BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 31 October 2013

திருமதி அம்பானியின் 50வது பிறந்தநாள்..! ஆடம்பர கொண்டாட்டத்தில் இணையும் சச்சின்-அஞ்சலி தம்பதி..!!


இந்தியாவின் பெரும்பணக்காரார்களுள் மிக முக்கியமானவரான முகேஷ் அம்பானியின் மனைவி, நீதா அம்பானியின் 50வது பிறந்தநாளை, நவம்பர் 1ல் தடபுடலாக கொண்டாட முடிவு செய்த அம்பானி குடும்பம், ஜோத்பூர் அருகேயுள்ள பல்சமண்ட் சொகுசுமாளிகையில் ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள, அம்பானி குடும்பத்துடன் இந்திய கிரிக்கெட் வீரரும், மும்பை இண்டியன்ஸ் அணியைச்சேர்ந்தவருமான சச்சின் டெண்டுல்கர் தனது மனைவியுடன் ஜோத்பூர் வந்தார்..!

# வேர் இஸ் த பார்ட்டி.. நம்ம அம்பானி வூட்ல பார்ட்டி..!
நம்ம

ICUவில் விக்னேஸ்வரன்..!

இலங்கையின் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பதவி வகித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த க.வி.விக்னேஸ்வரன் உடல் நலக் குறைவால் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..!
இருதய நோய்க்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..!

# இப்பத்தான தலைவரே பதவிக்கு வந்தீங்க.. அதுக்குள்ள நெஞ்சுவலியா..?!!

அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்ட்..!


விரைவில் ஓய்வு பெறவிருக்கும் அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், அளவுக்கு அதிகமாக மாணவர்களை சேர்த்த வழக்கில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில காலமாக இவர் அண்ணா பல்கலை.,யில் பேராசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..!

Wednesday, 30 October 2013

தேவர் குருபூஜை - அமைச்சர்களின் கார் மீது கல் வீசித் தாக்குதல், சென்னையிலும் களைகட்டிய தேவர் பூஜை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை - அமைச்சர்களின் கார் மீது கல் வீசித் தாக்குதல், சென்னையிலும் களைகட்டிய தேவர் பூஜை

இன்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குரு பூஜை நடைபெற்றது, முந்தைய காலங்களில் அதிமுக அரசு என்பது முக்குலத்தோர் சமூகத்திற்கு இணக்கமான அரசாகவும், முக்குலத்தோர் சமூகம் அரசில் அதிகார மையம்மாகவும் செயல்பட்டு வந்தது. முதல்வர் ஜெயலலிதாவை முக்குலத்தோர் சமூகத்தில் பலரும் தமது சொந்த சகோதரியை போல ஆதரித்து வந்தனர்.

முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த உடன்பிறவா சகோதரி சசிகலா குடும்பத்தினரின்  லாபி அதிமுகவில் செல்வாக்கிழந்தனர்,  சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது முக்குலத்தோர் - தலித் மக்களிடையே நடந்த கலவரத்தில் முக்குலத்தோர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதையடுத்து முக்குலத்தோருக்கு அதிமுக விற்குமான இடைவெளி அதிகரித்தது, இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. 144 தடையுத்தரவும் போட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் கே. ராஜு, அமைச்சர்  சுந்தரராஜனும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற காரை மறித்து 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அமைச்சர்களின் கார் மீது கற்கள் மற்றும் கம்புகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் அமைச்சர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

வழக்கமாக தென் மாவட்டங்களிலும் பசும்பொன்னிலும் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா இந்த ஆண்டு சென்னை, சேலம், என்று வடமாவட்டங்களிலும் புதுக்கோட்டை, திருச்சி உட்பட பல மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது, பல இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல கிராமங்களில் ஒரு இலட்சம் முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை இந்த விழாக்களுக்கு செலவழித்துள்ளனர்.

சென்னையில் நந்தனத்தில் உள்ள‌ தேவர் சிலையில் முதல்வர் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உட்பட பல திமுக, அதிமுக பிரமுகர்கள் மாலை அணிவித்தனர், அது மட்டுமின்றி சென்னையில் முன்பெப்போதும் இல்லாதவகையில் இந்த ஆண்டு நந்தனம் தேவர் சிலைக்கு முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பேரணியாக வந்தனர்.

தங்களுடைய செல்வாக்கை அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும்  காட்ட வேண்டும் என்ற எண்ணம் முக்குலத்தோர் சமூக மக்களிடம் உள்ளது என்பதே இம்முறை எப்போதும் இல்லாத அளவில் பல்வேறு இடங்களில் தேவர் குருபூஜை கொண்டாடப்பட்டது காண்பிக்கின்றது.

சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி இளம்பெண்கள் அரைநிர்வாண போராட்டம் [video]

சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி இளம்பெண்கள் அரைநிர்வாண போராட்டம்

 உலகிலேயே பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஒரே நாடு சவுதி அரேபியா. சில நாட்களுக்கு முன் தடையை மீறி கார் ஓட்டியதற்காக 10 சவுதி அரேபிய பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை நீக்கும்படியும் நேற்று பெண்ணிய அமைப்பைச் சேர்ந்த நான்கு இளம்பெண்கள் பெர்லினில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு கூடினர்.

பெண்களை கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்கள் இட்டபடியே தூதரகம் அருகில் வந்த அவர்கள் திடீரென தங்கள் மேலாடையை நீக்கி, அரைநிர்வாணமாக ஆக்ரோஷ கோஷங்கள் இட்டனர். அவர்க‌ளுடைய உடலில் பெண்களுக்கு எதிரான தடைகளை தகர்க்கும்படியான கோஷங்கள் பெயிண்ட்டில் எழுதப்பட்டிருந்தது. சவுதி அரேபிய தூதரகம்  முன்பு சிறிதுநேரம் கோஷங்கள் போட்டபின் அவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர்.

இரட்டை இலையும், உதயசூரியனும் - அரசு காசில் வெறித்தனமாக விளம்பரம் செய்யும் அதிமுக, திமுக‌


திமுக அரசு கொண்டு வந்த காப்பீட்டு திட்டத்திற்கு "கலைஞர் காப்பீட்டு திட்டம்" என்று பெயர் சூட்டினார்கள், "கலைஞர் வீட்டு வசதி திட்டம்" என்ற ஒரு திட்டம், கலைஞர் என்ற பெயரில் இன்னும் பல திட்டங்களை கொண்டு வந்தார்கள் திமுக ஆட்சியில், பொங்கலுக்கு அளிக்கப்பட்ட பையில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்திருந்தார்கள், இதை விமர்சித்த போது சூரியன் இல்லாமல் பொங்கலா என்றார்கள், பொங்கலுக்கு வரையப்படும் படங்களில் முழு சூரியன் வரைவதே வழக்கம், உதயசூரியன் வரைவது வழக்கமல்ல.

ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக ஆட்சி வந்தது, உடனடியாக எல்லா திட்டங்களும் "அம்மா" என்று ஆரம்பிக்கப்படுகின்றன, அம்மா கிராமவளர்ச்சி திட்டம், அம்மா மலிவு விலை சிற்றுண்டி உணவகம், அம்மா குடிநீர் திட்டம் என எல்லாம் அம்மா மயம், அது மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் இரட்டை இலை சின்னத்தை பொறித்துள்ளார்கள்.

இவர்கள் ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் அவர்களின் சொந்த காசிலோ அல்லது அவர்களின் கட்சி காசிலோ அல்ல, அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் அரசின் சார்பில் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள், இதில் தொடர்ந்து இவர்களின் பட்டப்பெயர்களையும் இவர்கள் கட்சி சின்னத்தையும் விளம்பரப்படுத்துவது இவர்களின் விளம்பர வெறியை காண்பிக்கின்றது.

ஸ்மால் பஸ்களில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருக்கிறது என்று திமுக எதிர்ப்பு தெரிவிப்பதும், பொங்கல் பைகளில் உதயசூரியன் வரைந்துள்ளது என அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததும் மக்களை மறதியாளர்கள் என்று நினைத்து தானோ?

# அனைத்திற்கும் தங்கள் பெயரை சூட்டிக்கொண்டவர்கள் கலைஞர் டாஸ்மாக் என்றோ, அம்மா டாஸ்மாக் என்றோ ஏன் பெயர் வைக்கவில்லை?

மைக்ரோசாஃப்டின் உயர் பதவியில் இந்தியன்..!


உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இலவச இணையவழி தொலைத்தொடர்பு சேவையான "ஸ்கைப்"பின் துணைத்தலைவராக இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்த குருதீப்சிங் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மைக்ரோகாஃப்ட் தெரிவித்துள்ளது.டெல்லியிலுள்ள பிட்ஸ் பிலானியில் இஞ்சினியரிங் முடித்த குருதீப்சிங், 1990ல் மைக்ரோசாஃப்ட்டில் ஒரு சாதரண பொறியாளராக சேர்ந்தவர்..!
20 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை தன்வசம் வைத்திருக்கும் குருதீப்தான் மைக்ரோசாஃப்ட்டின் துணைத்தலைவராக பதவிபெறும் முதல் இந்தியர்..!

# சிங் இஸ் கிங்..!

உயர்கிறது டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை..!

டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட "கிரித் பரிக்" கமிட்டி, பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லியிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.5ம், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ250ம் மண்ணெண்ணயின் விலையை லிட்டருக்கு ரூ.4ம் உயர்த்த அறிவுறுத்தியுள்ளது..!
மேலும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9 லிருந்து 6ஆக குறைக்கவும் யோசனை தெரிவித்துள்ளது.
5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மே2014ல் வர இருக்கும் நாடளுமன்ர தேர்தலை கருத்தில் கொண்டு விலையேற்றம் பற்றி அரசு மறுபரிசீலனை செய்யும் எனத்தெரிகிறது..!

#என்னா ப்ளானிங்கு..! 


Tuesday, 29 October 2013

ஒரே மேடையில் சிரித்து பேசிக்கொண்ட மன்மோகன் சிங் - நரேந்திர மோடி

பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி  பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்,  இருவரும் சில நிமிடங்கள் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

இன்று குஜராத்தின் அகதமாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு சொசைட்டி சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அருங்காட்சியக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன்சிங்கும், சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்ற போது தான் இது நடந்தது.

# தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இது போன்று ஒரே மேடையில் சிரித்து பேசுவதெல்லாம் நடக்குமா?

குளத்தில் வளரும் தாமரைகளை மறைக்க வேண்டும்-காமெடி பண்ணும் காங்கிரஸ்....!!!!



கட்சிகள் தங்கள் சின்னங்களை பொது இடங்களிலோ, பொதுவான விஷயங்களிலோ பயன்படுத்தக்கூடாது என்பது தேர்தல் விதி.இதன்படி இப்பொழுது தேர்தல் நடக்கவிருக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அமர்சந்த் தேர்தல் ஆணையத்திற்க்கு ஒரு மனு எழுதியுள்ளார்.அதில், "தாமரை பி.ஜே.பி யின் சின்னமாதலால் அதை பார்க்கும்பொழுதெல்லாம் மக்களுக்கு பி.ஜே.பி யின் நினைவே வரும்.அதனால் மாநிலம் முழுவதும் அனைத்து குளங்களிலும் வளரும் தாமரைப்பூக்களை தேர்தல் ஆணையம் மறைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.தேர்தல் ஆணையம் இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

இதற்கு பதிலளித்த பி.ஜே.பியினர்,"இது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்,அப்படியானால் காங்கிரஸ்காரர்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் கைகளை ஒளித்து வைத்துக்கொள்ளுவார்களா??" என்று கேள்வி எழுப்பினர்.

# உங்க அறிவை கண்டு நாங்க வியக்கோம் காங்கிரஸ்கார்.................................   

கோட்டையில் தங்கம் இல்லை-தொல்லியல் துறை அறிவிப்பு.


சோபன் ஷங்கர் என்ற சாமியார் சில நாட்களுக்கு முன்பு உ.பி யில் உள்ள கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக தான் கனவு கண்டதாக கூறினார்.இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட அரசும் தொல்லியல் துறையை முடுக்கி விட்டு கோட்டையை தோண்டும் பணியை தொடங்கியது.கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய பணி நேற்று வரை நடந்து வந்தது.இந்நிலையில் இன்று "டைம்ஸ் நவ்" வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி அங்கே தங்கம் இல்லை என்றும்,அதனால் தொல்லியல் துறை தோண்டுவதை நிறுத்தி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

#இப்படி வாலண்டியரா நீங்களே வந்து வண்டில ஏறி அசிங்கப்பட்டுடீங்களே சாமி................ 

Monday, 28 October 2013

தீபாவளி பரிசு ஒரு கூடை வெங்காயம்-டெல்லி பிஜேபியின் லந்து.....!!!!


கடந்த சனிக்கிழமை நிருபர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்,"வெங்காய விலை உயர்வு என் வீட்டையும் பாதித்துள்ளது.நான் வெங்காயம் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன" என்று கூறினார்.இந்நிலையில் இன்று ஷீலாவை சந்தித்த பிஜேபி தலைவர் விஜய் ஜாலி ஷீலாவுக்கு ஒரு கூடை வெங்காயத்தை பரிசத்தளித்தார்.பின் நிருபர்களிடம் பேசிய விஜய் ஜாலி,"முதல்வர் வெங்காயம் வாங்க முடியாத அளவுக்கு மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதை அறிந்து வருத்தமடைந்தேன்,அதனால் அவருக்கு ஒரு கூடை வெங்காயத்தை தீபாவளி பரிசாக கொடுக்க வந்தேன்" என கிண்டலடித்தார்.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய காங்கிரஸ் அரசை குத்தி காண்பிப்தற்காகவே இப்படி நடந்து கொண்டதாக பிஜேபியினர் தெரிவித்தனர்.

# பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்........  

தவறான சிகிச்சையால் பிரசவத்தில் பெண் சாவு, சென்னை மருத்துவமனையை கண்டித்து போராட்டம்

சென்னை சேலையூர் அக்ரஹாரத்தை சேந்தவர் ஜெயச்சந்திரன் மோகன். இவர் மனைவி ஹரிணி நாச்சியார். யாவர் குழந்தை பேருக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் நேற்று முன்தினம், அவருக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டது. தவறான மருந்து அளிக்கப்பட்டதால் அவர் மயக்க நிலையிலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார்.

கோபம் கொண்ட பெண்ணின் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமாதானப்படுத்திய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இன்று உடல் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

மோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்ஸ்!


'பெரும்பாலான இந்தியரிடம் பயம் மற்றும் விரோதத்தை விதைப்பதால் மோடியால் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று பிரபல அமெரிக்க ஏடான நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

ஃபாத்திமா பாபு , வணக்க்க்க்கம் நிர்மலா பெரியசாமி இருவரும் அதிமுகவில்

ஃபாத்திமா பாபு , வணக்க்க்க்கம் நிர்மலா பெரியசாமி இருவரும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்கள்

Sunday, 27 October 2013

மோடி பேச இருந்த மேடை அருகில் உட்பட 7 இடங்களில் குண்டு வெடிப்பு ஆனாலும் மோடி பேசினார்.


மோடி பேச இருந்த மேடை அருகில் உட்பட 7 இடங்களில் குண்டு வெடிப்பு ஆனாலும் மோடி பேசினார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாட்னாவுக்கு வருகை தருவதற்கு முன்பு அவர் பேச இருந்த மேடைக்கு அருகே  7 குண்டுகள் வெடித்தது.. இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.  83 பேர் காயமடைந்தனர். பாட்னா ரயில் நிலையத்திலும் கழிவறையில்  குண்டு வெடித்தது. ஆனாலும் மோடி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்

# மோடி பேனரை அனுமதி பெறவில்லை என்று கழற்றிய நேரத்தில் மாநில அரசு பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கலாம்!

Saturday, 26 October 2013

தான் பிரதமர் ஆனது எல்லையை மாற்றியமைக்க அல்ல - மன்மோகன்சிங் நவாஷ் ஷெரிப்புக்கு கொடுத்த பதிலடி

சென்ற மாதம் நியூயார்க்கில் ஐக்கியநாடுகள் சபை கூட்டங்களுக்கு பின் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் பாக்கிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசினர்,

குஜராத்தில் ஒரே மேடையில் பேசப்போகும் மோடி - மன்மோகன் சிங்.

அமெரிக்காவில் ஒரே மேடையில் இரண்டு அதிபர் வேட்பாளர்களும் வாதங்களும் பிரச்சாரங்களும் செய்து கொள்வார்கள்,

காங்கிரஸ்க்கு ஆதரவாக சச்சின் டென்டுல்கர் பிரச்சாரம்

காங்கிரஸ்க்கு ஆதரவாக சச்சின் டென்டுல்கர் பிரச்சாரம் - மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்

எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் கடத்தல்காரர்கள்..! 3 பேரையும் சுட்டு வீழ்த்தியது இந்திய எல்லை பதுகாப்புப் படை.!!



இந்திய பகிஸ்தான் எல்லைப்பகுதியான முல்லன்கோட்டில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான 3 பேரின் நடமாட்டம் தென்பட்டதில், இந்திய எல்லைப்பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர். திடீரென இந்திய படையின்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு பதிலடி கொடுத்த இந்திய துருப்புகள் பாகிஸ்தானை சேர்ந்த 3 கடத்தல்காரர்களை சுட்டுவீழ்த்தியதோடு, அவர்களிடமிருந்து 24கிலோ ஹெராயினயும் கைப்பற்றினர்.
இதன் மதிப்பு 120கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது..!

# ஆப்பரேஷன் பதிலடி ஸ்டார்ட்ஸ்..!

சுட்டகதை - விமர்சனம்

காட்டுவாசி கிராமத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட இரண்டு மொக்கை போலிஸ்  அந்த கொலையை செய்தவர் யார் என துப்பறியும் கதை.

போஸ்டர்ல டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்னு போட்டால் மட்டும் போதுமா?  டிவிஸ்ட்டுன்னு சொன்னால் கூட தெரிய மாட்டேங்கிறது. கதையோ மொக்கை, காட்சியமைப்போ சூர மொக்கை, ஒளிப்பதிவோ கொடுமை, இசையோ இம்சை, காமெடி என்று சில குதறல்கள் என அனைத்து மோசமான அம்சங்களும் ஒன்றாக அமைந்த படம் சுட்டகதை.

புரொட்யூசர் ரவீந்தர் ஸ்விட்சர்லாந்திலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் வந்து 6 படங்களுக்கு பூஜை போட்டு இந்த சூர மொக்கை படத்தை ரிலீஸ் செய்த நேரத்திற்கு பதில் சரக்கடிக்கும் பழக்கம் இருந்தால் இரண்டு எக்ஸ்ட்ரா லார்ஜ் அடித்துவிட்டு ஸ்விஸ்சிலேயே குப்பற படுத்து தூங்கியிருக்கலாம்.

படம் பார்க்க செல்பவர்கள் தியேட்டர்காரனிடம் தியேட்டர் வாசல் கதவை எக்காரணம் கொண்டும் பூட்ட கூடாது என்று சொல்லிவிட்டு செல்லவும், தியேட்டருக்கு எதிரில் மெடிக்கல் ஷாப் இருந்தால் தலைவலி மாத்திரைகளை ஆர்டர் செய்துவிட்டு போகவும்

மதிப்பெண்கள் 1.5 / 5

# படம் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கமெண்ட் என்ன?

நரேந்திரமோடி பேரணி பேனர்கள், போஸ்டர்கள் கிழிப்பு - பாட்னாவில் சாலைமறியல்



வரும் ஞாயிறு அன்று பாட்னாவில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பேரணி நடைபெற உள்ளது,

ஜப்பானை தாக்கிய பூகம்பம்-ரிக்டர் அளவு 7.3


நில அதிர்வுகளுக்கு பெயர் பொன ஜப்பானை வெள்ளியன்று மீண்டும் ஒரு நில நடுக்கம் தாக்கியது.இந்திய நேரப்படி வெள்ளி இரவு 10.40 மணிக்கு நிகழ்ந்த இந்த பூகம்பத்தின் அளவு 7.3 ரிக்டர் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஆயினும் இதுவரை சேதம் எதுவும் ஆனதாக தகவல்கள் இல்லை.

ஏற்கனவே 2011-ல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு பூகம்பத்தில் ஜப்பான் நிர்மூலமானது குறிப்பிடத்தக்கது. 

Friday, 25 October 2013

இந்தியன் கிராண்ட் ஃபிரிக்ஸ்க்கு தடை இல்லை-நீதிமன்றம் அறிவிப்பு...!!!

இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள, இந்திய கார் ரேஸ் பிரியர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் கிராண்ட் ஃபிரிக்ஸ்க்கு தடை இல்லை என அறிவித்து,ஸ்பான்ஸர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது நீதிமன்றம்.ஏற்கனவே அடுத்த ஆண்டு கிராண்ட் ஃபிரிக்ஸ் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் நடக்காதோ என்ற ரசிகர்களின் பயம் முடிவுக்கு வந்துள்ளது.பந்தயத்தை நடத்துபவர்கள் சென்ற ஆண்டுக்கான கேளிக்கை வரியை கட்டாததால் இந்த ஆண்டு போட்டியை தடை செய்யவெண்டும் என்று அமித்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.
மேலும் இந்த மனுவை அடுத்த வாரம் மீண்டும் விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

#சின்ராசு..அடிச்சு ஓட்ரா வண்டிய..!

சாம்சங்கின் கண்ணாடி வடிவிலான ஸ்மார்ட்ஃபோன்..! தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டம்..!!

பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், சமீபத்தில் கண்ணாடி வடிவிலான ஒரு புதிய ஸ்மார்ட்ஃபோனுக்கு காப்புரிமையைப் பதிவு செய்துள்ளது. கைக்கடிகார வடிவிலான "கியர்" எனும் ஸ்மார்ட்வாட்சை சந்தையில் அறிமுகப்படுத்திய சிறிதுகாலத்திற்குள்ளாகவே, இந்த அடுத்தகட்ட முயற்சியை செய்திருப்பது, சந்தையில் சாம்சங்கிற்கான வரவேற்பு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
கூகுள் நிறுவனம் வடிவமைத்துக்கொண்டிருக்கும் "கூகுள்கிளாஸ்" போன்றே இது இருந்தாலும் இதன் செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..!

#எல்லாம் சரிதான்.. விலை??

உலகத்திலேயே அதிக காசநேயாளிகள் வாழும் நாடு இந்தியா..

உலகத்திலேயே அதிக காசநேயாளிகள் வாழும் நாடு இந்தியா..! உலக சுகாதார மையம் அதிர்ச்சித்தகவல்..!!

உலக சுகாதார மையமான W.H.O வெளியிட்டுள்ள உலக காசநோய் அறிக்கையின்படி உலகின் மொத்த காசநோயாளிகளில் 2.5மில்லியன் பேர் இந்தியர்கள் என அறிவித்துள்ளது..! மேலும் இவர்களில் 33% பேர் இன்னும் அந்த நோய் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், இவர்களால் வருடத்திற்கு சராசரியாக 14பேருக்கு இந்த கொடிய நோய் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..!
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் நோய்தடுப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத ஒரு கொடியவகை காசநோயும் பரவி வருவதாகவும் W.H.O தெரிவித்துள்ளது..!!

# இந்திய அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்குமா..?

கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை தீவிரவாதிகள் ஆக்க பாக்கிஸ்தான் முயற்சி - ராகுல் காந்தி போட்ட குண்டு

முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த பாக்கிஸ்தான் ஏஜென்சிகள் முயற்சித்தன - ராகுல் காந்தி அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் வசீகரிக்கும் ஆளுமைகளின் பட்டியிலில் முதலிடம்-ஷாருக்கான்!

இந்தியாவின் வசீகரிக்கும் ஆளுமைகளின் பட்டியிலில் முதலிடம்-ஷாருக்கான்!! அமிதாப், சல்மானை பின்னுக்குத்தள்ளினார்..!

ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி எனும் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவின் வசீகரிக்கும் ஆளுமைகளின் பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான்..!

மன்மோகன் சிங் இந்திய பிரதமர் மட்டுமல்ல... உலக அளவில் பெரிய தலைவர் - இலங்கை பஞ்ச் டயலாக்

மன்மோகன் சிங் இந்திய பிரதமர் மட்டுமல்ல... உலக அளவில் பெரிய தலைவர். இதனை கருத்தில் கொண்டு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தவேண்டும் என்பது அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து எடுத்த ஒருமித்த முடிவு.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்து உள்ள நிலையில், இந்தியாவும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்திய தனிமைப்படுத்தப்படும் என இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்து உள்ளார்.


# ........ எல்லாம் பஞ்ச் டையலாக் பேசுதே

அமைச்சரகம் உட்பட மாஃபியாக்கள் எங்கும் உள்ளார்கள் - பிரதமரை எச்சரித்த முன்னாள் நிலக்கரி துறை செயலாளர்

அமைச்சரகம் உட்பட மாஃபியாக்கள் எங்கும் உள்ளார்கள் - பிரதமரை எச்சரித்த முன்னாள் நிலக்கரி துறை செயலாளர்

பெண் போலிஸ்க்கு போன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த லாரி கிளீனர் கைது

மாமல்லபுரம் அருகே உள்ள வடநெமிலியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் லாரி கிளீனராக வேலை செய்கிறார், இவருக்கு போர் அடிக்கும் போது போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து பெண் போலீசாரிடம் ஆபாசமான வார்த்தைகளை பேசி வந்துள்ளார்

பாடலாசிரியர் தாமரை தெரிவித்த வேதனை, தியாகுவின் "பெண்" லீலைகள் காரணமா?

பாடலாசிரியர் தாமரை தெரிவித்த வேதனை, தியாகுவின் "பெண்" லீலைகள் காரணமா?

பாடலாசிரியர் தாமரை நேர்மையான தமிழ் ஆர்வலர், தன் வாழ்வை தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் அற்பனித்து கொண்டவர், தமிழ் உணர்வின் காரணமாகவே நக்சல் போராட்டங்களில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு பின் சிறையிலிருந்து வெளிவந்த தமிழ் போராளியாக இருந்த தியாகுவை திருமணம் செய்து கொண்டார்.

பெப்சி கோக் போன்ற கார்பனைஸ்ட் குளிர்பானங்களை ஆய்வு செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI), அனைத்து வகையான கார்பன் டை ஆக்சைடு வாயு கலந்த குளிர்பானங்களையும் கண்காணித்து அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசாவில் வெள்ளம்-அகதிகளாய் மக்கள்....!!!!


ஒடிசாவில் கடந்த நான்கு நாட்களாகவே கன மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சிக்கிடி,பத்ராபூர்,அஸ்கா,மொஹானா உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த வெள்ளத்தினால் பத்து பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

50000-க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

உலகத்திலேயே அதிக காசநேயாளிகள் வாழும் நாடு இந்தியா..! உலக சுகாதார மையம் அதிர்ச்சித்தகவல்..!!



உலக சுகாதார மையமான W.H.O வெளியிட்டுள்ள உலக காசநோய் அறிக்கையின்படி உலகின் மொத்த காசநோயாளிகளில் 2.5மில்லியன் பேர் இந்தியர்கள் என அறிவித்துள்ளது..! மேலும் இவர்களில் 33% பேர் இன்னும் அந்த நோய் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், இவர்களால் வருடத்திற்கு சராசரியாக 14பேருக்கு இந்த கொடிய நோய் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..!
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் நோய்தடுப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத ஒரு கொடியவகை காசநோயும் பரவி வருவதாகவும் W.H.O தெரிவித்துள்ளது..!!

# இந்திய அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்குமா..?

ராம்கோபால்வர்மாவுக்கு போலீஸ் பாதுகாப்பு..!


பிரபல இயக்குனரான ராம்கோபால்வர்மாவுக்கு சில தினங்கள் முன்பு வந்த வந்த மிரட்டலை அடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது வழக்கமான படங்கள் போலவே சமீபத்திய படமான "சத்யா-2"வும் நிழல்உலக தாதா பற்றிய படமாகும். இதன் காரணமாகவே அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என வெளிவந்த கருத்தை மறுத்துள்ள அவர், இதை பற்றி எதுவும் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

#என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..!

இந்தியாவின் வசீகரிக்கும் ஆளுமைகளின் பட்டியிலில் முதலிடம்-ஷாருக்கான்!! அமிதாப், சல்மானை பின்னுக்குத்தள்ளினார்..!



ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி எனும் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவின் வசீகரிக்கும் ஆளுமைகளின் பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான்..!
16 நகரங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், முதலிடம் பிடித்துள்ள ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக அமிதாப்பச்சனும். தோனியும், அமிர்கானும் உள்ளார்கள்.
பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்கள்,கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்தியாவின் பெரும்பணக்காரர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் இருக்கும், ஒரு ஆச்சர்யமான மற்றும் பெருமைமிகு விஷயம்,
தேசியகீதத்தை எழுதிய ரபீந்த்ரநாத் தாகூருக்கு முக்கிய இடம் கிடத்துள்ளதுதான்..!

#ஜெய் ஹோ..!

பணக்கார இந்தியர்கள்-ஒரு 'கிறுகிறு' லிஸ்ட்.....


ஹுருண் நிறுவனம் டாப் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 18.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டு முகேஷ் அம்பானி முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.இவருக்கு அடுத்த இடத்தை லண்டன் வாழ் இந்தியர் மிட்டல்(15.9 பில்லியன் டாலர்) பெற்றுள்ளார்.மூன்றாமிடம் சன் ஃபார்மாஸூட்டிக்கல்ஸ் நிறுவன அதிபர் திலிப் சங்விக்கு.இந்த பட்டியலில் பெண்கள் நான்கு பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

இந்த 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 250 பில்லியன் டாலராம்.

#கண்ண கட்டுது,யாரவது ஜூஸ் சொல்லுங்கப்பா....................

Thursday, 24 October 2013

ராமராஜன் தவிர வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை! ராமராஜன் வாழ்க்கை ஒரு பாடம்...

ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை என்ன தெரியுமா? ராமராஜன் வாழ்க்கை ஒரு பாடம்...

இந்தியாவை மிரட்டும் இலங்கை தூதர்..

இலங்கை பிரச்சினையில் தமிழக அரசின் தீர்மானம் குறித்து எச்சரிக்கை

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொந்தளித்த இந்திய ரசிகர்கள்..! தோனி வீட்டில் கல்லெறி அட்டாக்..!


நேற்று ராஞ்சியில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டியி மழையால் தடைப்பட்டது.

பிஜேபி நடத்துவது பணம்படைத்தவர்களுக்கான ஆட்சி..! ம.பி யில் ராகுல் ஆவேசம்..!



இன்று மத்தியபிரதேச மாநிலம் ரஹத்கர் பகுதிதியில் ஒரு பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல்காந்தி, ம.பி யில் ஆளும் பா.ஜ.க பணக்காரர்களுக்கான ஆட்சியை நடத்துவதாகவும், நடுத்தர, ஏழை வர்க்கத்தினை பற்றி கவலைப்படாததால்தான் வேலையில்லாத்திண்டாட்டமும்,

ப்ளாக்பெர்ரியின் புது அதிநவீன ஸ்மார்ட்ஃபோன்....!!!!

முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ப்ளாக்பெர்ரி தனது புதிய ஸ்மார்ட்ஃபோனான Z30 ஐ இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.ப்ளாக்பெர்ரி 10 ஓ.எஸ் வெர்ஷன் 10.2-ல் இயங்கும் இது 5" இன்ச் டிஸ்ப்ளேயுடனும்,இதுவரை இல்லாத பேட்டரி சைஸுடனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

# இதன் விலை ரூ 39990 மட்டுமே.........  

ஆறு கோடி நஷ்ட ஈடு-ஆணையிட்ட சுப்ரீம் கோர்ட்.......!!!

ஆறு கோடி நஷ்ட ஈடு-ஆணையிட்ட சுப்ரீம் கோர்ட்.......!!!

அமெரிக்க வாழ் மருத்துவரான குணால் சாகா தன் மனைவி அனுராதாவோடு,விடுமுறையை கழிக்க 1998-ஆம் ஆண்டு கொல்கத்தா வந்திருந்தார். வந்த இடத்தில் அனு தோல் வியாதியால் அவதிப்பட்டார்.ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனை மருத்துவர் முகர்ஜி அனுராதாவுக்கு டெப்போமெட்ரோல் மருந்தை பரிந்துரைத்தார்.அதை உட்கொண்ட அனுராதா அடுத்த சில தினங்களிலேயே மரணமடைந்தார்.இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய குணாலுக்கு, மருத்துவமனை நிர்வாகம் 5.96 கோடி தரவேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அனுபமாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முகர்ஜி,பல்ராம் பிரசாத் ஆகிய மருத்துவர்கள் தலா பத்து  லட்சமும்,மற்றொரு மருத்துவரான பைத்யனாத் ஐந்து லட்சமும்,ஏனைய தொகையை மருத்துவமனை நிர்வாகம் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

# இந்த நியாயத்த சொல்ல இத்தன வருசமா ஐயா???????

விஸ்டன் உலக டெஸ்ட் அணியில் சச்சின்-சாதனை நாயகனுக்கு மற்றுமோர் அங்கீகாரம்...!!

விஸ்டன் உலக டெஸ்ட் அணியில் சச்சின்-சாதனை நாயகனுக்கு மற்றுமோர் அங்கீகாரம்...!!!

Wednesday, 23 October 2013

மன்மோகன் சிங் மிகவும் திறமைசாலி-சீன அதிபர் புகழாரம்........!!!!!

எல்லை பிரச்சனைகளை விவாதிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார்.இன்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் இணைந்து இந்தோ-சீன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.பின் நிகழ்ந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சீன அதிபர்,மன்மோகன் சிங் திறமை வாய்ந்த மூத்த அரசியல்வாதி என்றும்,இந்தியா இந்த அளவுக்கு முன்னேறியிருப்பதற்க்கு மன்மோகனும் ஒரு முக்கிய காரணம் என்றும் புகழாரம் சூட்டினார். 

# கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க ஏட்டய்யா......!

சீனாவுடன் எல்லைபிர‌ச்சினை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது..!

சீனாவுடன் எல்லைபிர‌ச்சினை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா-சீனா கை குலுக்குவதை உலகமே உற்று நோக்குகிறது - சீன பிரதமர் லீ கெகியாங் 

சீனாவுடன் எல்லைப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தம், நதி நீர் பங்கீடு தொடர்பான பல ஒப்பந்தங்கள் இன்று இந்தியா சீனா இடையில் கையெழுத்தானது. அருணாச்சலபிரதேசம், மிஜோராம் போன்ற மாநிலங்களை தங்கள் பகுதி என்று உரிமை கோரும் சீனாவிற்கு இது தொடர்பான விசா பிரச்சினைகளில் மட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்தியா-சீனா கை குலுக்குவதை உலகமே உற்று நோக்குகிறது என்று சீன பிரதமர் லீ கெகியாங் குறிப்பிட்டுள்ளார்.

# எல்லைக்குள் வந்து டெண்ட் அடிப்பது, கேம்ப் ஃபயர் போட்டு குத்து சாங் போடுவதை போன்ற வேலைகளை நிறுத்துமா சீன ராணுவம்?

வேட்பாளரை அறிவித்த பி.ஜே.பி- முடிவுக்கு வந்த அக்கப்போர்.....!!!!!!!

வேட்பாளரை அறிவித்த பி.ஜே.பி- முடிவுக்கு வந்த அக்கப்போர்.....!!!!!!!

டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற
உள்ளது.இதற்கான வேலைகளில் மற்ற தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுப்பட்டிருந்த அதே வேளையில் பி.ஜே.பி யோ குழப்பத்தில் இருந்தது. முதல்வர் வேட்பாளர் ஆக ஆளாளுக்கு ஆசைப்பட்டது தான் இதற்கு காரணம்.பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இறுதியாக இன்று தன் முதல்வர் வேட்பாளரை அறிவித்தது பி.ஜே.பி. டெல்லி மாநில பி.ஜே.பி தலைவரான விஜய் கோயலுக்கு கல்தா குடுத்த தலைமை, டெல்லியின் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

இதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஜய் கோயல்,தனக்கு இந்த முடிவில் எந்த வருத்தமும் இல்லை என்றும் தலைமையின் முடிவை மதிப்பதாகவும் கூறியுள்ளார்.

#பதவிக்காக அடிச்சுக்க உங்களுக்கு எல்லாம் சொல்லியா தரணும்???????        

சத்யமேவ ஜெயதே- சீசன் 2..!

பாலிவுட் நடிகர் அமீர்கான் கடந்த ஆண்டு ஸ்டார் குழும சேனல்களுடன் இணைந்து நடத்திய "சத்யமேவ ஜெயதே" என்னும் நிகழ்ச்சி பல்வேறு சமூக பிரச்சனைகளை அலசி, அவற்றுக்கான தீர்வுகளையும் காண முயன்றது.மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான வேலைகள் மும்முரமாக தொடங்கிவிட்டன.
அமீர்கான், தூம்-3 பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி நிகழ்ச்சி வடிவமைப்பில் பங்கெடுத்துக் கொள்கிறாராம்.
அடுத்து ஆண்டு ஜனவரி முதல் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#கமர்ஷியல் நிகழ்சிகளிடையே, சத்யமேவ ஜெயதே-சீசன் 2 ரீச் ஆகுமா..?!

->P

நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவில்லை, அரசியல் பேசவே இல்லை - விஜய் மறுப்பு

நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவில்லை, அரசியல் பேசவே இல்லை - விஜய் மறுப்பு

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியலில் இறங்குவது குறித்து நடிகர் விஜய் கருத்து கேட்டதாக சில நாட்களுக்கு முன் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இது குறித்து மறுத்து தெரிவித்து அறிக்கை விடுத்த விஜய் அதில் குறிப்பிட்டதாவது

சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் சம்மந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதை படித்து ரசிகர்களும், பொதுமக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

நான், கடந்த இரண்டு மாதமாக ஹைதராபாத்தில் ஜில்லா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன். கேரளாவிற்கே நான் செல்லவில்லை. அப்படியிருக்க இப்படியொரு தவறான செய்தியால் ரசிகர்கள் மட்டுமின்றி நானும் குழப்பம் அடைந்தேன். நான் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருகிறேன்.

எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான். ஆகவே தயவு செய்து உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், மக்களுக்கும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

# ஏன் ப்ரோ, அரசியல் பேசித்தான் பாருங்களேன்!

பொறுமையை சோதிக்கும் பாகிஸ்தான்-பதிலடி தருமா இந்திய அரசு????

பொறுமையை சோதிக்கும் பாகிஸ்தான்-பதிலடி தருமா இந்திய அரசு?????

முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களாகவே
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அடிக்கடி அத்துமீறி வருகிறது.இந்திய ராணுவம் அவ்வப்பொழுது சின்ன சின்னதாய் பதிலடி கொடுத்தாலும்கூட,ஒரு பலமான ராணுவ நடவடிக்கையை எடுக்க ஏனோ மத்திய அரசு தயங்கி வருகிறது.இந்நிலையில் எல்லையில் நிலவும் பதட்டத்தை தணிக்க ஒருநாள் பயணமாக உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே செவ்வாய் அன்று காஷ்மீர் சென்றார்.எல்லைபகுதிகளை அவர் பார்வையிட்டு திரும்பிய சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்திய நேரப்படி செவ்வாய் இரவு 7.40 மணிக்கு தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய் அன்று நடந்துள்ள இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.முன்னதாக செவ்வாய் காலை 10.30 மணி அளவில் முதல் தாக்குதல் நிகழ்ந்தது.

#மன்மோகன் அய்யா,நீங்களும் உங்க கூட்டாளிங்களும் இன்னும் எத்தன நாளைக்குத்தான் இப்பிடி மிக்சர் சாப்பிட்டுக்கிட்டே இருக்கபோறீங்க?????

->N

Tuesday, 22 October 2013

வருகிறது வெளிநாட்டு வெங்காயம்-பரிசீலனையில் மத்திய அரசு......!!!!!

வருகிறது வெளிநாட்டு வெங்காயம்-பரிசீலனையில் மத்திய அரசு......!!!!!

கடந்த சில மாதங்களாக நாடெங்கிலும் வரலாறு காணாத வகையில் வெங்காய விலை உயர்ந்து வருகிறது.தலைநகர் டெல்லியில் கிலோ 90 ரூபாய்க்கும்,மற்ற இடங்களில் கிலோ 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய தொழிற்துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா,"வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.தேவைப்பட்டால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.மாநில அரசுகளும் வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறினார்.

மேலும் இந்த வருட இறுதிக்குள் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

#உங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்புனாலே ஒழிய விலைவாசி குறையவே குறையாது சார்.............

->N

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெண் குழந்தை பிறந்தது - போஸ் பாண்டி டூ சிவனாண்டி

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நமது வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவரான நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..!

சீனாவுடன் போட்டி-இனி விண்வெளியிலும்.........!!!!!


ஆசியாவின் இருபெரும் ஜாம்பவான்களான இந்தியாவும்,சீனாவும் ஏற்கெனவே பல துறைகளில் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு வருகின்றன.இந்நிலையில் பி.பி.சி இப்பொழுது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, இஸ்ரோ"மாங்கல்யான்" என்னும் செயற்கைக்கோளை செவ்வாய்க்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ், வாரி வழங்கிய முதல்வர் ஜெயலலிதா

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சச்சினின் கடைசி டெஸ்ட்..காண வருகிறார்

சச்சினின் கடைசி டெஸ்ட்..காண வருகிறார் சச்சினின் தாயார்..! எகிறும் எதிர்பார்ப்புகள்..!!

வருகிறது நோக்கியாவின் முதல் டேப்லெட்..!

வருகிறது நோக்கியாவின் முதல் டேப்லெட்..!

Monday, 21 October 2013

ஆப்பிளை பின்னுக்குத்தள்ளியது சாம்சங்..!

ஆப்பிளை பின்னுக்குத்தள்ளியது சாம்சங்..!

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் எம்.பி. பதவி பறிப்பு

ஊழல் வழக்கில்  தண்டனை பெற்றதால் ரஷீத் மசூத்தின் எம்.பி. பதவி பறிப்பு, பதவி பறிபோகும் முதல் எம்.பி.

லல்லுபிரசாத் எம்.பி. பதவிக்கும் ஆப்பு தயார்.

கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றால்  உடனடியாக அவர்கள் பதவியை பறிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது, அதனடிப்படையில் ஊழல் வழக்கில்  4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் ரஷீத் மசூத்தின் எம்.பி. பதவி இன்று பறிக்கப்பட்டது.

கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவ்வின் பதவியும் விரைவில் பறிக்கப்படும் என தெரிகிறது.

Sunday, 20 October 2013

1000 டன் தங்க புதையல், உத்திரபிரதேச அரசின் உச்சகட்ட காமெடி

உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே கெடா எனும் கிராமத்தில் மன்னர் ராஜா ராவ் ராம் பாக் சிங் என்பவரது சிதிலமடைந்த கோட்டை உள்ளது.

20 இலட்சம் ரூபாய் பண மெத்தையில் புரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர், மற்ற கம்யூனிஸ்ட்களுக்கு வைத்த ஆப்பு

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகின்றது, ஜோகிந்த்ராநகர் மார்க்சிஸ்ட் கமிட்டி உறுப்பினரான சமர் ஆச்சார்ஜி தனது மெத்தையில் பணக்கட்டுகளை அடுக்கி அதன் மேல் புரண்டது வீடியோ கிளிப்பிங்காக வெளியேறி பரபரப்பை கிளப்பியது.

Saturday, 19 October 2013

குமுதம் ஜவஹர் பழனியப்பன் வரதராஜன் மோதலில் கை ஓங்கும் வரதராஜன்



குமுதம் பப்ளிஷர் வரதராஜன் மீதான மோசடி வழக்கு தள்ளுபடி, குமுதம் ஜவஹர் பழனியப்பன் வரதராஜன் மோதலில் கை ஓங்கும் வரதராஜன்

Wednesday, 16 October 2013

சரக்கு ஊற்றி தன் மூன்றாவது பெண் குழந்தையை கொன்ற கொடூர தந்தை

மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த ஆத்திரத்தில் தனது 18 மாத குழந்தைக்கு மதுவை கொடுத்து கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் வசிக்கும் ஷேக் இஸ்மாயில் என்ற மெக்கானிக்கின் மனைவிக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அடுத்த குழந்தையாவது ஆண் குழந்தையாக பிறக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த இஸ்மாயிலிற்கு மூன்றாவதும் பெண் குழந்தை என்ற செய்தி ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நேற்று காலை நிதானம் தெரியாத போதையில் வீட்டுக்கு வந்துள்ள இஸ்மாயில் தனது மூன்றாவது மகளை பார்த்த உடன் தனது பாக்கெட்டில் இருந்த மது பாட்டிலை திறந்து மகளின் வாயில் வற்புறத்தி ஊற்றி, குழந்தையை மது குடிக்க வைத்துள்ளார். இதனால், தொண்டை மற்றும் குடல் எரிச்சல் ஏற்பட்டு குழந்தை வீறிட்டு அழுதுள்ளது. பின்னர், சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழ, பயந்து போன இஸ்மாயில் குழந்தையை உடனடியாக குண்டூர் அரசு ஆஸ்பத்திரி வாசலில் போட்டுவிட்டு தப்பி தலைமறைவாகி விட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை பிழைக்கவில்லை, தற்போது போலிஸ் இந்த தந்தையை தேடி வருகிறார்கள்.

முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சு ஆமைகளுக்கு கடல் எந்த பக்கம் இருக்கிறது என எப்படி தெரியும்?

உயிரினங்களில் உள்ள எல்லா அம்மாக்களும் தங்கள் குஞ்சுகளை அவைகளை பாதுகாத்து பாலூட்டி ஒரு சில காலம் வரை வளர்க்கும், ஆனால் உயிரினங்களிலேயே டுபாக்கூர் அம்மா என்றால் அது கடல் ஆமைகள் தான், கடல் ஆமைகள் இரவில் கரைக்கு வந்து முட்டையிட்டுவிட்டு செல்லும், அதோடு அதன் கடமை முடிந்தது என்று சென்று விடும்.

முட்டை பொறித்து குஞ்சாக வெளிவரும் ஆமையோ கடலை நோக்கி ஒரு ரன்னிங் ரேஸ் ஓடும், இந்த குஞ்சுகளை சாப்பிடவென்றே பறவைகள் கூட்டம் கூட்டமாக பறக்கும், பெரும் அளவில் முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் இந்த பறவைகளுக்கு இரையாகிவிடும், சில நொடிகளில் முடிந்து போய்விடும் வாழ்க்கை, ஆனால் அதையும் தாண்டி அந்த ஆமைக்குஞ்சுகள் கடலினுள் வந்து சேர்ந்து விட்டால் அதன் பிறகு அதன் வாழ்க்கை நூறாண்டுகளையும் தாண்டி இருக்கும். சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதப்பட்டது இது.

மணலில் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுக்கு கடல் எந்த பக்கம் என எப்படி தெரியும்? ஆனால் மிகச்சரியாக அனைத்து குஞ்சுகளும் கடலை நோக்கி ஓடுவது எப்படியென்றால் கடல் ஆமை முட்டையிடும் போதே முட்டையில் தலைவெளிவரும் பக்கத்தை கடலை நோக்கி இருக்குமாறு முட்டையிட்டுவிட்டு சென்று விடும். இது தான் அந்த கடல் ஆமை குஞ்சுகள் முட்டையை உடைத்து வெளியே வந்த உடன் சரியாக கடலை நோக்கி ஓடுவதன் காரணம்.

# சிறிது நேர துன்பங்களை எதிர்கொண்டு கடந்துவிட்டால் பல கால மகிழ்ச்சியான வாழ்வு காத்திருக்கின்றது.

24 X 7 தமிழில் சற்றுமுன் செய்திகள். உண்மைகளை உடனுக்குடன் அறிய சற்றுமுன் செய்திகள் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Saturday, 12 October 2013

நய்யாண்டி - விமர்சனம்

நஸ்ரியாவின் தொப்புளை வைத்து ஏகப்பட்ட பப்ளிசிட்டி பெற்ற நய்யாண்டி திரைப்படம். ஆனால் பட வசூல் போஸ்டர் அடிச்ச காசுக்கு கூட தேறாது. தனது காதலியை திருமணம் செய்து கொண்டு வீட்டினுள் அந்த பெண்ணை வேலைக்காரியாக வைத்திருக்க அது தெரியாத அண்ணன்கள் இருவரும் தம்பி பொண்டாட்டியை உஷார் செய்ய நினைப்பதுமாக நகைச்சுவை என்ற அபத்தமாக செல்கிறது கதை.

தனுஷின் காதலி கம் மனைவியான நஸ்ரியாவை நிச்சயம் செய்திருந்த தாதா நஸ்ரியாவை தூக்கி கொண்டு போக தனுஷ் காப்பாற்ற போக என மிச்சம் கதை.

நகைச்சுவை, திரைக்கதை, பாடல்கள், நஸ்ரியா என எதுவுமே நன்றாக இல்லை. நஸ்ரியாவோட மேக்கப் மேனுக்கு சம்பள பாக்கி வைத்து விட்டார்கள் போல. தனுஷ் மட்டுமே தன் இயல்பான நடிப்பால் மிளிர்கிறார்.

இந்த படத்துக்கு தொப்புள் மட்டும் அல்ல, வேறு எதை காட்டி பப்ளிசிட்டி செய்திருந்தாலும் போஸ்டர் அடிச்ச காசுக்கு கூட வசூல் தேறாது.

# படம் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்து என்ன என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.

மதிப்பெண்கள் : 2.5/5
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media