BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 16 September 2014

6000 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாபெரும் சுனாமி வருவதற்கான வாய்ப்பு

பனிமலைகள் உருகுவதால் உலகுக்கு ஏற்படப்போகும் ஆபத்து. புவி வெப்பமயமாதலினால் பனிபாளங்கள் பனிமலைகள் உருகி வருகின்றன. பனிக்கட்டிகள் உருகும் போது கடலில் கலக்கும் கடல் நீர் மட்டம் உயரும். ஆனால் மலைகள் பள்ளத்தாக்குகளின் நிலை மாறும். புவி வெப்பமயமாதலினால் கடல் நீர் சூட்டினால் வட கோளார்த்ததிலும் ஆர்டிக் அண்டார்டிக் பகுதியிலும் பனி மலைகளை உருக்குகிறது சொல்லப்போனால் பனிமலைகளை ஸ்வாக செய்து வருகிறது வெப்பமான கடல்நீர். (மேல் புற வெப்பத்தை விடவும் கடலின் சூடு பனியை அதிகமாக உருக்குகிறதாம்) அமெரிக்க புவியியல் புள்ளிவிவர துறையில் பணியாற்றிய இயற்பியலாளர் ராபர்ட் வுட்வேர்ட் 1888 ல் முதல் முதலில் பனிமலைகள் உருகினால் கடல் மட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தியரியை வெளியிட்டார். அவருக்குப் பின் 100 வருடங்கள் கழித்து வில்லியம் ஃபரேல் மற்றும் ஜேம்ஸ் கிளார்க் இதுபற்றிய மேலும் பல தகவல்களை வெளியிட்டனர். வடகோளார்த்ததில் பனி மலைகள் உருகினால் கடல் மட்டம் பரவலாக உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே சமயத்தில் வட கடல் பகுதிகளில் கடல் மட்டம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர், கடைசி பனிக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் இவர்களின் ஆய்வு இருந்தது. அப்போதைக்கு இப்போது டெக்னாலஜி வளர்ச்சி கண்டுள்ளது கடலின் மாற்றங்கள் தினமும் கண்காணிக்கப்படுகிறது. ”டைட் கேஜ் (tide gauge)” டேட்டா பராமரிக்கப்படுகிறது. இந்த டேட்டவின் படி புவியில் நூற்றுகணக்கான இடங்களில் கடல் மட்டத்தின் அளவு மெல்ல மெல்ல உயர்ந்து வருவதை உறுதி செய்கிறார்கள். ஆனால் பெரும் நிலப்பரப்புகளில் இந்த மாற்றத்தை உணர்வது சற்று கடினமே....

(கிரீன்லாந்தில்) பனி அதிகமாக உருகாத வரை கடல் மட்டம் நீர் இழுவிசை காரணமாக மேலேயே இருக்கும். சுத்தமாக உருகிவிட்டால் இழுவிசை இல்லாமல் கடல் நீர் உள்வாங்கிவிடும். இந்த படம் கடல் மட்டத்தை பற்றி விளக்குகிறது. அதோடு பனிமலை உருகுவதால் ஏற்படும் நில மாற்றத்தையும் விளக்குகிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்தால் ஏற்படும் மாற்றங்கள் : முதல் கட்டமாக, கடல் மட்டம் உயரும் போது கடல் நீர் முகத்துவாரங்களின் ஊடாக பயணித்து நன்நீரை உவர்ப்பு நீராக மாற்றும். கடலோர நீர் நிலைகளின் உப்பின் அளவு அதிகரிக்கும். 16000 வருடங்களுக்கு முன் பனி உருகியதால் தான் பல தீவுகள் கடலினுள் மூழ்கியதாக நம்பப்படுகிறது. கிரீன்லாந்தில் உள்ள பனிமலைகள் அணைத்தும் உருகினால் அப்பகுதியில் கடல் மட்டம் 100 மீட்டர்கள் கீழிரங்கும் (உள்வாங்கும்). காற்றின் வேகம் மற்றும் திசைகளில் மாற்றம் பெரும். அதோடு கூட பெரும் புயல்கள் சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உண்டு. கடல் நீரோட்டங்கள் மாறிவிடும் (மொத்தத்தில் கடல் நகரும்.) அதனால் உலக அளவில் வெப்ப சலனம் ஏற்பட்டு தட்பவெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்படும். (கடல் நீரோட்டங்கள் தான் பூமியின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் பெரிய காரணி) 1990 ஆண்டின் மத்தியத்தில் இருந்து பசிபிக் பெருங்கடல் ஆண்டிற்கு ஒரு சென்டி மீட்டர் உயருவதாக ஹாவாய் பல்கலைகழக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னொரு கோணம் கீரீன்லாந்தில் பனிமலைகள் உருகுவதால் அழுத்தக்குறைவு ஏற்பட்டு புவியின் அச்சில் (சாய்மானம்) மாற்றம் ஏற்படும். இது அண்டார்டிக் பகுதியில் ஏற்பட்டாலும் தான். (*பூமி பம்பரம் போல சற்று சாய்ந்தபடி சுழலுவது தெரிந்தது தானே) ஆகவே மரங்களையும் இயற்கையையும் அழிக்க அழிக்க அழிவு இயற்கைக்கு அல்ல, நமக்கு தான் நண்பர்களே....



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media