டில்லியில் உள்ள ஷியா நிறுவனம் ஒன்று ஈராக்கில் போர் நடந்த பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் செய்திட இந்தியாவில் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர் . அந்த நிறுவனத்தின் அந்த அழைப்பை அடுத்து 2 இலட்சம் மக்கள் தொண்டு செய்ய தயாரக இருப்பதாக அந்த நிறுவனத்திற்கு கையெழுத்திட்டுள்ளனர் .
அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில் , " 2 இலட்சம் மக்களிடம் இருந்து மருத்துவர்கள் , செவிலியர்கள் , பொறியாளர்கள் என 6,000 பேரை தேர்ந்தெடுத்து அனுப்ப உள்ளோம் . அவர்கள் அங்கே மறு சீரமைப்பு பணிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் " என்றார் .
அந்த நிறுவனம் முதலில் 6 பேர் கொண்ட குழுவை ஈராக்கிற்கு அனுப்பி அங்கே உள்ள நிலமையை ஆராய முடிவு செய்துள்ளனர் . பின்னர் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 6,000 மக்கள் அனுப்பப்படுவர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.