இடை தேர்தல் முடிவுகள் பாஜக கட்சி எதிர்பார்த்த அளவு வெல்ல முடியவில்லை . இதை தனக்கு சாதகமாக்கி கொண்ட காங்கிரஸ் , இது மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஒரு நல்ல சகுனம் என்றும் , காவி சக்திகளுக்கு ஒரு அலாரம் அடித்து விட்டது எனவும் கூறினர் .
காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , " மக்களுடன் மோடி அரசு அனுபவித்து வந்த தேனிலவு காலம் முடிவடைந்து விட்டது . ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலே மோடி அரசு மக்களின் எதிர்ப்பு அலையை சந்திக்க தொடங்கி விட்டனர் . மோடி அரசு மற்றும் பாஜகவின் செயல்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை . மோடி அமைதியாக இருக்கும் வேளையில் மோடியின் அமைச்சர்கள் மற்றும் அவரது கட்சியினர் முனைவாக்க அரசியலை மேற்கொள்கின்றனர் . இது மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஒரு நல்ல காலத்தை கொடுத்துள்ளது " என்றார் .
அவர் உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சியால் 11 தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு கூறினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.