநாதன் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ந் ஓனர்களில் ஒருவரும் ஷில்பா ஷெட்டியின் கணவரனுமான ராஜ் குந்த்ரா ஆகியோரு ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பிசிசிஐ யின் இரண்டு நபர் விசாரணை குழு அறிவித்துள்ளது.

# முதல்ல சென்னை போலிஸ், அப்புறம் ப்ளைட்ல போய் மும்பை போலிஸ் அப்புறம் திகார்ல, இவ்வளவையும் தாங்கிக்கிட்டு ஏன் இருக்கேன் தெரியுமா , பிசிசிஐ ல 2 பேர் என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்



BCCI probe clears Raj Kundra, Gurunath Meiyappan of involvement in IPL spot-fixing

மோடிக்கு விசா வழங்க கூடாது என்று 65 எம்பிகள் போட்ட கையெழுத்து ஒரிஜினல் தான் -அமெரிக்கா அறிவிப்பு

மோடிக்கு விசா வழங்க கூடாது என்று 65 எம்பிகள் போட்ட கையெழுத்து ஒரிஜினல் தான் -அமெரிக்கா அறிவிப்பு

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசா வழங்கக் கூடாது என வலியுறுத்தி இந்திய எம்.பி.க்கள் 65 பேர் கையெழுத்திட்டு அனுப்பியதாககூறப்பட்டது, இந்த கடிதத்தில் கையெழுத்து இட்ட பல எம்பி கள் தாங்கள் கையெழுத்து இடவில்லை என்று கூறினர், தமிழகத்திலும் கூட திமுக எம்பி கேபி ராமலிங்கம் தான் கையெழுத்து இடவில்லை என்று கூறினார், மோடிக்கு விசா கொடுக்க கூடாது என்று திமுக எம்பிகள் கையெழுத்து இட்டிருந்தால் திமுக நடவடிக்கை எடுக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் தான் கையெழுத்து இட்டதாக ஒத்துக்கொண்டார்.

இந்நிலையில் இந்த கடிதத்தில் உள்ள 65 எம்பிகள் கையெழுத்துகள் உண்மையானவைதான் என அமெரிக்கத் தடயவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

# திமுக எம்பி கேபிராமலிங்கம் மீது நடவடிக்கை எப்போது தலைவரே?

போட்டோ டூன்: திமுக மாணவரணியா? முதியோர் பள்ளியா?

போட்டோ டூன்:

பெரும்பாலான‌ கட்சிகளில் மாணவர் அணி, இளைஞர் அணி என்று சொன்னாலும் அதன் பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லாம் முதியோர் அணி தான், திமுக இளைஞர் அணி தலைவர் ஸ்டாலினுக்கு 60 வயதுக்கு மேல், திமுக மாணவரணி தலைவர் இள.புகழேந்திக்கோ 50 வயதுக்கும் மேல். சமீபத்தில் கொல்லப்பட்ட அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளருக்கு வயதோ 52.

அரியானா மாநிலத்தில் காதல் பிரச்னையால் 15 வயது சிறுவன் அடித்து கொலை

அரியானா மாநிலத்தில் காதல் பிரச்னையால் 15 வயது சிறுவன் அடித்து கொலை

அரியானா மாநிலம் ஃபாரிதாபாத்தில் ராகுல் என்ற 15 வயது சிறுவன், வேறொரு சாதியை சேர்ந்த 18 வயது பெண்ணை காதலித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்த 11 பேர் கொண்ட கும்பல் 15வயது சிறுவனை இரும்பு தடியால் அடித்து கொலை செய்ததாக பெண்ணின் குடும்பத்தார் மீது சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

# நம்ம ஊரில் இதுவே நடந்திருந்தா ஒருத்தர் "நாடக காதல்"னும் , இன்னொருத்தர் "புனித காதல்"னும் அடித்துக்கொண்டு சாதிக்கலவரத்தை உண்டாக்கியிருப்பார்கள். டிவி, மீடியாவில் எல்லாம் 10 பேர் விவாதம் செய்திருப்பார்கள்.

கும்பகோணம் டிரஸ்ட் பார்த்த கும்பகோணம் வேலை, 100 கோடி சொத்தை 1.81 கோடிக்கு விற்ற வழக்கு

125 ஆண்டு கால கும்பகோணம் டிரஸ்ட் பார்த்த கும்பகோணம் வேலை, 100 கோடி சொத்தை 1.81 கோடிக்கு விற்ற வழக்கு சில சுவராசியமான தகவல்கள்

சமூக ஆர்வலர் ராமன் செட்டியார் அவர்கள் அரண்மனை ராமன் செட்டியார் ஆனந்தம் டிரஸ்ட் 1887ல் 5.06 ஏக்கர் நிலத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது, அதன் இன்றைய சந்தை மதிப்பு நூறு கோடி ரூபாய் ஆகும். 2002ம் ஆண்டு டிரஸ்டின் அனைத்து அசையா சொத்துக்களையும் தனியாருக்கு விற்று அந்த பணத்தை கொண்டு டிரஸ்ட்டை நடத்துவது என டிரஸ்ட் பொறுப்பாளர்களால் முடிவு செய்யப்பட்டு இதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.

சொத்தை விற்று கிடைக்கும் பணத்தை தேசிய வங்கியில் டெப்பாசிட் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தின் பேரில் நீதிமன்றம் 2003 ஜனவரியில் அனுமதியளித்தது, இதன் பின் தான் கும்பகோணம் டிரஸ்ட்டின் கும்பகோண வேலை ஆரம்பித்தது.

சொத்தை விற்க கொடுத்த ஏலத்தில் 16 பேர் கலந்து கொண்டனர், குறைந்த பட்ச ஏலத்தொகை மார்க்கெட் நிலவரப்படி கூறப்பட்டிருக்க வேண்டும், ஆனால் குறைந்த பட்ச ஏலத்தொகை எதுவுமில்லாமல் ஏலம் கொடுக்கப்பட்டது அதில் ஏலத்தை எடுத்தவர்  1.86 கோடிக்கு எடுத்தார், அதில் முதல் தவணையான 25லட்சத்தை கட்ட அவர் 6 மாதம் எடுத்துக்கொண்டார், மீதி 1.56 கோடியை 5 ஆண்டுகளில் அளித்தார்.

ஏலத்தில் எடுக்கப்படும் தொகையின் 15% பணத்தை உடனடியாக கட்டவேண்டும் என்பதும் மீதி பணத்தை 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்பதும் விதி ஆனால் முதல் தவணைக்கே 6 மாதமும் மீதப்பணத்தை கட்ட 5 ஆண்டுகளும் எடுத்துக்கொண்ட இந்த  விற்பனை முறைகேட்ட‌ எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்த போது இந்த விற்பனையை அங்கீகரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த பணத்திற்கு 5 ஆண்டுகளுக்கு 6% வட்டியை மட்டும் கூடுதலாக  கட்ட சொன்னது.

இதையும் எதிர்த்து தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.தமிழரசன் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

# நல்ல வாயன் சம்பாதித்ததை நாற வாயன் சாப்பிடுவது இது தானோ?

என்னாச்சி? அல்சமீர் நோய், 2ஜி விவகாரம் தயாளு அம்மாளை பரிசோதித்தது டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் குழு



அல்சமீர் நோய், 2ஜி விவகாரம் தயாளு அம்மாளை பரிசோதித்தது டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் குழு

தனக்கு ஞாபக மறதி நோய் இருப்பதால் 2ஜி வழக்கின் விசாரணையில் சாட்சி ஆக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கோரிய மனுவின் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று எய்ம்ஸ் மருத்துவக்குழு தயாளு அம்மாளை பரிசோதித்தார்கள், இக்குழுவின் அறிக்கை நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டு பின் நீதிமன்றம் தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கப்படுமா என்று முடிவு செய்யப்படும்

# என்னாச்சி? டிவி ஆரம்பிச்சோம், 200 கோடி வந்துச்சா! 2ஜி பணமா? கோர்ட்டுக்கு போகனுமா? அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை.

டில்லி பாராளுமன்றம் அருகில் பைக்கில் ஸ்டண்ட் அடித்தவர்கள் போலிசால் சுட்டுக்கொலை, ஒருவர் சாவு, ஒருவர் காயம்

டில்லி பாராளுமன்றம் அருகில் பைக்கில் ஸ்டண்ட் அடித்தவர்கள் போலிசால் சுட்டுக்கொலை, ஒருவர் சாவு, ஒருவர் காயம்

காலை 2.30 மணி அளவில் பாராளுமன்ற கட்டிடம் அருகில் உள்ள விண்ட்சர் லேன் பகுதியில் 30 பைக்குகளில் சிலர் வேகமாக ரேஸ் நடத்தியுள்ளனர், இது குறித்து புதுடில்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும் போலிஸ் வேன் அங்கு விரைந்தது, அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர், இன்னொரு இடத்தில் இந்த ஸ்டண்ட் க்ரூப் மற்றொரு போலிஸ் வேனால் அடையாளம் காணப்பட்டது, அவர்களை போலிஸ் நிறுத்த சொன்னபோது நிறுத்தாமல் போலிஸ் வேன் மீது கல்லால் தாக்குதல் நடத்தினர், இதைத்தொடர்ந்து போலிஸ் வானில் ஒரு முறையும் சக்கரத்தை நோக்கி ஒரு முறையும் சுட்டதில் தவறுதலாக கரண் பாண்டே என்பவர் மீது குண்டு பட்டு இறந்துவிட்டார், அவர் உட்கார்ந்திருந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிய புனித் சர்மாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

# போலிஸ் ஸ்டோரி?


one person shot dead by police near parliament in delhi  

Saturday, 27 July 2013

கொலைகாரன்பேட்டை தெருவுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர்

கொலைகாரன்பேட்டை தெருவுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் வைக்க மாநகராட்சியில் தீர்மானம்

ராயப்பேட்டை பகுதியில் உள்ள கொலைகாரன் பேட்டை என்ற இடம் முன்பு கொள்ளுக்காரன்பேட்டை என்று வழங்கப்பட்டது அதுவே பின்னாளில் கொலைகாரன்பேட்டை என்று மருவியது, இந்த பெயரை மாற்றி கொலைகாரன் பேட்டை ஜெயலலிதா நகர் என பெயர் மாற்றப்பட்டது.

# இதையே பின்பற்றி தமிழ்நாட்டையும் அம்மா நாடு என்று மாற்றிவிட சட்டமன்றத்தில் தீர்மாணம் கொண்டு வந்துவிடுவார்களே!

kolaikaran pettai name changed to Jayalalitha nagar

பவர்ஸ்டாரை மிஞ்சும் கனிமொழி கருணாநிதி

பவர்ஸ்டாரை மிஞ்சும் கனிமொழி கருணாநிதி

காமெடி போஸ்டர்கள் அடிப்பதில் கருணாநிதி, ஜெயலலிதா, அழகிரி, ஸ்டாலின், விஜயகாந்த் மற்றும் பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அடிபொடிகள் தான் இது வரை பவர்ஸ்டாரை மிஞ்சிக்கொண்டிருந்தன, அந்த லிஸ்ட்டில் தற்போது கனிமொழி கருணாநிதி அவர்களும் இணைந்துள்ளார்.

# காசு பணம் துட்டு கனி கனி

வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க கோரிய நால்வர் வழக்கு

வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க கோரிய நால்வர் வழக்கு

கடந்த 1999 ஆம் ஆண்டு கண்ணிவெடி தாக்குதல் நடத்தியதாக வீரப்பன் மூத்த சகோதரர் உட்பட நால்வர் கைது செய்யபட்டனர் முதற்கட்ட விசாரணையில் அவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது, பின் 2004 ஆம் ஆண்டு மேல் மனுவிசாரணையில் நால்வருக்கும் தூக்கு தண்டனையாக மாற்றப்பட்டது.

மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் பலரின் முயற்சியில் மீண்டும் அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளார்கள்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 26 விசாரணைக்கு வரும் என தெரிய வருகிறது!

பொதுசொத்துக்கு சேதம் விளைவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள், மந்திரிகளை ஜெயலலிதா நீக்குவாரா? டாக்டர் ராமதாஸ் கேள்வி

பொதுசொத்துக்கு சேதம் விளைவித்த 16 அதிமுக எம்.எல்.ஏக்கள் 2 மந்திரிகளை முதல்வர் ஜெயலலிதா நீக்குவாரா? டாக்டர் ராமதாஸ் கேள்வி

டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டவுடன் நடைபெற்ற போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உடைக்கப்பட்டன, சில பேருந்துகள் முழுதாக தீவைத்து கொளுத்தப்பட்டன, இதைத்தொடர்ந்து பாமகவிடமிருந்து சேதமடைந்த பொது சொத்துக்களுக்கான பணத்தை பெறப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார், மேலும் பாமகவுக்கும் டாக்டர் ராமதாஸ்க்கும் இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு சரமாரியாக சம்மன்கள் அனுப்பப்பட்டன. இந்த அறிவிப்பு பொதுமக்களிடத்திலும் பாமகவுக்கு எதிர் நிலை கொண்டவர்களிடமும் பெருத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்ட டாக்டர் ராமதாஸ் அதிமுகவின் 16 எம்.எல்.ஏக்கள் பெயர்களை வெளியிட்டு இவர்கள் மீது பொது சொத்தை நாசம் செய்த வழக்கு உள்ளது என்றும் இதில் ஓ.பி.எஸ் உட்பட 5 பேர் அமைச்சர்களாக உள்ளனர், 2 பேர் முன்னாள் அமைச்சர்கள். இவர்கள் மீது ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுத்து இவர்களை பதவி நீக்கம் செய்யுமா என்றும் "கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் கடமை ஆகும்" என்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா இதற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார். மேலும் பொது சொத்தை நாசம் செய்த வழக்கு உள்ளா 16 எம்.எல்.ஏக்கள் மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்ய வேண்டும் என்றும்  கூறியுள்ளார்.

# டாக்டர் சார், தர்மபுரி பஸ்சை கொளுத்தி 3 மாணவிகள் கொல்லப்பட்டார்களே அது பற்றி உங்க அறிக்கையில் ஒன்றுமே சொல்லலையே.

நியூஸ் பிட்ஸ்: சட்டவிரோத செயல்கள் அரவிந்தர் ஆசிரமம் புதுவை அரசு வசமாகிறது, தனித்தெலுங்கான சோனியா சம்மதம், 28 ரூபாய் பணக்காரர்கள் கபில் சிபல் விமர்சனம்

சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது குறித்த புகார். அரவிந்தர் ஆசிரமம் புதுவை அரசு வசமாகிறது

ஆசிரமம் என்றாலே அழிச்சாட்டியம் நடைபெறுவது எழுதப்படாத விதியாக உள்ளது, புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் வெளி உலகிற்கு மேன்மையானதாகவும் ஆன்மீகமானதாகவும் தெரிந்தாலும் புதுச்சேரி மக்களும் அரசியல்வாதிகளும் அரவிந்தர் ஆசிரமத்தின் மீது 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர், அரவிந்தர் ஆசிரமத்தின் மதில்களுக்கு பின்னால் நடப்பது எதுவும் மக்களுக்கோ அரசுக்கோ தெரிவதில்லை, அரவிந்தர் ஆசிரமத்தின் மீது அடிக்கடி செக்ஸ் குற்றச்சாட்டுகளும், கொலை குற்றச்சாட்டுகளையும் பொதுமக்களும் புதுச்சேரி ஊடகங்களும் எழுப்புவார்கள். வெள்ளுடை உடுத்தி புதுச்சேரியில் காணப்படும் ஆசிரமவாசிகளை உள்ளூர் மக்கள் ஒருவித எரிச்சலுடனே பார்ப்பார்கள்.

ஆசிரமம் தொடங்கியதிலிருந்தே வங்காளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதாலும் உள்ளூர் மக்களும் அரசியல்வாதிகளும் இங்கே நிர்வாகங்களில் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் இந்த குற்றச்சாட்டுகளை வேண்டும் என்றே இந்த குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்றும் ஆசிரமம் தரப்பில் கூறப்படுகிறது.

என்றாலும் சில பிரச்சினைகளில் புதுவை போலிஸ் சில குற்றங்கள் தொடர்பாக ஆசிரமத்தில் நுழைந்த நிலையும் உண்டு, தற்போது இப்பிரச்சினை சட்டசபையில் எதிரொலித்துள்ளது புதுச்சேரி சட்டசபையில் அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார் கூறினர். மேலும் அரசே அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வாகிக்க அரசு அதிகாரிகளை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சட்டத் துறையிடம் ஆலோசனை கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

# சிடி எதுவும் கிடைத்தால் ரிலீஸ் செய்வார்களா?

------------
தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க காங்கிரஸ் தலைமை சம்மதம், ஆந்திர காங்கிரஸ் அதிர்ச்சி

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்ட தலைவர் குழு தனி தெலுங்கான மாநிலம் உருவாக்க சோனியா ஆதரவு அளித்ததாகவும் இது குறித்து ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் விவாதித்து அவர்களை சம்மதிக்க வைக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது.

ஆந்திர காங்கிரஸ் சோனியாவின் தனி தெலுங்கான ஆதரவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். ஆனால் தனி தெலுங்கான உருவாவது உறுதியாகிவிட்டது என்றும் அறிவிப்பு எப்போது என்பது மட்டுமே பாக்கி.

------------
28 ரூபாய் பணக்காரர்கள், திட்டகமிஷனை விமர்சித்த‌ அமைச்சர் கபில் சிபல்

கிராமப்புறங்களில் 28 ரூபாயும் நகரங்களில் 33 ரூபாயும் ஒரு நாளைக்கு உணவுக்கு செலவிட முடிந்தவர்கள் ஏழைகள் எல்ல என்று திட்ட கமிஷன் தெரிவித்திருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது, 5 பேர் கொண்ட குடும்பம் எப்படி வெறும் 5000 ரூபாயில் ஒரு மாதத்திற்கு வாழ முடியும் என்று தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

# நீங்களே சொல்வீங்களாம், நீங்களே திட்டுவிங்களாம் என்னா டெக்னிக் இது?

Friday, 26 July 2013

இளவரசன் கடைசி நிமிடங்களில் பேசிய நண்பர்கள், ஐஐடி அப்பாயிண்ட்மெண்ட்கள் சிபிஐ விசாரணை

ஐஐடி சென்னையில் 1995முதல் 2000 வரை வேலை நியமணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

அனைத்து தகுதிகளும் இருந்தும் பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் ஐஐடியில் அசிஸ்டெண்ட் புரொபசராக இருக்கும் வசந்தா அவர்கள், தகுதியற்றவர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட்டும் பதவி உயர்வும் வழங்கிய ஐஐடி சென்னை நிர்வாகம் அவருக்கு வழங்கவில்லை என்றும் சாதி ரீதியான ஒதுக்குதலுக்கு உள்ளானார் என்றும் குற்றம் சாட்டி மனு செய்திருந்தார், இதை விசாரித்த நீதிமன்ற இவ்வாறு உத்தரவிட்டது.


# ஐஐடி மானம் கப்பலேறுது.

---------
தற்கொலை செய்து கொண்டு இறப்பதற்கு முன் இரு நண்பர்களிடம் பேசிய தர்மபுரி இளவரசன்.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இளவரசன் சென்னையில் இருக்கும் ஒரு நண்பரிடமும் சித்தூரில் இருக்கும் ஒரு நண்பரிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். இவர்கள் இருவரிடமும் தனியாக விடப்பட்டது குறித்து ஆற்றாமையையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருந்திய அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இருவரிடமும் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சித்தூர் நண்பர் கார்த்திக் மற்றும் சென்னை நண்பர் மனோஜ் குமார் இருவரும் இது குறித்து ஜூடிசியல் மேஜிஸ்ட்ரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதில் மனோஜ்குமார் தெரிவித்ததாவது திவ்யாவை தாலி இல்லாமல் கோர்ட்டில் பார்த்ததும் திவ்யா தனது சகோதரருடன் சிரித்து பேசிக்கொண்டு கோர்ட்டிலிருந்து சென்றதும் தன்னை மிகவும் பாதித்ததாக இளவரசன் கூறியதாக கூறியுள்ளார்.

இரண்டாவது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் இளவரசன் டார்ச்சர் செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லையென்றும் கணமான இரும்பு பொருள் மண்டையில் தாக்கியதால் இறந்துள்ளார் என்றும் உடலில் கைமுறிவு தவிர வேறு காயங்கள் இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது. ஓடும் இரயில் தாக்கியதால் இவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, 25 July 2013

தர்மபுரி திவ்யா கவுன்சிலிங், மோடி யுஎஸ் விசா, அமிர்த்தியா சென் பாரத ரத்னாவை பறிக்க கோரிக்கை, திருடி ஹீரோவானவர் மேலும் பல செய்திகள்

தெளிவான எதிர்கால சிந்தனையோ,மீண்டும், படிப்பை தொடர விரும்பும் தர்மபுரி திவ்யா - கவுன்சிலிங் செய்த டாக்டர்கள் அறிக்கை

தர்மபுரி திவ்யா இளவரசனுடன் செய்து கொண்ட திருமணத்தை தொடர்ந்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார், இதையடுத்து ஏற்பட்ட கலவரம் திவ்யா இளவரசனை பிரிதல் என பல திருப்பங்களுக்கிடையே இளவரசன் தற்கொலை செய்து கொண்டார், இதையடுத்து நீதிமன்ற ஆணைப்படி திவ்யா மற்றும் குடும்பத்தினருக்கு கவுன்சிலிங் மேற்கொண்ட டாக்டர்கள் திவ்யா தன் நர்சிங் படிப்பை மீண்டும் தொடர விரும்புவதாகவும், எதிர்காலம் பற்றிய, உறுதியான எண்ணத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கவுன்சிலிங் அளித்த டாக்டர்கள் குழு சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

# பெண்கள் நல்ல மன உறுதியுடன் தெளிவாக உள்ளார்கள், ஆண்கள் தான் மன உறுதியற்று தற்கொலை செய்துகொள்கிறார்கள்

--------
மோடி பிரதமர் ஆக தகுதி இல்லாதவர் என்று விமர்சித்த அமிர்தியா சென்னின் பாரத ரத்னாவை பறிக்க கோருகிறது பாஜக‌

நோபல் பரிசு வென்றவரும் பாரத ரத்னாவுமான அமிர்தியா சென் மோடியின் மதவாத செயல்களினால் மோடி பிரதமர் ஆக தகுதி இல்லாதவர் என்று விமர்சித்திருந்தார் இதனால் கோபமடைந்த பாஜக அவரின் பாரத ரத்னா விருதை பறிக்க வேண்டுமென்று விமர்சித்திருந்தது, சுப்ரமணிய சாமி அமிர்த்தியா சென் இந்தியரே அல்ல என்று விமர்சித்திருந்தார், ஆனால் இதற்கு பதிலளித்த அமிர்த்தியா சென் இந்திய குடிமகனான தனக்கு எந்த மாதிரியான பிரதமர் வேண்டும் என்று கருத்து சொல்ல உரிமை உண்டு என்றும், மோடி பிரதமராக தகுதி இல்லை என்று கூறியதால் காங்கிரஸ் அரசை ஆதரிப்பது ஆகாது என்றும் அதே சமயம் இது மோடிக்கு எதிரான கருத்து மட்டும் தான் பாஜகவுக்கு எதிரானது அல்ல என்றும் தன் கருத்துக்கு வருந்தப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

# சபாஷ் டாக்டர் அமிர்த்தியா சென், மோடிக்கு குஜராத் முதல்வர் பதவியே அதிகம், இதில் பிரதமர் பதவி வேறா?

------------
செக்ஸ் குற்றச்சாட்டுக்குள்ளான சன் நியூஸ் டிவி முன்னாள் தலைமை அதிகாரி ராஜா தந்தி டிவியில் பணியில் சேருகிறார்.

சன் நியூஸ் ரீடர் அகிலா என்பவர் சன் நியூஸ் அதிகாரி ராஜா மீது செக்ஸ்க்கு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டி போலிசில் புகார் அளித்தார், அதைத்தொடர்ந்து ராஜா கைது செய்யப்பட்டார். தற்போது சன் நியூசை விட்டு வெளியேறி தந்தி டிவியில் நல்ல சம்பளத்தில் ராஜா வேலைக்கு சேரப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

# அங்கே போயாவது அடக்கமா இருங்க ராசா

-------------
ஹீரோ ஆசையில் கொள்ளையடித்து அந்த பணத்தை கொடுத்து நடிக்க வந்த வெண்ணிலா கபடி குழு நடிகர் கைது.

வெண்ணிலா கபடிக்குழுவில் துணை நடிகராக நடித்த செந்தில் குபேரன் விடலைப்பட்டாளம் என்ற படத்தின் நாயகனாகும் வாய்ப்புக்காக 20 இலட்சம் ரூபாயை கொள்ளையடித்து கொடுத்துள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 10 இலட்சம் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டன.

# கொள்ளையடிச்சு மக்கள் மனசை கொள்ளையடிக்க பார்த்திருக்கார்

---------------
நரேந்திரமோடி விசா அப்ளை செய்தால் பரிசீலிக்கப்படும் - அமெரிக்கா அறிவிப்பு

நரேந்திரமோடி அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தால் அமெரிக்க குடியேற்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவரது விசா விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

# என்னாங்கடா சொல்றீங்க? இப்ப தருவிங்களா? தரமாட்டீங்களா?

மோடி 70% ஃபேக் டிவிட்டர் ஐடி, வாலி இறப்பு கருணாநிதி அரசியல் மேலும் பல செய்திகள்

நரேந்திரமோடி விசா அப்ளை செய்தால் பரிசீலிக்கப்படும் - அமெரிக்கா அறிவிப்பு

நரேந்திரமோடி அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தால் அமெரிக்க குடியேற்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவரது விசா விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

# என்னாங்கடா சொல்றீங்க? இப்ப தருவிங்களா? தரமாட்டீங்களா?
--------
மோடி டிவிட்டர் ஐடி ஃபாலோயர்ஸ் 70% ஃபேக் ஐடி, 23% இன் ஆக்டிவ் ஐடி

மோடியின் டிவிட்டர் அக்கவுண்ட்டை 18 இலட்சம் பேருக்கும் மேல் ஃபாலோ செய்கிறார்கள் அதில் 70% ஃபேக் ஐடி, 23% இன் ஆக்டிவ் ஐடி என்றும் வெறும் 7% மட்டுமே உண்மையான ஐடிகள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

# எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு?
----------
புதிதாக பிறந்த இங்கிலாந்து இளவரசரின் பெயர் ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் தம்பதிகளுக்கு கடந்த 22ம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் 22 ம் தேதி இங்கிலாந்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் வெள்ளி நாணயம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

# நம்ம ஊர் அரசியல்வாதிங்க குடும்பத்தில் வரும் ஒரு ஒரு வாரிசுக்கும் இப்படி கொடுத்தால் கொள்ளையடித்த பணமாவது கரையுமே
---------
ரெங்கநாயகி என்று பாடிய வாலிக்கு அதிமுகவிலிருந்து யாரும் அஞ்சலி செலுத்தலையே - கருணாநிதி

# என்னடா தலைவர் இன்னும் எழவு வீட்டில் அரசியல் செய்யலையே என்று நினைத்தோம், செய்துட்டார்

Wednesday, 24 July 2013

நியூஸ் பிட்ஸ்: சல்மான்கான் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு, ரூபாய் நோட்டுகளை எறிந்த திமுகவினர், மோடி விசா கையெழுத்து மறுக்கும் திமுக எம்பி, மேலும் பல செய்திகள்

தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் மீது மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு

சல்மான்கான் 2002-ஆம் ஆண்டு தாறுமாறாக கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர்  மரணமடைந்தார், நால்வர் படுகாயம் அடைந்தார்கள். இந்த விபத்து தொடர்பான வழக்கில்   திட்டமிட்டு மரணத்தை விளைவித்தல், கவனக்குறைவாக காயங்களை ஏற்படுத்துவது, சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது என்பன உட்பட 5 பிரிவுகளின் கீழ் சல்மான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் நடிகர் சல்மான் கானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்
-------------
பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்பட்ட கெட்டுப்போன முட்டைகள் எம்.எல்.ஏ கோபம்

@சிவசங்கர் எஸ்.எஸ் சட்டமன்ற உறுப்பினரின் ஃபேஸ்புக் மெசேஜ் கடைசி கமெண்ட் உட்பட

மஜ்ஹருல் உலூம் தொடக்க பள்ளியில் முட்டை சப்ளை செய்யப்பட்ட போது வேனில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதை கவனித்த பெற்றோர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 1,600 முட்டைகளையும் பரிசோதித்தபோது அனைத்து முட்டைகளும் கரிய நிறத்தில் இருப்பதை கண்டு முட்டைகளை உடைத்து பார்த்ததில் புழுக்கள் நெளிந்தன.

வேலூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன, இந்த பள்ளிகளில் சப்ளை செய்யப்பட்ட முட்டைகளையும் பரிசோதித்ததில் அவை அழுகி இருந்ததை பார்த்து பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சுமார் 1 லட்சம் முட்டைகள் அழிக்கப்பட்டது. முட்டையை பரிசோதனை செய்யாமல் பள்ளிகளுக்கு அனுப்பிவைத்துள்ளதால் இந்த நிலை.

கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முட்டை சப்ளையில் மாற்றம் செய்தது குறித்து தளபதி ஸ்டாலின் அவர்கள் பேசிய போது “இது எதிர்காலத்தில் பிரச்சினையாகும்” என்ற போது அக்கா வலர்மதி பொங்கி எழுந்தார். இப்போ என்ன சொல்வார் ?

# யோவ், இதெல்லாம் ஒரு பிரச்சினையா ? நாங்க கலைஞரை இன்னும் திட்டி முடிக்கலய்யா (அக்கா சொல்லும்) !
-----------
தினமும் 27 ரூபாய் சம்பாதிப்பவர் ஏழை அல்ல - மத்திய திட்டக்குழு அறிக்கை.

# ம்ம்கும்.... ஏற்கனவே சம்பளத்தை ஏத்த மாட்டகறாங்க இதுல இவனுங்க வேற
via @Suresh Kutti
-------------
மு.க.ஸ்டாலின் வரவேற்பில் ரூபாய் நோட்டு மழை பொழிந்த திமுக பொறுப்பாளர்.

தேனி புதூர் பிரிவு அருகே மு.க.ஸ்டாலின் வரும்போது தேவதானப்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஸ்டாலின் ரகு என்பவர் தான் வைத்திருந்த 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளை கார் மீது தூவி வரவேற்றார்.

அப்போது உடனிருந்த திமுகவினர் உரத்த குரல் எழுப்பி உற்சாகமாக கைத்தட்டியதுடன், அந்த ரூபாய் நோட்டுக்களை சேகரித்தனர்.


# கூட்டம் சேர்க்க என்னா டெக்னிக்குய்யா...
காசு, பணம், துட்டு, மணி மணி
---------------
மோடிக்கு விசா தரக்கூடாது என்று எந்த ஒரு கடிதத்திலும் நான் கையெழுத்து இடவில்லை - திமுக எம்.பி. கேபி ராமலிங்கம் சொன்னதாக API News

65 எம்பிகளின் கையெழுத்தையும் சற்றுமுன் செய்திகள் முந்தைய செய்தியில் வெளியிட்டிருந்தது, தற்போது கேபிராமலிங்கம் கையெழுத்து இருக்கும் பகுதியை மட்டும் ஒட்டி வெளியிடுகிறோம்.

# இந்த படத்தில் இருக்கும் கையெழுத்து உங்க கையெழுத்து இல்லைங்கறீங்களா?

போலி வக்கீல்களிடம் ஏமாறாமல் இருக்க ஒரு இணையதளம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், www.barcounciloftamilnadupuducherry.com என்ற புதிதாக ஒரு இணையதளத்தை தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தை கடந்த 20–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தொடங்கி வைத்துள்ளார்.

வக்கீல்கள் பெயர், பிறந்த தேதி, வக்கீலாக பதிவு செய்த நாள், தற்போது எந்த கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுகிறார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.

பொதுமக்கள் ஒரு வக்கீல் குறித்து விவரங்கள் அனைத்தும் இந்த இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் போலி வக்கீல்களிடம் வழக்கினை கொடுத்து பொதுமக்கள் ஏமாறாத நிலை உருவாகும்.



நியூஸ்பிட்ஸ் : மோடிக்கு விசா தராதே 65 எம்பிகள் கையெழுத்து, இந்தியாவில் தீவிரவாதம் காரணம் பாஜக, மதிய உணவு சாவுகள் நித்திஷ் மீது வழக்கு

மோடிக்கு விசா தராதே, ஒபாமாவுக்கு லெட்டர் போட்ட எம்பிகள்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா கிடைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அமெரிக்காவில் லாபி செய்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு செக் வைப்பது போல காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 12 கட்சிகளின் 65 எம்.பி.க்களோ மோடிக்கு விசாவை தரவே கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 40 ராஜ்யசபா எம்பிகளும் 25 லோக்சபா எம்பிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

திமுகவின் கே.பி. ராமலிங்கம், காங்கிரஸின் ராமசுப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் போன்ற தமிழக எம்பிகளும் கையெழுத்திட்டுள்ளனர்

# எங்க ஊருக்கு விசிட் அடிக்க கூடாதுன்னு நீங்க சொல்ற மோடி உங்க ஊரில் முதல்வரா இருக்காரே என்று சொன்னாலும் எங்கே போய் முகத்தை வைப்பார்கள் இவர்கள்?

# தலைவர் பாஜகவோடு கூட்டணி வைத்துவிட்டால் கையெழுத்து போட்ட திமுக எம்பியும் திருமாவும் என்ன செய்வீர்கள்?


------------
பூச்சிக்கொல்லி மருந்து கலந்த மதிய உணவு சாப்பிட்டு 23 குழந்தைகள் பலியானதை அடுத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய சாப்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
------------
அத்வானியின் ரத யாத்திரையால்தான் இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

# நீங்க காடு மலையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று பழங்குடிகளை துரத்திக்கொண்டிருக்கிறீர்களே, அதனால் எல்லாம் தீவிரவாதம் அதிகரிக்க வில்லையா?

--------------

Tuesday, 23 July 2013

நியூஸ் பிட்ஸ்: இண்டெர்நெட் மணி ஆர்டர், சரவண பவனில் இன்கம் டாக்ஸ் ரெய்டு, நித்திஷ்குமார் புத்தி பேதலித்துவிட்டது, கூடங்குளம் நோ வாபஸ்

இண்டெர்நெட் மணி ஆர்டர் - 10 நிமிடத்தில் பணம் சென்று சேரும் சேவையை தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மணி ஆர்டரில் பணம் அனுப்பினால் 2-3 நாட்களிலும் தந்தி மணி ஆர்டர் அதை விட சற்று விரைவாகவும் பணம் சென்று சேரும், வெஸ்டர்ன் யூனியர் போன்ற சேவைகள் மூலம் வெளிநாடுகளிலிருந்தே 20 நிமிடங்களில் பணம் அனுப்பும் நிலையில் தற்போது இந்திய தபால் துறையும் இதை செய்துள்ளது.

இண்டெர்நெட் மணி ஆர்டரில் 10 நிமிடத்தில் பணம் கிடைக்கும், 16 இலக்க பின் நம்பரை பணம் பெற வேண்டியவருக்கு அனுப்பியவர் தெரிவிக்க வேண்டும், பின் அந்த எண்ணை கூறி அடையாள அட்டை காண்பித்து பணத்தை பெறலாம் இதற்கு 10ஆயிரம் வரை அனுப்ப 100 ரூபாய் கட்டணம், 10,000 க்கு மேல் 20,000 வரை 110 ரூப்யா, அதிபட்சம் ரூபாய் 50,000 அனுப்பலாம்

# துட்டு, துட்டு... பளபளக்குது புதுநோட்டு
------------
சரவண பவன், அடையார் ஆனந்த பவனில் இன்கம் டாக்ஸ் அதிகாரிகள் ரெய்டு இன்று காலை நடந்தது.

# கணக்கில் வராத பணத்தையெல்லாம் டிப்ஸ் ஆ கிடைத்தது என்று சொல்லிவிட போகிறார்கள் ஆபிசர்ஸ்
-----------
நிதிஷ் குமாருக்கு புத்தி பேதலித்துவிட்டது என பாஜக கடும் தாக்கு

பாஜகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ரகசிய கூட்டு வைத்து தனது அரசுக்கு பிரச்சினை உருவாக்க வேண்டும் என பள்ளி உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்ததாக நிதிஷ்குமார் கூறி இருந்தார், இதற்கு பதில் அளித்த பாஜக நிதிஷ் குமாருக்கு புத்தி பேதலித்துவிட்டது என கடுமையாக விமர்சித்துள்ளனர்.

# நிதிஷ் சார், இன்னும் கொஞ்சம் பெட்டரா டிரை பண்ணலாமே
--------------
கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற முடியாது - தமிழக அரசு வாதம்

கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தற்போது உள்ள சூழ்நிலையில் திரும்ப பெற முடியாது என்றும் சூழல் மாறினால் திரும்ப பெறுவோம் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் தமிழக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

# வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மக்கள் தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கனும்
----------
ரிக்ஷாகாரன் கதாநாயகி, நாட்டாமை விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா விஜயகுமார் காலமானார்.

வீட்டில் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மஞ்சுளா விஜயகுமார், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் இன்று காலமானார். இவருக்கு வயது 59.

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான இவர் விஜயகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவருடைய 3 மகள்களான வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியோர் சினிமாவில் கதாநாயகிகளாக நடித்தவர்கள்

ரிக்ஷாகாரன் கதாநாயகி, நாட்டாமை விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா விஜயகுமார் காலமானார்.

ரிக்ஷாகாரன் கதாநாயகி, நாட்டாமை விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா விஜயகுமார் காலமானார்.

வீட்டில் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மஞ்சுளா விஜயகுமார், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் இன்று காலமானார். இவருக்கு வயது 59.

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான இவர் விஜயகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவருடைய 3 மகள்களான வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியோர் சினிமாவில் கதாநாயகிகளாக நடித்தவர்கள்.

முல்லைப் பெரியாறு இறுதி விசாரணை, இங்கிலாந்துக்கு இளவரசன் பிறப்பு, 17 வயசு பெண் மீட்பு

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றாலும் அதை மதிக்காமல் கேரள அரசு சட்டமன்றத்தில் தீர்மாணம் இயற்றி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் செய்தது இது தொடர்பாக இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.
------------
படிக்க சொன்னதால் வீட்டை விட்டு ஓடிப்போன டீன் ஏஜ் பெண் எழும்பூரில் மீட்பு

17 வயது பெண் ஜூலை 5ம் தேதி தன் வீட்டை விட்டு வெளியேறினார். தந்தையின் புகாரை அடுத்து காவல்துறை தேடுதலில் அந்த பெண் தன் தோழிகளுடன் போன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது, கடந்த ஞாயிறு அன்று அந்த பெண் எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்குவதாகவும் அவருடைய தோழி பிக் அப் செய்ய வேண்டுமென்றும் தகவல் அளித்ததில் போலிஸ் காத்திருந்து அப்பெண்ணை பிடித்து பெற்றோருடன் சேர்த்தனர்.

நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டு படிக்காமல் இருந்ததால் பெற்றோர்கள் திட்டினர் என்றும், அந்த பெண்ணுக்கு படிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார், மேலும் இந்த டீன் ஏன் பெண்ணை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பவதாகவும் அங்கே சுக வாழ்க்கை வாழலாம் என்றும் வேறு ஒரு பெண் கூறியுள்ளார். நல்ல வேளை இந்த பெண் தப்பித்தார், இல்லையென்றால் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புகிறேன் என்று கூறி என்ன நாசம் செய்திருப்பார்களோ?
--------------
முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றாலும் அதை மதிக்காமல் கேரள அரசு சட்டமன்றத்தில் தீர்மாணம் இயற்றி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் செய்தது இது தொடர்பாக இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.

Monday, 22 July 2013

நியூஸ் பிட்ஸ்: சீமான் கைது , 200கோடி ஊழல் செம்மொழி மாநாட்டில், கோயம்புத்தூரில் மசூதியில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோயம்புத்தூரில் மசூதியில் பெட்ரோல் குண்டு வீச்சு

பாஜக மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலையை தொடர்ந்து இன்று பந்த் நடைபெறுகிறது, பல பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில்  கோயம்புத்தூரில் என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து கோவையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
------------
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் குரு மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாமக எம் எல் ஏ குரு கடந்த மே மாதம் கைதானார், இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததில் மத்திய அரசு குரு மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது ஆனால் மீண்டும் பாமக எம் எல் ஏ குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார், இதை எதிர்த்து தொடுத்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் 6 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

# திரும்ப ரத்து செய்தா திரும்ப அதே வழக்கு தான், திருப்பரங்குன்றம் மலை உச்சியிலிருந்து குதிச்சி செத்து செத்து விளையாடலாமா?
--------------
சீமான் கைது

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி இளவரசன் தற்கொலையை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இந்நிலையில் மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக சீமான் வந்தார்.

144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் ஊருக்குள் வந்ததால் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
----------
செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு

திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரமேஷ் பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இன்று விசாரணைக்கு இந்த மனு வந்தபோது மேலும் கூடுதல் ஆவணங்கள் தருவதற்காக மேலும் 4 வாரங்கள் அவகாசம் கேட்டார் மனுதாரர், இதனால் இந்த மனு மீதான விசாரணை மேலும் 4 வாரங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நியூஸ் பிட்ஸ்: மீண்டும் ஊடுறுவிய சீனா, பந்த் 50 பஸ்கள் உடைப்பு, அத்வானி சேலம் வருகிறார்,

அத்வானி வருகிறார், பாஜக ஆடிட்டர் ரமேஷ் கொலையை கண்டித்து இன்று நடக்கும் பந்த், இதுவரை 50க்கும் மேற்பட்ட பஸ்கள் உடைப்பு

சேலத்தில் பா.ஜ.க. பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பந்த் நடைபெறுகிறது, இதை யொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு திருவட்டாறு,தக்கலையில் 22 பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது, இதனால் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து போலிஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடர்கிறது, இதே போல் புதுச்சேரியில் 14 பஸ்கள் உடைக்கப்பட்டன.

ஆகஸ்ட் 1 ம் தேதி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷூக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற உள்ளது, இதற்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி வருவதாக பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

# சாதிச்சண்டையே இன்னும் முடியலை, இதில் மத மோதலை வேறு கிளப்பிவிட்டுடாதிங்க ப்ளீஸ்.

-----------------------
5 நாட்களில் 3முறை இந்திய எல்லையில் ஊடுறுவிய சீன ராணுவம்.

சீன-இந்தியா எல்லைப்பிரச்சினை குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்த நிலையிலும் சீன ராணுவம் கடந்த 5 நாட்களில் 3முறை இந்திய எல்லையில் ஊடுறுவியுள்ளது.

இதில் 50 சீன வீரர்கள் குதிரையில் ஊடுறுவி பல மணி நேரம் கூடாரம் அடித்து தங்கியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த இந்தியா இதை சீரியஸாக எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.

# சீரியாசா எடுத்தாலும் காமெடியா எடுத்தாலும் அப்பப்போ மாமியார் வீட்டுக்கு வரமாதிரி வந்து தங்கிட்டு போறானுங்களே

--------------
பாஜக பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரால் அரசியலுக்கு வந்த பெண்மணி ராஜராஜேஸ்வரி மனம் நொந்து தீக்குளிப்பை மேற்கொண்டார், இந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
------------
கார்ப்பரேஷன் லாரி மோதி இறந்த பையன் குடும்பத்திற்கு ரூ 1 இலட்சம் நிவாரண நிதி.

2013ம் ஆண்டில் மட்டும் இதுவரை 13 பேர் கார்ப்பரேஷன் லாரி மோதி இறந்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இம்ரான் கான் (13) என்பவர் கார்ப்பரேஷன் லாரி மோதி ஜூலை 18ம் தேதி இறந்துவிட்டார், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.


# பொறுப்பின்றி வண்டி ஓட்டும் லாரிக்காரர்களின் லைசன்சை கேன்சல் செய்ய வேண்டும்
------------------
ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் நண்பனை கொலை செய்தவர் கைது.

29வயது ராஜேஷ் என்பவரும், ஹரி என்பவரும் நண்பர்கள். இதில் ஹரி என்பவர் transvestite  ஆவார் (பெண்கள் உடையை அணிந்து கொள்ளும் ஆண்). வெள்ளி இரவும் ராஜேஷூம் ஹரியும் மாங்காடு சுடுகாட்டில் மது அருந்தி உள்ளனர், அப்போது ஹரி ராஜேஷை செக்ஸூக்கு அழைத்ததாகவும் இதில் சண்டை வந்து ஹரியை கொன்று சுடுகாட்டிலேயே புதைத்துவிட்டதாகவும் ராஜேஷ் விசாரணையில் கூறியுள்ளார். 


ஹரி கோவில்களில் ஜோசியம் சொல்லி பணம் சம்பாதித்து அதை ராஜேஷூடன் செலவு செய்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட தகராறிலேயே ராஜேஷ் ஹரியை கொன்றுவிட்டதாக அவரது அண்ணன் கூறியுள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media