ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஐ'. இந்த படத்தை ஷங்கர் சுமார் 2 வருடங்களாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருத்தினராக ஹாலிவுட் நாயகன் அர்னால்டு கலந்து கொண்டார். ஐ படத்தின் பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
இதில் பேசிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, தான் இங்கு ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு மட்டும் வரவில்லை, ஷங்கரின் படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கேட்டும் வந்துள்ளதாக கூறினார். எப்போது ஷங்கர் தன்னை வைத்து படம் இயக்குவார் , அதற்காக தான் காத்து இருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் சென்னை மக்களின் அன்பு தன்னை நெகிழ வைத்துள்ளதாகவும் கூறினார். அதனால் சென்னைக்கு மீண்டும் வருவேன் என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.