BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 30 April 2014

திக் விஜய் சிங் காதல் ????



காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் டிவி தொகுப்பாளர் அம்ரிதா ராயுடன் உள்ள தொடர்பை ஒப்புக்கொண்டார் !!!

புதன்கிழமை திக்விஜய் சிங்  மற்றும் அம்ரிதா ராய் சேர்ந்து இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் வந்தது . அதை இன்று டிவிட்டரில் ஒப்புக்கொண்டார் திக்விஜய் சிங் . டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில் எங்கள் இருவருக்கும் உள்ள தொடர்பை ஒத்துக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை . அவர் அவருடைய கணவரின் இருந்து விவகாரத்து பெற உள்ளார் என குறிப்பிட்டு இருந்தார் . இதை ஆமோதித்து அம்ரிதாவும் டிவிட் செய்துள்ளார் .

திக்விஜய் சிங் 67 வயது தனது மனைவியை சென்ற வருடம் இழந்தார் . அம்ரிதா ராய் 43 வயது கணவரிடம் விவாகரத்து கேட்டு உள்ளார் . 

கலிபோர்னியாவில் டிரைவர் இல்லாமல் தானாகேவே இயங்கும் டாக்சிகள் சோதனை ஓட்டம்


டிரைவரே இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க கூகிள் நிறுவனம் திட்டமிட்டிருந்த‌து. அந்த டாக்சிகள் டிரைவர் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் திறன் படைத்தவை. அதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் போன்ற  தொழில் நுட்பங்களை தனது சொந்த நிறுவனம் மூலம் கூகுள் பொருத்தியுள்ளது. இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த கார்கள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து, தற்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா சாலைகளில் சோதனை ஒட்டம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, தானியங்கி தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், அசம்பாவித சூழ்நிலைகளை கையாள்வதற்கு ஏற்ற வகையில் காரின் முன் இருக்கையில் தேர்ச்சி பெற்ற ஒரு டிரைவரும் அமர்ந்து செல்கிறார்.

வெகு விரைவில், மனிதர்களின் தலையீடே இல்லாமல், முற்றிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கார்கள் இயங்கக் கூடிய சாதனை குறியீட்டை எட்டி விடுவோம் என்று இந்த அதிநவீன கார் தயாரிப்பின் திட்ட இயக்குனர் க்ரிஸ் அர்ம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டுக்குள் அனைத்து வகையான சோதனை கட்டங்களும் நிறைவடைந்து, இந்த டிரைவர் இல்லா கார்கள் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைக்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, "அதிமுக வெற்றி" என பேனர் வைப்பு; அச்சகத்திற்கு சீல், 4 பேர் கைது


காஞ்சிபுரம் காந்தி சாலையில் காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டு திங்கள்கிழமை டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது. அதில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. வாக்கு எண்ணிக்கைக்கு ஏறக்குறைய 20 நாட்கள் உள்ள நிலையில், வெற்றி பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகாரின்பேரில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் பானு தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று 4 பேனர்களை பறிமுதல் செய்தனர். அதை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் பரிமளம் மீது விஷ்ணுகாஞ்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய டிஜிட்டல் பேனரை அச்சிட்ட நிறுவனம் காஞ்சிபுரம் மடத்து தெருவில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. செவ்வாய்க்கிழமை அங்கு போலீஸாருடன் சென்ற வட்டாட்சியர் பானு, டிஜிட்டல் பேனர் அச்சிட்ட நிறுவனத்துக்கு சீல் வைத்தார். நிறுவனத்தில் இருந்த உரிமையாளர் கோபிநாத், அவரது உதவியாளர் எத்திராஜ் ஆகியோரை போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின்னர் டிஜிட்டல் பேனர்களை ஏற்றி வந்த வாகனத்தின் உரிமையாளர் சண்முகம், அந்த வாகனத்தின் ஓட்டுநர் வெங்கடேஷ் உள்பட அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலத்தின் வழியில், தமிழக அரசும் மதுவிலக்கை துணிச்சலாக நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்


 மதுவிலக்கை அமல்படுத்த கேரள மாநிலம் வழியில் தமிழக அரசு துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, மாநிலத்தில் உள்ள 752 மதுக் குடிப்பகங்களில் 418 குடிப்பகங்களை அதிரடியாக மூட வைத்துள்ளார். தாய்மார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குடிப்பகங்களை மூட உத்தரவிட்டதற்காக முதல்வர் உம்மன்சாண்டிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் தமிழகத்தின் நிலையை நினைத்தால் வேதனையும், வருத்தமும் தான் விஞ்சுகிறது. மதுவால் தமிழகம் எதிர்கொண்ட சீரழிவுகள் ஏராளம்.

சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் முதலிடம், சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் முதலிடம், குடியால் இறந்த கணவர்களால் உருவான இளம் விதவைகளின் எண்ணிக்கையில் முதலிடம் என எத்தனையோ அவமானச் சின்னங்களை தமிழகம் சுமந்து கொண்டிருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலக்கு வைத்து மது விற்பனை செய்வதில் தான் தமிழக ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.

மது வருமானத்தில் தான் இலவசத் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வாக்குகளை வாங்க முடியும் என்ற கீழ்த்தரமான எண்ணம் இதற்கு ஒரு காரணமென்றால், அ.தி.மு.க. ஆண்டாலும், தி.மு.க. ஆண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களே மது ஆலைகளை நடத்தி கோடிக்கணக்கில் லாபம் பார்க்கத் துடிப்பது இன்னொரு காரணம் ஆகும்.

கேரள அரசுக்கு கடந்த ஆண்டு வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.35,542 கோடி. இதில் மது விற்பனை மூலம் கிடைத்த வருவாய் மட்டும் ரூ.9300 கோடி. அதாவது நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகம். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் கடும் நிதி நெருக்கடி ஏற்படும் எனத் தெரிந்தும், முழுமையான மதுவிலக்கின் முதல் கட்டமாக குடிப்பகங்களை கேரள அரசு மூடியிருக்கிறது.

ஆனால், தமிழக அரசோ கடந்த ஆண்டு கிடைத்த ரூ. 23,401 கோடி வருவாய் போதாதென்று, நடப்பாண்டில் ரூ.26,292 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து தெருக்கள் தோறும் கடைகளைத் திறந்து மது விற்பனை செய்து வருகிறது. மக்கள் நலனில் இரு மாநில அரசுகளுக்குமான வித்தியாசம் இதுதான்.

மது விற்று, மக்களை சீரழிப்பதன் மூலம் வருவாய் ஈட்டுவது மன்னிக்க முடியாத பாவம் என்பதை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு காட்டியதைவிட அதிக துணிச்சலை தமிழக அரசு காட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதங்களில் முழுமையான மது விலக்கு ஏற்படுத்தப்படும் என்பதை கொள்கை முடிவாக அறிவித்து, மாதத்திற்கு 20 விழுக்காடு கடைகள் வீதம் மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்."

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

மோடியின் பேச்சு கோபத்தை தூண்டும் வகையில் உள்ளது, கண்டிக்கத்தக்கது- பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் காட்டம்


சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,"உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காமல், ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். மேலும், அமெரிக்க அரசு பின் லேடனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதா? இந்த அரசு முதிர்ச்சி இல்லாமல் செயல்படுகிறது. நான் பிரதமரானால் பாகிஸ்தானிலிருந்து தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டு வருவேன்" என்று கூறினார்.

இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் கூறுகையில், "மோடி முதலில் தாவூத் எங்கு இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். தொடர்ச்சியாக அவரது பேச்சு கோபத்தை தூண்டும் வகையில் உள்ளது. மோடியின் பேச்சு கண்டிப்புக்குரியதாகவே இருக்கிறது. இந்தியாவின் முக்கிய கட்சியின் பிரதமர் வேட்பாளர் இனியும் ஒருமுறை பாகிஸ்தானை விரோதத்தின் உச்சமாக பாவித்து பேசுவது கண்டிக்கதக்கது. பாகிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் என்ற முயற்சியில் நாங்கள் மேற்கொள்ளும் செயல்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பாகிஸ்தான் ஒரு போதும் இம்மாதிரியான கருத்துக்களை வரவேற்காது. பாகிஸ்தான் பலவீனமான நாடும் அல்ல, இத்தகைய அச்சுறுத்தல்கள் எங்களை பயப்படவும் வைக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

சீரஞ்சீவி வரிசையில் நிற்க தவறியதால் , கண்டித்த இளைஞர் , பணிந்தார் சீரஞ்சீவி


இன்று ஆந்திராவில் ஏழாம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது . அப்போது  நடிகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீரஞ்சீவி தனது குடும்பத்துடன் வாக்களிக்க வந்தார் . அப்போது அவர் வரிசையில் நிற்காமல் முன்னே செல்ல முயற்சித்தார்  . அப்போது ராஜ கார்த்திக் என்னும் இளைஞர் அவரை தடுத்து நிறுத்தி , " நீங்கள் அமைச்சர் தான் , மூத்த குடிமகன் இல்லை , எனவே வரிசையில் வரவும் எனக் கூறினார் . இதை அருகில் இருந்து பார்த்த மக்கள் கைத்தட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர் . இதனால் சீரஞ்சீவி பின்னே சென்று வரிசையில் நின்றார் .

சீரஞ்சீவி பின்னே அளித்த பேட்டியில் தான் தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என பார்க்க சென்றதாக கூறினார் 

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு மாழ்பழம் வழங்கி நூதன போராட்டம்: ஐரோப்பிய யூனியன் தடைக்கு எதிர்ப்பு


இந்தியாவில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள் பெட்டிகளில் பூச்சிகள் இருந்ததாகவும்,  பூச்சிக் கொல்லி மருந்தும் பயன்படுத்தப்பட் டிருந்ததாகவும் ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் இருந்து அல்போன்ஸா மாம்பழம் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. வியாழக்கிழமைமுதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.

இதைக் கண்டித்து பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கெயித் வாஸ் தலைமையில் பிரதமர் டேவிட் கேமரூன் இல்லத்துக்குச் சென்ற இந்திய வியாபாரிகள் 2 பெட்டிகளில் அல்போன்ஸா மாம்பழங்களை வழங்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

"அத்வானியின் தொகுதியில் வாக்களிப்பதை மிகப்பெரிய ஆசியாக கருதுகிறேன்" - காந்திநகரில் ஓட்டளித்த மோடி


நாடு முழுவதும் 89 மக்களவைத் தொகுதிகளிலும், தெலங்கானா சட்டமன்றத் தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் இன்று காலை 9 மணியளவில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களித்தது குறித்து தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில், "அத்வானியின் தொகுதியில் வாக்களிப்பதை மிகப்பெரிய ஆசியாக கருதுகிறேன்" என பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மோடி பேசியதாவது:

"மத்தியில் பாஜக நிலையான ஆட்சி அமைக்கும். இந்த தேர்தல் நாட்டின் விதியை மாற்றி அமைக்கும். தாய் - மகன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. தேச நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்து கேடுகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அகற்றும். நான் தேசத்துக்கு உள்ள அச்சுறுத்தலை போக்க நினைக்கிறேன் ஆனால் காங்கிரஸ் கட்சி என்னை அகற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. குஜராத் மக்களுக்கு நன்மை செய்துள்ளது போல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காகவே தேர்தலில் வாக்களித்துள்ளேன்" என்றார்.

ரஜினியில் அடுத்த படம் லிங்கா; மே 3-ல் படப்பிடிப்பு தொடங்க திட்டம்


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு 'லிங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகைகள் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ. ஆர்.ரஹ்மான். கோச்சடையான்' படம் மே 9-ல் வெளியாகவுள்ள நிலையில், மே 2-ல் லிங்கா படத்துக்கான பூஜையை நடத்தி, மே 3-ல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

லிங்கா படத்தின் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார். பிரியாமணி நடிப்பில் வெளியான 'சாருலதா' படத்தினை இயக்கியவர் பொன். குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைப் படையினரால் நரேந்திர மோடிக்கு ஆபத்து

நரேந்திர மோடிக்கு தற்கொலைப் படையினரால் ஆபத்து உள்ளது, அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) தலைவர் அசோக் சிங்கால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய உள்துறை அமைப்புகள் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அரசுக்கு தகவல்கள் அளித்துள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதுபோல் இந்தத் தாக்குதல் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய முஜாகிதீன், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ, நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் சதித் திட்டங்களை தீட்டியுள்ளனர். தாவூத் இப்ராகிமை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வருவதாக மோடி அண்மையில் பேசினார். அதன் பிறகு தீவிரவாதிகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

நீண்ட காலமாக நமது நாட்டின் மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் உள்ளது. இதை அரசு புரிந்துகொண்டு தீவிரவாத அமைப்புகளை செயலிழக்கச் செய்து அதன் முழு இயக்கத்தையும் கூண்டோடு ஒழிக்க வேண்டும். இதன் முக்கிய தலைவர்கள் மற்றும் தீவிரவாதிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி மோடியின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும்.

நரேந்திர மோடி தொடர்ந்து பல ஆண்டுகளாக தீவிரவாதிகள் குறிவைத்துள்ள பட்டியலில் இருந்து வருகிறார். அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற மோடியின் பிரச்சாரக் கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

இந்திய முஜாகிதீன் தீவிரவாதக் குழுவின் தலைவர் யாசின் பட்கல், ‘மோடியை கொல்வதற்காக எதையும் செய்வோம். எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்போம்’ எனக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் தீவிரவாதியான மவுலானா மசூத் அசார், ‘மோடி பிரதமரானால் அவரைக் கொல்வோம்’ என அறிவித்து அதற்காக தற்கொலைப் படையினருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

எனவே இதுகுறித்து நாட்டின் மிகவும் உயரிய அலுவலகமான குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளோம். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மூலமாக நரேந்திர மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ப.சிதம்பரத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு 5 ஆண்டுகளாகியும் முடிவுக்கு வரவில்லை


கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பல தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் 5 ஆண்டுகால மக்களவை உறுப்பினர் பதவியும் விரைவில் முடியப் போகிறது. எனினும் அவரது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.

2009 தேர்தலில் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன்தான், இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். தேர்தலில் பல முறைகேடுகளை செய்தே ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளதாகவும், ஆகவே அவரது வெற்றியை செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கண்ணப்பன் கோரியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுவரை 140 தடவைக்கும் மேல் விசாரணைக்காக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தேர்தல் வழக்கை, 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86(7)-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் பல தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வராமல் உள்ளன.

ப.சிதம்பரத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு நீண்டு கொண்டே செல்வதற்கான காரணம் குறித்து அவரது தரப்பு வழக்கறிஞர் ஆர்.தனபால் ராஜ் கூறுகையில், ‘‘வழக்கைத் தொடர்ந்த மனுதாரர் தரப்பிலேயே பலமுறை வாய்தா வாங்குவது தாமதத்துக்கு முக்கிய காரணம் என்றார்.

ராஜ கண்ணப்பன் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் ஜி.சரவணகுமாரிடம் கேட்டபோது, “நாங்கள் தேவையற்று வாய்தா வாங்குவதில்லை. எங்கள் மனுவில் கூறியிருந்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என்று கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை முடியவே 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதன் பிறகுதான் பிரதான மனு மீது விசாரணை தொடங்கியது. ராஜ கண்ணப்பன் 40 தடவைக்கும் மேல் விசாரணையில் ஆஜராகியுள்ளார். ஆகவே, தாமதத்துக்கு நாங்கள்தான் காரணம் என கூறுவது சரியல்ல” என்றார்.

“ஆண்டுக் கணக்கில் வழக்கு நீண்டு கொண்டே செல்வதற்கு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மாறி மாறி வாய்தா வாங்குவதுதான் பிரதான காரணம்” என்கிறார் இந்திய தேர்தல் ஆணையத்துக்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன்.

இன்று ஏழாம் கட்ட தேர்தல் !!

இன்று நடைபெறும் 7 வது கட்ட வாவாக்குப்பதிவில் ஒன்பது மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது .

ஆந்திராவில் 17 தொகுதிகளிலும் , பீகார் 7 தொகுதிகளிலும் , குஜராத்தில் 26 தொகுதிகளிலும் ,  காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் , பஞ்சாபின் 13 தொகுதிகளிலும் , உ.பி யில் 14 தொகுதிகளிலும் , மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும் , டாமன் டையூ
மற்றும் தாதர் நகர் ஷாவேலி ஆகிய இடங்களில் தலா ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது .

இன்றைய தேர்தலில் பங்குபெறும் விஐபி :

அத்வானி - காந்தி நகர்
சோனியா - ரேபரேலி
மோடி       - வதோதரா
ராஜ்நாத் சிங் - லக்னோ
உமாபாரதி - ஜான்சி
சந்திர சேகர ராவ் - மேடக்


இன்று தெலுங்கானாவில் முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது .

Tuesday, 29 April 2014

பாமக போட்டியிட்ட தொகுதிகளில் வன்னியர்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறைகள்- ராமதாஸ்

பாமகவினருக்கு எதிராக திட்டமிட்ட வன்முறைகள் நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சியும், நிம்மதியும் அளிக்கும் வேளையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வன்னியர்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் வன்முறைகள் கவலையளிக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் இத்தகைய வன்முறைகள் நடத்தப்படுவது இயல்பான ஒன்றாக தோன்றவில்லை.

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொம்மிடி பகுதியில் தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் எடுத்துசென்ற அ.தி.மு.க.வினரை தடுத்ததற்காக பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதியமான் கோட்டை என்ற இடத்தில் ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளை தடுக்க முயன்ற பா.ம.க.வினரை அந்த ஊர் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி அப்பாவி பா.ம.க.வினர் 3 பேரை கைது செய்திருக்கிறார். பென்னாகரத்திலும் இருவர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட நெமிலி, ஆரணி தொகுதியில் நடுக்குப்பம், அவ்வையார் குப்பம் ஆகிய இடங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்னியர்களை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக நியாயம் கேட்கச் சென்ற வன்னியர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உள்ளூரில் வாக்களிக்க வந்த சென்னைஉள்ளிட்ட வெளியூர்களில் பணியாற்றும் இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர்களின் எதிர்காலம் பாழாகியிருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் பெருமளவில் வாக்குகள் பதிவாகி இருப்பதால் பா.ம.க. அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதனால் கலக்கம் அடைந்துள்ள சில சக்திகள் பா.ம.க.வினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஆளுங்கட்சியினரும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காவல்துறை மூலம் பா.ம.க.வினர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து தங்களது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கின்றனர். தோல்வி பயம் காரணமாக இவ்வாறு செய்வது வாக்களித்த மக்களையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும்செயலாகும்.

எனவே, வட மாவட்டங்களில் நிகழும் வன்முறைகளை தடுப்பதுடன், அது குறித்து நியாயமான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதுடன், கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் - பாஜக இடையே மறைமுக உடன்பாடு: கேஜ்ரிவால்

வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, வாரணாசியில் குண்டர்கள் மூலம் மக்களையும் ஆம் ஆத்மி தொண்டர்களையும் அச்சுறுத்தும் முயற்சிகள் நடக்கின்றன என்று கூறியிருந்தார். மேலும் அவர் கூறியதாவது:

"மோடி போட்டியிடும் தொகுதியில் சோனியாவும், சோனியா போட்டியிடும் தொகுதியில் மோடியும் பிரச்சாரம் மேற்கொள்ளாதது ஏன்?

ராபர்ட் வதேரா நில பேர விவகாரத்தில் நரேந்திர மோடி தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு அக்கறை இருந்தால், ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசு, வதேராவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?

அதேபோல், பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் மற்றும் அதானி விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்பி வரும் காங்கிரஸ், அது குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் அழுத்தம் தராதது ஏன்?

பாஜகவும் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கிறார்களே தவிர, எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. இதில் இருந்தே அவர்கள் கைகோத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே மறைமுக உடன்பாடு உள்ளது.

டெல்லியில் ஷீலா தீட்சித், முகேஷ் அம்பானிக்கு எதிராக என்னால் வழக்குத் தொடர முடிந்தது. அப்படியிருக்க, கடந்த 4 மாதங்களாக வதேராவுக்கு எதிராக ராஜஸ்தானின் பாஜக அரசால் வழக்குப் பதிவு செய்ய முடியாதது ஏன்?

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் பேசி இருக்க வேண்டும் : ஜெய்ராம் மகேஷ் கவலை

காங்கிரசின் கிராம வளர்ச்சி துறை அமைச்சர் இன்று அளித்த பேட்டியில், காங்கிரசு கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சி மக்களிடையே நன்றாக தொடர்பில் இல்லை . பிரச்சினைகளுக்கான பதில்கள் பலமாக இல்லை . பிரதமர் மற்றும் மற்ற தலைவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக பேசி இருக்க வேண்டும் என்றார் . பிரியங்கா காந்தி நன்றாக பேசியும் மக்களிடையே நல்ல தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் , ஆனால் ராகுல் தான் கட்சி தலைவர் என்றார் .

தொலைகாட்சி நேரலை போது, தீயிட்டுக்கொண்டு கட்சி தலைவரையும் கட்டிப்பிடித்த தொண்டர்


லக்னோவில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் 'ஜன்மத் 2014’ என்ற நேரலை விவாத நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்கபதற்காக பல்வேறு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரத்தில், விவாதம் தொடர்பாக உணர்ச்சிவசப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இளம் தொண்டர் ஒருவர், தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீயிட்டு பின் அங்கிருந்த பகுஜன் சமாஜ் தலைவர் கம்ரூசம்மா பவுஜீயை கட்டிப்பிடித்தார்.

தொண்டரின் இந்த செயலால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தீயிட்டுக் கொண்ட தொண்டர், துர்கேஷ் என்று அடையாளம் காணப்பட்டார். இந்த சம்பவத்தில், துர்கேஷ் மற்றும் பகுஜன் தலைவர் பவுஜ் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

மோடியை மீண்டும் விமர்சித்தார் மம்தா !!

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மோடியும் மம்தா பானர்ஜியும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர் .

இன்று மம்தா அளித்த பேட்டியில் , மோடி பிரதமர் ஆனால் நாடு முழுவதும் தீக்கு இரையாக்கப் படும் .

ஏற்கனவே மோடியை கசாப்புக் கடைக்காரர் என மம்தா குறிப்பிட்டு இருந்தார் .

மோடியை பார்த்து கசாப்புக்காரர்கள் வெட்கப்படுகின்றனர்- லாலு பிரசாத் யாதவ்


ராஷ்டீரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ் " நாட்டில் உள்ள கசாப்புக்கடைக்காரர்கள் எல்லாம், நரேந்திர மோடியைப் பார்த்து வெட்கப்படுகின்றனர். மோடியா இந்நாட்டின் பிரதமர் ஆகப் போகிறார் என்று கசாப்புக்க்டைக்காரர்கள் திகைத்துள்ளனர்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 'குஜராத்தின் கசாப்புக்கடைக்காரரால் அவரது மனைவியையே பார்த்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் நாட்டை எப்படி கவனிப்பார்?' என்று கூறினார்.

முன்னதாக, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 'குஜராத் மாநிலத்தின் கசாப்புக்காரர்' என்று திரிணமூல் காங்கிரஸும், மம்தா பானர்ஜீயின் ஓவியம் தொடர்பாக பாஜகவும், ஒருவரை ஒருவர் சாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான் சிறப்புக் காட்சியை நரேந்திர மோடி பார்க்க ஏற்பாடு

சென்னையில் ரஜினியை சந்தித்து தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த குஜராத் மாநில முதல் மந்திரியும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மசாலா படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்றும், குறிப்பாக ரஜினியின் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தை பார்த்த பிறகு அவரது ரசிகர்களில் ஒருவராக மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘கோச்சடையான்’ படத்தை பார்க்க மோடி சமீபத்தில் விருப்பம் தெரிவித்ததாகவும், அவருக்கான சிறப்புக் காட்சிக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  மே 8-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள சிறப்புக் காட்சியில் இப்படத்தை நரேந்திரமோடிக்கு திரையிட்டு காட்ட முடிவெடுத்துள்ளனர். இந்த சிறப்புக் காட்சியில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் படத்தைக் கண்டு ரசிக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை ‘கோச்சடையான்’ படத்தை வெளியிடும் மும்பை ஈரோஸ் இண்டர்நேஷனல் பிக்சர்ஸ் புரெடக்‌ஷன் நிறுவனம் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர, குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் மோடிக்காக இப்படத்தை திரையிட்டுக் காட்டப் போவதாகவும், இந்த சிறப்புக் காட்சியில் ரஜினி பங்கேற்க மாட்டார். படத்தின் இயக்குனர் சவுந்தர்யா அஷ்வின் இதில் பங்கேற்பார் என்று மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

16 வயது கர்ப்பிணி பெண்ணை அவளது தாயே வெட்டி கொலை


மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள முட்கல் கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம் பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்று, அவளது நகைகளை திருடிச் சென்று விட்டதாக அந்த பெண்ணின் தாயார் சில தினங்களுக்கு முன்னர் போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறவே, சந்தேகப்பட்ட போலீசார்,  புகார் அளித்த அந்த பெண்ணின் தாயாரிடமே விசாரணை நடத்திய போது, அவர் அதிர்ச்சிகரமான உண்மையை ஒப்புக் கொண்டார். அதாவது , அவர் தனது மகள் 4 மாத கர்ப்பமாக இருந்ததாகவும், கருவுக்கு காரணமானவன் யார்? என்ற உண்மையை மறைத்து, கருவையும் கலைக்க மறுத்த அவளை உறங்கும் போது கோடாரியால் வெட்டிக் கொன்று விட்டு, கொள்ளையர்கள் மீது பழியை போட முயன்றதாகவும் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து, அந்த பெண்னை கைது செய்த போலீசார்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிரேமலதா விஜயகாந்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா (வயது 48), சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தேன். கடந்த 14-ந்தேதி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் பிரசாரம் செய்தேன். அப்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான நிவாரண தொகை வழங்கப்படவில்லை. இந்த நிவாரண தொகைகள் அனைத்தும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் உறவினர்களுக்கும், ஆளும் கட்சியினருக்கும், விவசாய நிலமே இல்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என்று பேசினேன். எனக்கு கிடைத்த தகவல்களை கொண்டு இவ்வாறு பேசினேன். ஆனால், நான் பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் விதமாக பேசியதாக ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர் செய்யது என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமைச்சரின் நிர்பந்தத்தால், என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் விதமாகத்தான் நான் பேசினேன். அமைதியை சீர்குலைக்கும் விதமாக எதுவும் பேசவில்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், பிரேமலதா விஜயகாந்திற்கு முன் ஜாமீன் வழங்கினார்.  மேலும்,  வழக்கு விசாரணைக்கு தேவைப்படும்போது மட்டும், கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தமிழகத்தில் 3,793 வழக்குகள் பதிவு


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மார்ச் 5-ந்தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அன்றிலிருந்து இதுவரை, பொது சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவது போன்ற விதிகளை மீறியதாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் வந்தன. அவற்றின் அடிப்படையில் 2,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் தமிழகமெங்கும் வாகன விதிகளை மீறியதாக 262 வழக்குகள், ஒலிபெருக்கி விதிகளை மீறியதாக 20 வழக்குகள், சட்டவிரோதமாக கூட்டம் நடத்தியதாகவும், பேசியதாகவும் 81 வழக்குகள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுத்ததாக 90 வழக்குகளும், மேலும் சில விதிமீறல்கள் தொடர்பாக 436 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆக மொத்தத்தில் பல்வேறு தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 3,793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொழுதுபோக்குக்காக நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ராகுல் வீடியோக்களை பாருங்கள். நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.

உத்தரப் பிரதேசம் ஜான்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் உமா பாரதியை ஆதரித்து கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் அவர் பிரச்சாரம் செய்தார். அந்த பொதுக்கூட்டங்களில் அவர் பேசியதாவது:

இந்தி டி.வி. ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான கபில் சர்மாவின் நிகழ்ச்சி விரைவில் நிறைவு பெற்றுவிடும் என்று கருதுகிறேன். ராகுல் காந்தியின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை ஒளிபரப்பினால் கபில் சர்மா காணாமல் போய்விடுவார். இப்போதைய தேர்தல் பிரச்சார சூடு எல்லாம் பறந்துபோய்விடும். பொழுதுபோக்குக்காக நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ராகுல் வீடியோக்களை பாருங்கள். நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். சில நேரங்களில் நீங்கள் மனஇறுக்கத்தில் இருந்தால் உடனடியாக ராகுலின் பேச்சு களை கேளுங்கள். அவரது கணித அறிவின்படி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையே 6 கோடிதான். இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 125 கோடி. அதையும் தாண்டி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக இருப்பதாக ராகுல் கூறுகிறார். எந்த மாதிரியான நபரை தேர்தல் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது என்பது எனக்குப் புரியவில்லை.

இதேபோல் குஜராத்தில் லோக்ஆயுக்தா இருந்திருந்தால் நான் சிறைக்குச் சென்றிருப்பேன் என்று ராகுல் கூறியிருக்கிறார். குஜராத் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஒருவரை குற்றவாளியாக அறிவித்தது மாநில லோக்ஆயுக்தாதான் என்பதை ராகுலுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அவரது மகன்கூட தற்போது மத்திய அரசில் அமைச்சராக உள்ளார். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதே ராகுலுக்கு தெரியவில்லை.

குஜராத்தில் நர்மதா நதி அணைத் திட்டத்தைச் செயல்படுத்தினால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு மாநிலத்தில் பாஜக ஆட்சியை அசைக்க முடியாது. அதனால் அந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என்று சோனியாவுக்கு ஒருவர் (அகமது படேல்) ஆலோசனை கூறியுள்ளார். அதனால்தான் அந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு இன்றுவரை அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கிறது. நான் டீ விற்றேனா, இல்லையா என்பது குறித்து விசாரிக்க சுமார் 100 பேரை எனது சொந்த ஊரான வட்நகருக்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது.

இவ்வாறு நரேந்திர மோடி பேசியிருந்தார்.

பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து !!

இன்று காலை 6.25 மணி அளவில் பிரதமர் அலுவலகத்தில் யுபிஎஸ்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தீ பிடித்தது . விரைந்து வந்த ஆறு காவல்துறை வண்டிகள் தீயை அணைத்தனர் . யாருக்கும் காயம் ஏற்படவில்லை .

Monday, 28 April 2014

மேஜர் முகுந்த் உடலை கொண்டு வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் எழுதிய உருக்கமான கடிதம்

கடந்த வாரம் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்தவரான மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை கொண்டு வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் சீனிவாசன், முகுந்தின் தாய்-தந்தையருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த க‌டிதத்தில் கேப்டன் கூறியதாவது:

பாசத்திற்குரிய தந்தை மற்றும் தாய் அவர்களுக்கு, உங்கள் வீரமகனின் உடலை கொண்டு வரும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

முகுந்தின் ஆன்மாவை இறைவன் சாந்தியடையவைப்பதுடன் உங்களுக்கு மிகுந்த வலிமையும் தருவார் என்று நம்புகிறேன். தயவு செய்து என்னையும் உங்கள் மகன்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

மின்வெட்டினால் மக்கள் அவதியுறுகிறார்கள்; அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் ஜெ. -ராமதாஸ்

மக்கள் மின்வெட்டினால் அவதியில் இருக்கும் போது, அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், முந்தைய ஆட்சியையும், மத்திய அரசையும் குறை கூறிக் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக செயற்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு செயல்படுத்தப்படுகிறது.

மின்வெட்டிலிருந்து தற்காலிகமாக விலக்களிக்கப்பட்டிருந்த சென்னை நகரிலும் கடந்த இரு நாட்களாக 3 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவதாகக் கூறி 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அடுத்த 3 மாதங்களில் மின்வெட்டு சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். அதன்பின் 3 மாதங்களுக்கு ஒருமுறை வீதம் இதுவரை 11 முறை மின்வெட்டு விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என கூறி வந்தார். ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் எழுதிய எழுத்துக்களாக கலைந்து போக, மின்வெட்டு மட்டும் நிரந்தரமாக நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் 110 டிகிரி கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் புழுக்கத்தில் வெந்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, விசைத்தறியில் தொடங்கி பெரும் தொழிற்சாலைகள் வரை அனைத்து மட்டங்களிலும் கடுமையான உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தவிக்கின்றனர்.

ஆனால், ஜெயலலிதா மின்வெட்டை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், முந்தைய ஆட்சியையும், மத்திய அரசையும் குறை கூறிக் கொண்டு கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

மின்வெட்டை போக்குவதற்கான யோசனைகளை பட்டியலிட்டு கடந்த 3 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளேன்; பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அ.தி.மு.க. அரசு இவற்றில் எந்த யோசனையையும் செயல்படுத்தவில்லை.

திட்டமிட்டு செயல்படுத்தினால் எந்த ஒரு மின்திட்டத்தையும் 30 மாதங்களில் நிறைவேற்ற முடியும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது 12,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மின் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அவற்றை அரசு முழுவீச்சில் செயல்படுத்தியிருந்தால் தமிழகம் இன்று உண்மையாகவே மின்மிகை மாநிலமாகியிருக்கும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஒரே ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கட்டுமான பணிகள் கூட தொடங்கப்படவில்லை.

எண்ணூரில் 660 மெகாவாட் மின்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு, ஓராண்டுக்கு பிறகு தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. 2640 மெகாவாட் திறன்கொண்ட மேலும் இரு திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு 9 மாதங்களாகியும் இதுவரை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இதனால், அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய முடியாது என்பது தான் உண்மை நிலை. ஆனால், முதல்வரோ 99% மின்வெட்டு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் தமிழகம் மின்மிகை மாநிலமாகும் என்றும் கூறி ஏமாற்றி வருகிறார்.

இவையெல்லாம் மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெற திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகங்கள் என்பதை வாக்குப்பதிவு முடிந்ததற்கு அடுத்த நாளே மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்தே மக்கள் புரிந்து கொண்டிருப்பர்.

மின்வெட்டைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜெயலலிதா, 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்த ஆயத்தமாகிவிட்டார். தமிழ்நாடு மின் வாரியத்தின் இழப்பு ரூ.75,000 கோடியாக அதிகரித்து விட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது மின்வாரியத்தின் இழப்பு ரூ.40,375 கோடியாக இருந்தது. இதை ஈடுகட்டுவதற்காகத் தான் ரூ.7874 கோடிக்கு மின்கட்டண உயர்வை ஜெயலலிதா அறிவித்தார். இதற்குப் பிறகும் 3 ஆண்டுகளில் மின்வாரியத்தின் இழப்பு இப்போது ரூ.75,000 கோடியாக உயர்ந்திருக்கிறது என்றால் ஜெயலலிதா ஆட்சியின் நிர்வாகத்திறன் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தவறியது, தட்டுப்பாட்டைப் போக்க தனியாரிடமிருந்து அதிக விலையில் மின்சாரத்தை வாங்குவது, மின்சாரக் கொள்முதலில் ஊழல் தலைவிரித்தாடுவது ஆகியவையே மின்வாரியத்தின் இழப்பு அதிகரித்ததற்கு காரணமாகும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாத ஜெயலலிதா, மின்பற்றாக்குறைக்குத் தீர்வு மின்வெட்டு, இழப்பை ஈடுசெய்ய கட்டண உயர்வு என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்.

அதிலும், தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் வரை காத்திருந்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு இவற்றை செய்ய முயலுவதன் மூலம் ஜெயலலிதா அவரது உண்மை முகத்தை காட்டி விட்டார். இவ்வாறு செய்வதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.

எனவே, மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட்டு, மின்வெட்டை போக்குவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். மாறாக மக்களிடம் வாக்குகளை பெற்றாகிவிட்டது என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டால், அவருக்கு மக்கள் சரியான பதிலடி தரத் தயங்க மாட்டார்கள்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

குஜராத் குறித்து அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, ராகுல் வேலைவாய்ப்பு பற்றியும், லோக்ஆயுக்தா பற்றியும் பேசுவது சரியல்ல.- மோடி

ராகுல் கணக்குபடி குஜராத்தில் 27,000 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு இல்லையாம், ஆனால் அங்கு இருப்பதே 6கோடி பேர் தான், இது போன்ற ஆட்களை வைத்து கொண்டு எப்படி நாட்டை முன்னேற்றுவது? -மோடி

குஜராத்தின் படான் மக்களவைத் தொகுதியில் இன்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது இறுதிக் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, "உங்களுக்கு மிகவும் சோர்வாக இருந்தால், அதைப் போக்குவதற்கு ராகுல் காந்தியின் பேச்சை கேட்கலாம். அவரது கணக்குப்படி, குஜராத்தில் 27,000 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையாம். ஆனால், குஜராத்தின் மொத்த மக்கள் தொகையே 6 கோடிதானே? இந்த மாதிரியான ஆட்களை வைத்துக்கொண்டு நாட்டை எப்படி முன்னேற்றுவது? குஜராத் குறித்து அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, ராகுல் வேலைவாய்ப்பு பற்றியும், லோக்ஆயுக்தா பற்றியும் பேசுவது சரியல்ல.

அரசியல் ஆதாயத்திற்காக நர்மதை அணை விவகாரத்தில், சோனியா அரசு குஜராத்திற்கு துரோகம் இழைத்துவிட்டது. குஜராத் மாநிலம், தண்ணீர் இன்றி தவிப்பதாக கூறுகிறார். சோனியா சவுராஷ்ட்ராவுக்கு ரயிலில் தண்ணீர் அனுப்பினார். ஆனால், தற்போது பெரிய குழாய்கள் மூலமாக மக்களுக்கு தண்ணீர் பாய்கிறது.

ரயிலில் தண்ணீர் விநியோகம் செய்யும் மோசமான யோசனையை, சோனியாவின் ஆலோசகர் (அகமது படேல் பெயரை குறிப்பிடாமல்) தான் தந்துள்ளார். அம்மா - மகனின் அரசு மற்றும் அவர்களின் ஆலோசகர் மேற்கொண்டுள்ள திட்டம் நாட்டையே சீரழித்துவிட்டது.

நர்மதையை சுற்றி வேலி அமைக்க நாங்கள் திட்டமிட்டபோது, எதற்காக அதனை தடுத்தீர்கள்? அப்படி செய்திருந்தால், எங்களுக்கு 4 மடங்கு தண்ணீர் கிடைத்திருக்கும். அப்படி நாங்கள் செய்தால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு குஜராத்தில் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும் என்று உங்கள் ஆலோசகர் கூறினாரா?

காங்கிரஸ் என் மீது பழி சுமத்த ஏதேனும் விவகாரம் சிக்காதா? என்று பார்த்துக்கொண்டிருக்கிறது. நான் டீ விற்றேனா? இல்லையா? என்று ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக வத்நகருக்கு (மோடியின் சொந்த ஊர்) 100 நபர் கொண்ட குழுவை, காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது" என்றார் மோடி.

செங்கோட்டை குண்டு வெடிப்பு நிகழ்த்திய தீவிரவாதி தற்பொழுது தூக்கிலிடப்பட மாட்டார் - உச்ச நீதிமன்றம்

2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் லக்‌ஷர் இ-தொய்பா அமைப்பச் சார்ந்த மொகமது ஆரிப் என்பவரை 2000 ஆம் ஆண்டு டில்லியில்  செங்கோட்டையில் குண்டு வைத்ததற்காக தூக்கு தண்டனை விதித்தது .

தூக்கு தண்டனையை எதிர்த்து ஆரிப் சார்பாக வழங்கப்பட்ட கருணை மனுவை இன்று எடுத்தது நீதிமன்றம் . தற்போது  ஆரிப் தூக்கிலிடப்பட மாட்டார் என கூறி வழக்கை அரசியல்  சாசன அமர்வுக்கு மாற்றியது .

குஜராத்தில் வரும் 30ம் தேதி நடக்கும் தேர்தலையொட்டி 1,80,000 பேர் முன்னெச்சரிக்கையாக கைது


குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 30 ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் அங்கு அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 1, 80,000 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களில், 19 ஆயிரம் பேர் ஆபத்தானவர்கள் மற்றும் கிரிமினல் பின்னனி உடையவர்கள் என்று அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி இன்று நான்கு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் குஜராத்தில் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தும் நோக்கிலும் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியிடமிருந்து எந்த சலுகையையும் பெறவில்லை- அதானி


குஜராத்தில் ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.1 என்ற விலையில், அதாவது ஒரு மிட்டாயின் விலையில் தொழிலதிபர் அதானிக்கு நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும் பிரதிபலனை எதிர்பார்த்து மோடியின் பிரச்சார செலவை அதானி ஏற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசிய கௌதம் அதானி நேற்று கூறுகையில், “குஜராத்தின் கட்ச் பகுதியில் கடலோர முந்த்ரா நகருக்கு அருகில் 1993-ல் எங்கள் தொழில் நிறுவனங்களுக்காக நிலம் வாங்கினோம். இது நரேந்திர மோடி ஆட்சியில் நில வங்கிக்காக திரட்டிய 15,946 ஏக்கரில் 3-ல் 1 பகுதியாகும். எந்த விவசாயிடம் இருந்தும் ஒரு ஏக்கர் நிலத்தை கூட நாங்கள் வாங்கவில்லை. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், சாகுபடி செய்ய முடியாத பாலைவனம் போன்ற தரிசு நிலங்களையே நாங்கள் வாங்கினோம்” என்று கூறினார்.

நாட்டுக்காக என் மகன் உயிர் தியாகம் செய்தது பெருமையாக இருக்கிறது- மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன்

காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளைத் தேடும் பணியில் மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இரு ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்களும் 3 தீவிரவாதிகளும் இறந்தனர்.

இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (31) ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன் கூறியதாவது:

'முகுந்த் எப்போதும் வாழ்க்கையில் குறிக்கோளுடன் இருந்தவன். சின்ன வயதில் இருந்தே தாய், தந்தைக்கு மரியாதை கொடுக்கும் பிள்ளை. என் மகனுக்குத் தாம்பரத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை. சில நாள் முன்புதான் வீட்டுக்கான முதல் தவணைத் தொகையை கொடுத்துவிட்டு வந்தோம். வீடு பார்க்கும்போது, ‘அப்பா வீடு 3 படுக்கை அறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். நீங்களும் அம்மாவும் எப்பவும் எங்ககூடத்தான் இருக்க வேண்டும்’ என்று கூறுவான். ஆனா இப்ப அவனுடைய ஆசையை நிறை வேற்ற முடியாமல் போய்விட்டது.

சமீபத்தில் நண்பர்களுடன் ஸ்கூட்டர்ல போகும்போது விபத்தில் அவனுடைய நண்பருக்கு அடிபட்டுவிட்டது. ஆனால், நாங்கள் பயந்துவிடுவோம் என்று நினைத்து அதனை எங்களிடம் கூறவில்லை. என்னையும் அவங்க அம்மாவையும் முகுந்த் குழந்தை போல் பார்த்துக் கொள்வான். நாட்டுக்காக என் மகன் உயிர்த் தியாகம் செய்து இருப்பது பெருமையாக இருக்கிறது'' என்று கூறினார்.

சிறந்த வீரத்திருமகனை தமிழகம் இழந்திருக்கிறது. துணிவுமிக்க ஒரு போர்வீரரை நாடு இழந்துள்ளது. -ஜெயலலிதா

காஷ்மீர் மாநிலம் சோபியனில் தீவிரவாதிகளுடன் சனிக்கிழமை நடந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் இறந்தார். அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸுக்கு முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தங்கள் கணவர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனையும், பேரதிர்ச்சியும் அடைந்தேன். இது, உங்களது வாழ்விலேயே மிகவும் துக்ககரமான, மோசமான நாள் என்பதை நன்கு அறிவேன். அன்புமிக்க கணவரை இழந்து நீங்களும், பாசமிகு தந்தையை இழந்து உங்கள் மகளும், போற்றி வளர்த்த அன்பு மகனை இழந்து அவரது பெற்றோரும் தவித்து வருகிறீர்கள்.

எனினும், தாய்நாட்டைக் காக்கும் பெரும் பணியை செய்து வரும் இந்திய ராணுவத்தின் தரப்பில் போரிட்டு பெரும் தியாகத்தை அவர் செய்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். சிறந்த வீரத்திருமகனை தமிழகம் இழந்திருக்கிறது. துணிவுமிக்க ஒரு போர்வீரரை நாடு இழந்துள்ளது.

அவரது மறைவுக்கு தமிழக அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கும் வலிமையை உங்கள் அனைவருக்கும் தருவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். உங்களது கணவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா கோடநாடு செல்வது புதிதல்ல- ஹாங்காங் சுற்றுபயணம் செல்லும் போது விமான நிலையத்தில் கூறிய‌ மு.க.ஸ்டாலின்


முதல்வர் ஜெயலலிதா கோடநாடு செல்வது புதிதல்ல; இதில் அதிருப்தி அடைய ஒன்றுமில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், சென்னையிலிருந்து விமானத்தில் ஹாங்காங் புறப்பட்டு சென்றார். அதற்கு முன்னர், விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாளை சேர்த்திருக்கிறார்களே?

அதை நீங்கள் நீதிபதியிடம்தான் கேட்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும்.

தேர்தல் அமைதியாக நடந்ததாக போலீஸ் டி.ஜி.பி.க்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாரே?

தேர்தல் அமைதியாக நடந்ததா என்பதை நாட்டு மக்கள்தான் சொல்ல வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா கோட நாடு பயணம் செல்கிறாரே?

இது வழக்கமான ஒன்றுதான். புதிதல்ல. இதில் அதிருப்தி அடைவதற்கு ஒன்றுமில்லை.

இவ்வாறு பேட்டி அளித்து விட்டு, அவர் விமானத்தில் ஹாங்காங் புறப்பட்டார். அங்கு சுமார் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு, தமிழகம் திரும்பவுள்ளார்.

Sunday, 27 April 2014

நரேந்திர மோடியை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம்- லதா ரஜினிகாந்த்


நரேந்திரமோடி கடந்த 13–ந் தேதி சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது போயஸ் கார்டனில் உள்ள‌ நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி தன்னை சந்தித்தது பற்றி ரஜினிகாந்திடம் கேட்ட போது, ‘‘மோடி எனது நெருங்கிய நன்பர் அந்த வகையில் என்னை சந்தித்தார்’’ என்று கூறினார்.

இது தொடர்பாக ரஜினிகாந்தின் மனைவி லதா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரஜினி-மோடி சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நண்பராவார். ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார். இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்தித்தது உள்ளார். இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்தி விட்டார்’’ என்று கூறினார்.

ராபர்ட் வதேராவின் நில மோசடிகள் குறித்த வீடியோ மற்றும் கையேட்டை பாஜக‌ வெளியிட்டது

பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக பிரியங்கா காந்தி விமர்சித்து வரும் நிலையில், பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேராவின் நில மோசடி குறித்த தகவல்களை 8 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் தொகுத்து பா.ஜ.க தனது பதில் தாக்குதலை தொடுத்துள்ளது.

இன்று இது தொடர்பான வீடியோ மற்றும் 6 பக்க கையேட்டை வெளியிட்ட பா.ஜ.க செய்தி தொடர்பாளரான ரவி சங்கர் பிரசாத், காந்தி குடும்பத்தின் உதவியால் தான் வதேராவின் வளர்ச்சி இந்த அளவுக்கு உயர்ந்ததாக கூறினார். நில விவகாரங்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு முரணாக வதேராவின் நில பேர வர்த்தகங்கள் நடைபெற்றதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் ஆண்ட மாநிலமான ராஜஸ்தானிலும், அக்கட்சி தற்போது ஆண்டுவரும் மாநிலமான அரியானாவிலும் வதேரா மிகப்பெரிய அளவில் முறைகேடான வகையில் சொத்து செய்திருப்பதாக தெரிவித்த அவர், 1 லட்ச ரூபாயை முதலீடாக கொண்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வதேராவால் எப்படி இவ்வளவு லாபம் சம்பாதிக்க முடிந்தது என அவரும் காங்கிரஸ் கட்சியும் விளக்கவேண்டும் என ரவி சங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டார்.

தேர்தலில் பணபலத்தைத் தடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு ராமதாஸ் 10 யோசனைகள்

தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் 10 அம்ச யோசனைகளை வழங்கியுள்ளார். அவை கீழ்வருமாறு:

 1) தேர்தல்களில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என்ற வாக்குறுதியை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மாநில முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விழிப்புணர்வு விளம்பர படங்களில் தோன்றி, "எங்கள் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தர மாட்டோம் & வேறு ஏதேனும் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது குறித்து தேர்தல் ஆணையத்திடமோ அல்லது தேர்தல் அதிகாரிகளிடமோ புகார் அளிக்க வேண்டும்" என அறிவுரை வழங்க வேண்டும். இந்த விழிப்புணர்வுப் படங்கள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திரையிடப்பட வேண்டும்.

2) மக்களவைத் தேர்தல்கள் இப்போது நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்ட வேண்டும். இந்த தேர்தலில் பணப் பயங்கரவாதம் எந்தளவுக்கு தலைவிரித்தாடியது என்பதை விளக்கி, இனி எந்த கட்சியும் ஓட்டுக்கு பணம் தரக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களுக்கு முன்பாகவும் இதேபோன்ற கூட்டத்தைக் கூட்டி , ‘ஓட்டுக்கு பணம் தர மாட்டோம்’ என்ற வாக்குறுதியை பெற வேண்டும்.

3) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஏதேனும் ஒரு கட்சி சார்பில் பணம் தரப்பட்டது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதற்கு அந்தக் கட்சியின் வேட்பாளர் தான் பொறுப்பு என்று அறிவித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

4) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் தருபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

5) ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வழக்கு பதிவாகியிருந்தால், அந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை அத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.

6) இதனால், ஜனநாயக நடைமுறைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் தொடர்பான வழக்குகள் வாக்குப்பதிவு முடிவடைந்த ஒரு மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும். இதற்காக தேர்தல் கால சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் ஆராயலாம்.

7) ஒரு தேர்தலில் ஏதேனும் ஓர் கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கட்சியின் வேட்பாளர் விசாரணையின்றி தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் செல்லாதவையாக அறிவிக்க வேண்டும்.

8) வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் தருவதை கையும் களவுமாக பிடித்துக் கொடுப்பதுடன், குற்றச்சாற்றுகளை விசாரிக்க துணை நிற்பவர்களுக்கு ஒரு லட்சரூபாய் பரிசாக வழங்க வேண்டும்.

9) அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு வாகனங்களையும், பேருந்துகளையும் அனுப்பும்படி கட்டாயப்படுத்தும் அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

10) தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் காவல்துறை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். எனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையத்தால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், ஆட்சியாளர்களைத் தான் தாங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்பதாலும், எந்த ஒரு அதிகாரியும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமல் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையை மாற்றி தேர்தல் காலத்தில் தவறு செய்யும் அதிகாரிகளை உடனடியாக பணி இடை நீக்கம் செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும்; அவ்வாறு பணி இடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி தம்மை குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை அவரை மீண்டும் பணியில் சேர்க்கக் கூடாது.

சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக நான் முன்வைத்துள்ள மேற்கண்ட யோசனைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

ராம்தேவின் சர்ச்சைக்குரிய பேச்சை தொடர்ந்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தலித் வீடுகளுக்கு தேனிலவுக்காகச் செல்வதாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருந்தார் யோகா குரு ராம்தேவ்.  அவர் பேச்சின் எதிரொலியால், தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, தனிநபர்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும், இதனை மீறுவோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு பேசுவோர் மீது சட்டபூர்வமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், மத உணர்வைத் தூண்டும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்றும், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

யோகா குரு ராம்தேவ் லக்னோ மாவட்டத்தில் மே 16-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், உத்தரப் பிரதேசத்தின் இதர பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படவில்லை.

இதனிடையே, தலித் சமுதாயத்தை இழிவுபடுத்திய ராம்தேவை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மோடி பிரச்சாரத்திற்கு ரூ. 1000 கோடி செலவு என ஆம் ஆத்மி புகார்


ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா வாரணாசி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், மோடியின் பிரச்சாரத்துக்கு ரூ.1000 கோடி செலவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வாரணாசியில் நடைபெற்ற மோடியின் பேரணியில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக பா.ஜனதா தெரிவித்துள்ளன. அதில் பாதி பேர் பா.ஜனதாவின் சின்னங்கள் அல்லது அதனை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகள், பொருட்களை அணிந்து வந்தனர். பேரணியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தொப்பிகள், புடவைகள், கொடிகள், முகமூடிகள், பேனர்கள்‘, டி.சர்ட்டுகள் ஆகியவற்றுக்கு ரூ.5 கோடியே 75 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

மோடி வந்த ஹெலிகாப்டருக்கு ரூ.70 லட்சம் வாடகை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைக்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு புடவை, டி.சர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 (1)–ன்படி எதிரானதாகும்.

இதேபோல் வாரணாசி தொகுதி முழுவதும் பேனர்கள் வைக்க பெருந்தொகையை செலவிட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கோடநாடு செல்லும் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரும் அதிமுகவினர்


தேர்தல் முடிவடைந்து இன்று கோடநாடிற்கு வருகை தரவிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க-வினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தேர்தல் ஆணைய விதிகள் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன. முதல்வர் கோடநாட்டுக்கு வரும்போதெல்லாம் கட்-அவுட், போஸ்டர், ஆடல்-பாடல், வெடி வெடித்து அமர்க்களப்படுத்தும் அ.தி.மு.க-வினர், தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முன்பு போல ஆரவாரமாக வரவேற்பு கொடுக்க முடியுமா என குழப்பம் அடைந்துள்ளனர்.

வரவேற்புச் செலவுகள் வேட்பாளரின் கணக்கில் வருமோ என்ற சந்தேகத்தில் உள்ளனர். முதல்வரை வரவேற்க தட்டி மற்றும் போஸ்டர் ஒட்ட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.

சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வரும் முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதியம் சுமார் 1 மணியளவில் கோடநாடு செல்கிறார். அங்கு அவர் தேர்தல் முடிவுகள் வரை தங்கியிருப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக் ஆயுக்தா குஜராத்தில் அமைக்கப்படும் போது, மோடி ஜெயிலுக்கு போவார்- ராகுல் காந்தி

குஜராத் மாநிலத்தில், தேவ்கத் பரியா என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

இங்கே (குஜராத்) லோக் ஆயுக்தாவோ, போதுமான  அளவு தகவல் அறியும் உரிமை கமிஷனர்களோ இல்லை. 10 தகவல் அறியும் உரிமை கமிஷனர்களை நியமிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் 5 பேர் மட்டுமே உள்ளனர்.

மற்ற மாநிலங்கலில் எல்லாம் லோக் ஆயுக்தா அமைப்பு இருக்கிறது. ஆனால் ஊழல்வாதிகளை பிடிக்கும் அதிகாரம் படைத்த அந்த அமைப்பு இங்கு இல்லை. இங்கே லோக் ஆயுக்தா வரும் போது, தேவையான அளவு தகவல் அறியும் உரிமை கமிஷனர்கள் நியமிக்கப்படும் போது, உங்கள் காவல்காரன்(மோடி) ஜெயிலுக்குள் போவார்.

குஜராத் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் கல்விக்காக போடப்படும் வருடாந்திர பட்ஜெட்டை விட 5 மடங்கு அதிகத் தொகையான சுமார் 4,500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அதானிக்கு மோடி கொடுத்துள்ளார்.

எல்லா வகையான மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், பொய்களை சொல்லி, மற்றவர்களிடம் இருந்து பறித்து, ஒருவருக்கே கொடுக்க வேண்டும் என்று மோடி நம்புகிறார்.

இது குஜராத் மாடல் அல்ல, அதானி மாடல். குஜராத் மாடலைப் பற்றிய உண்மை நிலையை நான் அம்பலப்படுத்திய பிறகு குஜராத் மாடலைப் பற்றி பெருமை பேசுவதை மோடி நிறுத்திக் கொண்டார். 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் ஒரு ரூபாய் என்ற மிட்டாயின் விலையில் அதானிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரம் மிட்டாய்களை தந்துவிட்டு ஆயிரம் ஏக்கர் நிலத்தை அதானி வாங்கிக் கொண்டார். அதே போல், நீங்களும் மிட்டாய்களை தந்து அரசிடமிருந்து நிலம் வாங்க முயன்றால் அடித்து விரட்டப்படுவீர்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால், அமெரிக்க டாலர் விலை ரூ.61-ல் இருந்து 2 ஆண்டுகளில் ரூ.35-ஆக மாறும்


மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால், தற்போது 61 ரூபாயாக உள்ள அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டே ஆண்டுகளில் 35 ரூபாயாக மாறும் என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.

வாரணாசியில் ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்ப்பது ஏன்? என்ற தனது நிலைப்பாட்டுக்கு விளக்கம் அளிக்கையில், ’வால்மார்ட் நிறுவனம் தொழில் செய்ய வங்கியில் இருந்து 2 சதவீத வட்டிக்கு கடன் வாங்குகிறது. அதே வேளையில், இந்தியாவில் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கு 12 முதல் 18 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் இவ்வளவு வேறுபாடு இருக்கையில் சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்திய வியாபாரிகள் எப்படி போட்டிப் போட்டு தொழில் செய்ய முடியும்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

மோடியின் ஆட்சியை பற்றி புகழ்ச்சியாக பேசிய சுப்ரமணியன் சுவாமி, "மோடி தலைமையிலான அரசு, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மிகவும் முன்னேறிய மாநிலமாக குஜராத்தை உயர்த்தியுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 சதவீதம் அளவுக்கு அங்கு விவசாய வளர்ச்சி உள்ளது. " என்று கூறினார்.

Saturday, 26 April 2014

பாஜகவில் இணைந்ததற்கான காரணங்களை கூறுகிறார் மன்மோகனின் சகோதரர்

"மோடி அலை வீசவில்லை" என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வரும் நிலையில், அவரது சகோதரர் தல்ஜீத்சிங் கோலி (மன்மோகன் சிங் தந்தையின் 2–வது மனைவியின் மகன்) பா.ஜனதாவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதாவில் அவர் இணைந்ததை வரவேற்ற மோடி இதன் மூலம் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்று கூறினார்.

பாரதீய ஜனதாவில் சேர்ந்தது குறித்து தல்ஜீத்சிங் கோலி கூறியதாவது:

பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சி நடத்திய விதம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் சுயமாக செயல்படவிடவில்லை. மத்திய அரசை நடத்த அவருக்கு முழு அதிகாரம் வழங்கவில்லை. அவருக்கு உரிய திறமைபடி வேலை செய்ய அனுமதிக்கவில்லை. இதனால்தான் பா.ஜனதாவில் இணைவது என்று முடிவு எடுத்தேன். பா.ஜனதா டிக்கெட் வழங்கினால் தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தல்ஜீத்சிங் கோலி பா.ஜனதாவில் இணைந்ததால் காங்கிரஸ் கட்சியும், குடும்பத்தினரும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இது குறித்து மன்மோகன் சிங் பேசிய போது, "என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது. என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பெரியவர்கள் இவ்வாறு செய்கிறார்களே" என்று கூறினார்.

டைம் மேகசின் வெளியிட்ட 'செல்வாக்கு மிக்க 100 நபர்கள்' பட்டியலில் சேர்க்கப்பட்ட கோவையின் முருகானந்தம்!


நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த நரேந்திர மோடி, அர்விந்த் கேஜ்ரிவால், எழுத்தாளார் அருந்ததி ராய் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான நாப்கின்களை மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் ஆகிய நால்வரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

முருகானந்தம் ஒரு ‘சுகாதாரப் போராளி’ என்று அந்த இதழில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவர் தன் மனைவியின் பிரச்சினைக்காகக் கண்டறிந்த பிரத்யேகத் தீர்வு, ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜிங்பிங், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அமெரிக்காவின் புலனாய்வுத் துறையின் அத்து மீறல் தகவல்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், போப் பிரான்சிஸ், ரஷ்ய பிரதமர் விளாமிதிர் புடின் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரியை சந்தித்து காலை தொட்டு ஆசி பெற்ற ராஜ்நாத் சிங்


உத்தர பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் இன்று காலை மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அங்கு அவரது காலைத் தொட்டு ராஜ்நாத் சிங் வணங்கி ஆசி வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற திவாரி வாழ்த்து தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் மூன்று முறை திவாரி முதல் மந்திரியாக பதவி வகித்திருக்கிறார்.

திவாரியை சந்தித்து விட்டு, பின்னர் நிருபர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், “உத்தர பிரதேச சட்டசபையில் இருந்தபோது நான் உரையாற்றியதைக் கவனித்த திவாரி, உடனே என்னை அழைத்தார். இந்த மாநிலத்தின் எதிர்காலம் நீதான் என்று அப்போது வாழ்த்தினார்” என்று கூறினார்.

மோடியின் வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், நாட்டை கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும்-சோனியா


பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சோனியா காந்தி, குஜராத் மாதிரி வளர்ச்சித் திட்டம் என்பது நிஜத்தில் மோடி மாதிரி வளர்ச்சித் திட்டம், அத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தால், கடவுள் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:

அகாலி தள கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது வருத்தமளிக்கிறது. குஜராத்தில் சீக்கியர்கள் வாழ வழியில்லை. சீக்கியர்கள் நலனை பாதுகாக்காத குஜராத் முதல்வருக்கு அகாலி தளம் ஆதரவு அளிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேல் குஜராத்தில் உள்ள சீக்கியர்கள் பிழைப்புக்கு வழியின்றி அங்கிருந்த வெளியேறும் நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தான் 'மோடி மாதிரி' வளர்ச்சித் திட்டத்தின் பயன்.

இத்திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.11 சம்பாதிப்பவர்கள் ஏழைகள் அல்ல. குஜராத்தில் 5 வயதுக்கு உட்பட்ட பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 45,000 ஏக்கர் நிலங்கள் பெரும் முதலாளிகளுக்கு சொற்ப விலைக்கு விற்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதியான குடிநீர் வசதி கூட குஜராத்தின் பல கிராமங்களில் இல்லை. எனவே 'குஜராத் மாதிரி' வளர்ச்சித் திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வராமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு சோனியா காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசியிருந்தார்.

தலித் வீடுகளுக்கு பிக்னிக், தேனிலவுக்காக ராகுல் காந்தி செல்கிறார் என கூறிய ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்தில் தனது தொகுதியில் உள்ள தலித் மக்கள் வீடுகளுக்கு பொழுதுபோக்குவதற்காகவும், தேனிலவுக்காகவும் செல்கிறார் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.

மேலும், ராகுல் காந்தி திருமண விவகாரம் குறித்தும் அவர் பேசிய போது, ராகுல் காந்திக்கு இந்தியப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால், அவர் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் பிரதமர் ஆக முடியாது என சோனியா காந்தி கூறியதால் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என கூறியிருந்தார்.

ராம்தேவின் கருத்துகள் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராம்தேவ் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திக்விஜய்சிங் கூறியதாவது: "ராம்தேவ் பேச்சு தலித் மக்களுக்கு எதிரானது. ராகுலை அவதூறாக பேசிய ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மோடியும், பாஜகவும் ராம்தேவ் பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது. என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை-மன்மோகன்


பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர்: "என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது. என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பெரியவர்கள் இவ்வாறு செய்கிறார்களே" என்றார்.

முன்னதாக பிரதமரின் சகோதரர் பாஜகவில் இணைந்தது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில்: "தல்ஜித் சிங் கோலி பாஜகவில் இணைந்தது மொத்த குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பாஜகவில் இணைந்த அவரது நோக்கம் தெரியவில்லை. இருப்பினும் அவர் விரும்பும் அரசியல் வாழ்க்கையை தேர்வு செய்ய அவருக்கு உரிமை இருக்கிறது. பிரதமருக்கும் அவரது சகோதரருக்கும் பல ஆண்டுகளாக எவ்வித தொடர்பும் இல்லை"என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பேரறிவாளன் விடுதலையாகும் வரை போராடுவேன்

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்திருந்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் நேற்று சந்தித்தார். அப்போது கண்ணீர் மல்க இருவரும் பேசிக் கொண்டனர். ஜெயிலில் பேரறிவாளனை சந்தித்து விட்டு வெளியே வந்த அற்புதம்மாள் கூறியதாவது:

உச்சநீதிமன்ற‌ தீர்ப்பு குறித்த தகவலை என் மகனிடம் தெரிவிக்க வந்தேன். பேரறிவாளன் விடுதலையை எதிர்பார்த்திருந்தான். அவன் மனதை தளர விடவில்லை. விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறான்.

அவன் விடுதலையாகும் வரை போராடுவேன். மீண்டும் போராடி வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசு மூன்றாவது அணியுடன் கை கோர்க்குமா ?

தேர்தலுக்கு பின் காங்கிரசு மூன்றாவது அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் அதை சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம் கோபால் வர்மா மற்றும் இடதுசாரிகள் தலைவர் ராஜாவும் இந்த முடிவை வரவேற்று பேட்டி அளித்தனர் .

ராம் கோபால் வர்மா அளித்த பேட்டியில் மூன்றாவது அணி தான் பாதிக்கு மேற்பட்ட இடங்களை பிடிக்கும் . நாங்கள் இதுவரை பாஜக வை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளோம் . இனிமேலும் செய்வோம் என்றார் .

டி.ராஜா கூறுகையில் நாங்கள்  காங்கிரசு , பாஜக ஆகிய கட்சிகளுக்கு மாற்று கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றே தேர்தல் பிரச்சாரம் செய்தோம் , ஆனால் தேர்தலுக்கு பின் வரும் நிலையை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும் என்றார் .

ஆனால் காங்கிரசு கட்சிக்குள் சிலர் இந்த முடிவை எதிர்க்கின்றனர் . தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மூன்றாம் அணியுடன் சேருவதை விட எதிர் கட்சியாக இருப்பது சிறந்தது என சிலர் காங்கிரசு தலைவர்கள் எண்ணுகின்றனர் .



சோனியா காந்தி ஒன்றும் பிரதமர் பதவியை தியாகம் செய்துவிடவில்லை-ராஜ்நாத் சிங்


உத்தரப்பிரதேச மாநிலம் அவுரங்காபாத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், "கடந்த 2004 மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்ததால் சோனியா காந்தி எந்த தியாகமும் செய்துவிடவில்லை." என்று கூறினார். இது குறித்து அவர் விளக்கி கூறுகையில், "தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்" என்ற புத்தகத்தை எழுதியுள்ள பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பருவா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சோனியா காந்தி தான் நடத்தி வந்ததாக கூறியுள்ளார். அந்த புத்தகத்தில் மத்திய அரசை சோனியா காந்தி தான் நடத்தினார் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

பாஜக மதவாத கட்சி என காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. மேலும், சமுதாயத்தை பாஜக பிரித்தாள முயற்ச்சிப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், உண்மையில் சோனியா காந்திக்கு வரலாறு தெரியவில்லை. இந்தியப் பிரிவினைக்குக் காரணம் பாஜக‌ அல்ல, காங்கிரஸ் கட்சியே.

நரேந்திர மோடி, பாஜக பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதில் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்று கூறிய ராஜ்நாத் சிங், கட்சியின் மூத்த தலைவர்களுடன் தீர கலந்து ஆலோசித்த பிறகே மோடி பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என கூறினார்.

மோடியின் ஆட்சி காலத்தில் அதானியின் சொத்து மதிப்பு, 3000 கோடியிலிருந்து 40000 கோடி ஆனது எப்படி?


உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் நேற்று நடைபெற்ற, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை விமர்சித்து பேசுகையில், “பெண்களை உளவு பார்ப்பதற்கு அக்கட்சியின் தலைவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்." என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:

நாட்டின் காவல்காரனாக தன்னை நியமிக்கும்படி மக்களிடம் மோடி கேட்கிறார். ஆனால் குஜராத்தில் இவரின் ஆட்சிக்காலத்தில் தொழிலதிபர் அதானி குழுமத்தின் சொத்துகள் ரூ.3 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் பணம், நாடு முழுவதும் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தும் தொகைக்கு இணையானது. இவ்வளவு பணத்தை இந்த காவல்காரர் ஒரு நிறுவனத்துக்கு தந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பந்தல்கண்ட் பகுதிக்கு மத்திய அரசு ஒதுக்கியத் தொகை இங்கு வந்துசேரவில்லை. இப்பகுதிக்காக மத்திய அரசு ரூ.7,700 கோடி ஒதுக்கியது. ஆனால் இத்தொகை தலைநகர் லக்னோவிலேயே மாயமாகிவிட்டது.

பாரதிய ஜனதா, பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆட்சியில் இப்பகுதியில் வேலை வாய்ப்புத் திட்டங்கள் செயல் படுத்தப்படவில்லை. ஆனால் பந்தல்கண்ட் வழியாக தொழில் வளாகச் சாலை செல்வதற்கு காங்கிரஸ் வகை செய் துள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பந்தல்கண்ட் பகுதியில் குடிநீர் கிடைக்காமலும் பட்டினியாலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது தொடர்பாக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியிருந்தார்.

சென்னை நோக்கியா ஆலை மைக்ரோசாப்ட் கட்டுப்பாட்டில் வரிப்பிரச்சனையால் சேர்க்கப்படவில்லை


சென்னையில் உள்ள நோக்கியா தொழிற்சாலை 50 கோடி டாலர் முதலீட்டில் 2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் 8,000 பேர் நேரடியாகவும், 12,000 பேர் மறைமுகமாகவும் பணிபுரிகிறார்கள். நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் கொடுத்து சில மாதங்களுக்கு முன்பு வாங்கியது. இப்போது வரி பிரச்சினை காரணமாக சென்னை தொழிற்சாலை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு ரூ.2,400 கோடி வரி பாக்கி தொடர்பாக நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இன்னொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான பிணையை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

வரிப்பிரச்சனை இருந்தாலும் ஒப்பந்தத்தின்படி நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மொபைல் போன்களை தயாரித்து தரவேண்டும்.

அப்சல் குரு தூக்கை வலியுறுத்திய பாஜக, ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்கள் குறித்து மௌனம் சாதிப்பது ஏன்?


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் உள்ளிட்டோர் குறித்து பாஜக மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது:

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக வலியுறுத்தியது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்த பட்டவர்கள் குறித்து பாஜக தலைவர்களில் ஒருவர்கூட எதுவுமே கூறவில்லை.

இந்த விவகாரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக மவுனம் காப்பது ஏன்? ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிகூட இதுவரை ஒருவார்த்தைகூட கூறவில்லை. இதன் மூலம் பாஜகவின் உண்மையான முகம் வெளிப்பட்டு உள்ளது. அந்தக் கட்சி தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. வாக்கு வங்கி ஆதாயத்துக்காக மட்டுமே குரல் எழுப்புகிறது.

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

சீரஞ்சீவி மீது முட்டை வீச்சு !!

சீரஞ்சீவி கொனேரு என்னும் இடத்தில் தேர்தல் பரப்புரை செய்தார் . அப்போது மோடியை அவர் ஹிட்லர் என்று கூறினார் . இதனால் பாஜக ஆதரவாளர்கள் அவர் மீது முட்டை வீசினர் . இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது . ஆனால் காவல்துறை நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .

Friday, 25 April 2014

அர்ஜீனா விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரை

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) பரிந்துரைத்துள்ளது.

இதுபற்றி பிசிசிஐ-ன் பொது மேலாளர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், " அஸ்வின் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் 30-தேதி பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள். வேறெந்த கிரிக்கெட் வீரரும் எங்கள் பரிந்துரைப் பட்டியலில் இல்லை" என்றார்.

விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருதை வழங்கி இந்திய அரசு கௌரவித்து வருகிறது. இதுவரை 46 கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சென்ற வருடம், இந்த விருதை விராத் கொலி பெற்றிருந்தார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 106 விக்கெடுகளையும் (79 போட்டிகள்) , டி20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் (79 போட்டிகள்) வீழ்த்தியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற காங்கிரஸின் புதிய வாக்குறுதிக்கு பாஜக எதிர்ப்பு


காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியான புதிய அறிவிப்பு ஒன்றில், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் துணைத் தேர்தல் அறிக்கை குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் கபில் சிபல், "பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு மசோதோ உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காங்கிரஸ் தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், அந்த மசோதா நிறைவேற்றபடும்.
இதனை காங்கிரஸ் தேர்தலுக்கான துணை அறிக்கையாக வெளியிடவில்லை. இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் நடைபெற வேண்டிய நிலையில், நாங்கள் இதனை மக்கள் முன்னிலையில் தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை" என்றார்.

இதனிடையே காங்கிரஸை கடுமையாக விமர்சித்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், "மக்களவைத் தேர்தல் பல்வேறு கட்டமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் இதுபோன்ற வாக்குறுதிகளை வெளியிடுவது, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வாக்கினை பெறும் கடைசி நேர முயற்சி. தோல்வியை சந்திக்க இருக்கும் கட்சி இதுபோன்ற துணைத் தேர்தல் அறிக்கைகளை, கடைசி நேரத்தில் வெளியிடுவது ஒன்றும் புதிது அல்ல. மக்கள் இதனை நம்ப மாட்டார்கள்" என்றார்.

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், அமலாக்கத் துறை இன்று குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் புரொமோட்டர் ஷாகித் பால்வா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவர்களுடன், இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டிவியின் சரத்குமார் உள்பட மொத்தம் 19 பேர் குற்றம்சாட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ.200 கோடி தொகையை, கலைஞர் டிவி நிறுவனத்துக்கு அளித்ததாக, அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து டெல்லி நீதிமன்றம் இம்மாதம் 30-ம் தேதி முடிவு எடுக்கும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media