சியோமி நிறுவனத்தின் இரண்டாவது மொபைல் ரெட்மி - 1 எஸ் . சியோமி நிறுவனத்தில் முதல் மொபைல் ஆன எம்.ஐ -3 இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . அதனை தொடர்ந்து வந்த ரெட்மி - 1 எஸ் மொபைலும் மக்களால் அதிகம் விரும்பப்பட்டது . இன்று மூன்றாம் சுற்று விற்பனைக்கு வந்த இந்த மொபைல் 3.4 விநாடியில் 40,000 மொபைல்களை புக்கிங் செய்தனர் .
சியோமி நிறுவனம் இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நன்றாக அறிந்து கொண்டுள்ளது . மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் கொடுப்பது மட்டும் இல்லாமல் , மக்களால் வாங்கும் வகையில் குறைந்த விலையில் மொபைல் போன்களை விற்கிறது . இப்போது விற்பனை ஆன ரெட்மி- 1 எஸ் மொபைலும் பல வசதிகளை கொண்டுள்ளது .
இதன் தொடுதிரை 4.7 இன்ச் அளவு கொண்டது . கேமரா 8 எம்.பி பிளாஷ் உடன் . 1 ஜிபி ராம் , மற்றும் 8 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரெஜ் . 1.6 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசசர் வசதி .
இந்த மொபைல் பிளிப்கார்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.