Saturday, 30 November 2013
Friday, 29 November 2013
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஸ்குவாஷ் காதலி தீபிகா பாலிகலை மணக்க உள்ளார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் விளையாடி இருப்பவர் தினேஷ் கார்த்திக், தமிழக வீரரான இவர் தனது காதலியும் ஸ்குவாஷ் விளையாட்டு ஸ்டார்ம் ஆன தீபிகா பாலிகலை விரைவில் மணக்க உள்ளார், இருவருக்கும் நிச்சயதார்த்தம் சென்னயில் தாஜ் கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.
தினேஷ் கார்த்திக் ஏற்கனவே 2007ம் ஆண்டு தன் நெடுநாள் தோழியை மணந்து பின் விவாகரத்து பெற்றவர், தற்போது மணக்க போகும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பாலிகல்லும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே பிட்னெஸ் கோச்சிடம் பயிற்சி எடுத்திருந்தார்கள். பயிற்சியின் போது இருவரும் நெருங்கி பழகி தற்போது திருமணம் வரை வந்துள்ளது.
ஸ்குவாஷ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஒருவர் உலகளவில் டாப் 10 க்குள் வந்தவர் தீபிகா பாலிகல் மட்டுமே...
# வாழ்த்துகள் தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா பாலிகல்

நான் ஒரு கம்யூனிஸ்ட் ஏசு கிறிஸ்த்து - இங்கிலாந்தில் காம்ரேட் பாலா
இந்திய வம்சாவளியான அரவிந்தன் பாலகிருஷ்ணன் என்னும் 73 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார், இவர் தீவிரமான கம்யூனிஸ்ட் சிந்தனைகள் உடையவராக இருந்தவர், காம்ரேட் பாலா என பலராலும் அறியப்பட்ட இவர் வீட்டிலிருந்து சில பெண்கள் மீட்கப்பட்டனர், இவர்கள் காம்ரேட் பாலாவிடம் அடிமையாக இருந்துள்ளார்கள். பாலா இவர்களிடம் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் ஏசு கிறிஸ்த்துவை போல காட்டிக்கொண்டதை நம்பி அவரிடம் அடிமையாக இருந்துள்ளார்கள். 30 ஆண்டுகளாக அவரிடம் அடிமையாக இருந்தவர்கள் சில வாரங்களுக்கு முன் தான் காவல்துறையால் விடுவிக்கப்பட்டார்கள்.
Thursday, 28 November 2013
Wednesday, 27 November 2013
Tuesday, 26 November 2013
ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை, தீர்க்கப்படாத பல மர்மங்கள்
ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை, மர்ம வழக்கில் தீர்க்கப்படாத பல மர்மங்கள்
ஆருஷி என்ற 14 வயது சிறுமி தனது வீட்டில் நொய்டாவில் உள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார், அவரை கொலை செய்ததாக அவரது பெற்றோர்களான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் ஆகிய பல் மருத்துவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு சிபிஐ நீதிமன்றம்.சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது

Monday, 25 November 2013
ஆப்பிள் நிறுவனத்துக்கு 100கோடி டாலரை 30 டிரக்குகளில் 5 சென்ட் காசுகள் கொடுத்து பழிவாங்கியதா சாம்சங்?

பேஸ்புக் எங்கும் ஒரே பேச்சாக உள்ளது, சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவுப்படி கொடுக்க வேண்டிய 100கோடி டாலரை 5 சென்ட் சில்லறையாக மாற்றி 30 டிரக்குகளில் அனுப்பியுள்ளது என்று. ஆனால் இந்த தகவல் உண்மை அல்ல.

Sunday, 24 November 2013
Saturday, 23 November 2013
Thursday, 21 November 2013
டாக்டர் ராமதாஸ் தமிழ்நாட்டின் நரேந்திர மோடி - திருமாவளவன் விமர்சனம்
பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.
''பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ் தொடங்கியுள்ள 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கத்தை’ எப்படி மதிப்பிடுவீர்கள்?''
''பா.ஜ.க. என்பது கங்காரு என்றால், 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கம்’ என்பது அதன் வயிற்றுக்குள் அமர்ந்திருக்கும் கங்காருக் குட்டி. நரேந்திர மோடி இஸ்லாமியர்களைக் குறிவைத்து, இஸ்லாமிய வெறுப்பை வளர்த்தெடுத்து, அதன்மூலம் இந்துவெறியைத் தூண்டிவிட்டு இந்து வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறார். அதேபோல இவர் தலித் மக்களைக் குறிவைத்து, தலித் வெறுப்பை வளர்த்தெடுத்து, அதன்மூலம் இந்து ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவிட்டு, அதை வாக்குகளாக மாற்ற முனைகிறார். ஆகவே, சாதியவாதமும் மதவாதமும் ஒன்றுதான். அவர், குஜராத்தின் ராமதாஸ்; இவர், தமிழ்நாட்டின் நரேந்திர மோடி!''
# நீங்க யாருங்க பாஸ்?
Wednesday, 20 November 2013
Tuesday, 19 November 2013
ஐடி துறையில் வேலைபார்ப்பவர்கள் பிணங்கள்
ஐடி துறையில் வேலைபார்ப்பவர்கள் பிணங்கள் - பாரதரத்னா விருது கிடைத்த விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ்
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட தினத்தில் வேதியல் விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ்க்கும் அதே விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, சில நாட்களுக்கு முன் அரசியல்வாதிகள் முட்டாள்கள் என்று விமர்சித்த சிஎன்ஆர் ராவ் தற்போது ஐடி துறையினரை கலாய்த்துள்ளார்.
அறிவியலுக்கும் ஐடிதுறைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் ஐடி துறையில் இருப்பவர்கள் மகிழ்ச்சியின்றி பிணம் போல வாழ்கிறார்கள் என்றார், மேலும் 005ம் ஆண்டு 10 லட்சம் டாலர் பரிசுத் தொகையுடன் டான் டேவிட் பரிசு கிடைத்தது என்றும் அது நோபல் பரிசுக்கு இணையானது. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை, இந்த நாட்டில் விஞ்ஞானிகளுக்கு மதிப்பே இல்லை என்றும் விமர்சித்துள்ளார். தான் மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஐடியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியே இல்லை, பணம் மட்டுமே அவர்களின் குறிக்கோள் என்றும் குறிப்பிட்டார்.
# இவர் ஒரு விஞ்ஞானி சாருநிவேதிதாவாக இருப்பாரோ?

Monday, 18 November 2013
பாராளுமன்றத்தில் எம்பிகள் ஆங்கிலத்தில் விவாதிப்பதை தடை செய் - முலாயம்சிங் யாதவ்
பாராளுமன்றத்தில் எம்பிகள் ஆங்கிலத்தில் விவாதிப்பதை தடை செய்து இந்தியை வளர்க்க வேண்டும் - முலாயம்சிங் யாதவ்
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் குறிப்பிட்டதாவது பாராளுமன்றத்தில் தற்போது ஆங்கிலத்தில் எம்பிகள் விவாதிக்கின்றனர், அதை தடை செய்ய வேண்டும், இந்தியை வளர்ப்பதற்கு இதுவே சரியான தருணம், தங்கள் தாய் மொழியை பயன்படுத்தும் நாடுகள் வளர்ந்த நிலையில் உள்ளன, எனவே ஆங்கிலத்தை தடை செய்து இந்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
# முலாயம்ஜி நீங்க தமிழ் படிங்க, நாங்க இந்தி படிக்கிறோம் ஓகே?

Saturday, 16 November 2013
பிரிட்டிஷ் பிரதமர் இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையில் யாழ்பாணம் உட்பட தமிழர் பகுதிக்கு பயணம் செய்து மக்களை சந்தித்த இங்கிலாந்து பிரதம மந்திரி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னால் இலங்கை போர்க்குற்றங்களுக்கு நியாயமான, நம்பகத்தன்மையுள்ள விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் ஐநா மனித உரிமைப் பேரவையின் மூலம் பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்படும் என்று கூறியுள்ளார். நீதிவேண்டி உலக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
# எங்க ஊர் தமிழினதலைவர்கள் எல்லாம் தொடர்பே இல்லாதது மாதிரி கண்டுக்காம இருக்கங்க, நீங்கள் பிரிட்டிஷ் பிரதமர் இல்லைங்க, தமிழின தலைவர்.
Friday, 15 November 2013
Thursday, 14 November 2013
Wednesday, 13 November 2013
முள்ளிவாய்க்கால் முற்றம் அரசால் இடிப்பு
மாலை சட்டமன்றத்தில் தீர்மாணம், இரவு முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு
2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இனஅழிப்பை நினைவு படுத்தும் வகையில் தஞ்சையில் விளார் பகுதியில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவிடம் தமிழ் ஆர்வலர்களால் கட்டப்பட்டது, அதன் திறப்பு விழா நவம்பர் 8ம் தேதி குறிக்கப்பட்டது, ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கிடைத்த தீர்ப்பினால் உடனடியாக நவம்பர் 6ம் தேதியே திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுற்றுச்சுவர்களை தமிழக போலிசார் மேற்பார்வையில் இடிக்க ஆரம்பித்தனர், இது குறித்து நீதிமன்ற உத்தரவு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது, முள்ளிவாய்க்கால் முற்றம் முழுவதையும் இடித்துவிடுவது என்று முடிவு செய்து இடிப்பதாக தெரிய வந்துள்ளது.
இன்று காலை வரை இடிப்பதை நிறுத்தி வைக்க கோரியும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுவிடுவார்கள் என்ற காரணத்தால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை சட்டமன்றத்தை கூட்டி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேச்சும், தீர்மாணமும் இயற்றப்பட்டது, ஆனால் இரவே முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது ஆளும் அதிமுக ஜெயலலிதா அரசின் இரட்டை வேடத்தை காண்பிக்கின்றது.
தொடக்கவிழா நிகழ்ச்சிகளில் சசிகலா நடராஜன் முன்னிலை படுத்தப்பட்டதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது, இன அழிப்பின் போது தான் யாரும் தடுக்கவில்லை, நினைவு கூர்ந்து ஒப்பாரி வைக்க கூட தமிழகத்தில் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது தமிழனின் இழிவடைந்திருக்கும் நிலையை குறிக்குறது.

Tuesday, 12 November 2013
நடிகர் விஜய், அஜீத் முட்டாள்களா? கூகிள் டிரான்ஸ்லேட்டரில் காண்பிக்கிறது
do not see idiots movie என்று கூகிள் டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "விஜய் படம் பார்க்க வேண்டாம்" என்று காண்பிக்கிறது.
idiots movie என்று டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "அஜித் படம்" என்று காண்பிக்கிறது.
http://translate.google.com/ என்பதில் நீங்கள் do not see idiots movie என்று அடித்துவிட்டு அதை தமிழுக்கு டிரான்ஸ்லேட் செய்யுங்கள், என்ன வருகிறது என்று பாருங்கள்.
சரியாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் கண்டித்ததால் 7 மாணவிகள் தற்கொலை முயற்சி
மதுரை-அழகர்கோவில் சாலையில் உள்ள பொய்கைகரைப்பட்டியில் இயங்கி வரும் மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவரும் 7 பேரும் இணைபிரியா தோழிகள்.
Subscribe to:
Posts
(
Atom
)