BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 16 September 2014

மோடி அலை வலுவிழந்துவிட்டதா இல்லையா ?? தேர்தல் முடிவுகள் இன்று !!



மூன்று மக்களவை தொகுதிகளிலும் , 33 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது . கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெற்றது .

பிரதமர் மோடி அவர்கள் இரண்டு தொகுதிகளில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் , ஒன்றை ராஜினாமா செய்தார் . அப்படி ராஜினாமா செய்த வததோரா தொகுதியிலும் தேர்தல் நடந்தது . மேலும் இரண்டு தொகுதிகளான மனிப்பூரி மற்றும் மேதக் ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது .

இந்த இடைத் தேர்தல்கள் மோடி அரசின் மேல் மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை காண்பித்து விடும் . மேலும் இந்த தேர்தலின் வெற்றி பாஜகவிற்கு அடுத்த மாதம்  ஹரியானா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு ஊக்கமாக இருக்கும் .

மேலும் குஜராத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் மோடி போட்டி போடாமல் இருந்த முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media