Monday, 30 September 2013
மீண்டும் அணியில் இடம் பிடித்தார் யுவராஜ் சிங்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7 ஒரு நாள் மற்றும் 1 டி20 போட்டியில் இந்தியா விளையாடுகிறது. அதற்காக இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு யுவராஜ் சிங் சேர்க்கப்பட்டு உள்ளார். வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு இடமில்லை.
அறிவிக்கப்பட்ட அணி : டோணி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, வினய் குமார், அமித் மிஸ்ரா, அம்பட்டி ராயுடு, முகம்மது சமி, ஜெயதேவ் உனக்தத்.

கால்நடைத் தீவின வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி
கால்நடைத் தீவின வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
அக்டோபர் 3ம் தேதி இவர் மீதான தண்டனை விபரங்கள் அறிவிக்கப் படும். அதன் பின்னர் அவரது எம்பி பதவி உடனடியாக பறிபோகும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கால்நடைத் தீவின வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்தததால் லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டு பிஸ்ரா முண்டா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார்.
இவரைப் போல இந்தியா முழுவதிலும் மொத்தம் 162 எம்.பி.க்கள் 1258 எம்.எல்.ஏ.க்கள் என 1420 பேர் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், நல அபகரிப்பு, லஞ்சம் போன்ற குற்றவழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு மீதான தீர்ப்புகள் அடுத்தடுத்து வர உள்ளன. லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் 64 சதவீத எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்கில் உள்ளனர்.
மேலும் லல்லு பிரசாத் யாதவ்க்கு அளிக்கபப்ட்ட இசட் ப்ளஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Sunday, 29 September 2013
எல்லா செயல்பாடுகளுக்கும் ‘பிலிம் சேம்பர்’ தான் பொறுப்பு : நூற்றாண்டு விழா ‘அவமானங்கள்’ குறித்து தமிழக அரசு கைவிரிப்பு
சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மூத்த கலைஞர்கள் பலரும் விழாவுக்கு அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர். மேலும் விழா குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதியும் தன் பங்குக்கு தமிழக அரசை கடுமையாக சாடியிருந்தார்.
தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சோனியா கும்பலுக்காக பாவமூட்டை சுமந்து அவமானப்படுத்தப்பட்ட மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் - வைகோ
மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும், 9½ ஆண்டுகளாக சோனியா காந்தியும், அவரது கூட்டமும் செய்த பாவங்களை சுமந்ததற்கு தான் இந்த அவமானமா - வைகோ குமுறல்
இன்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டதாவது
இன்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டதாவது
செம்மொழி மாநாட்டில் ஊழல்? அதிகாரிகளை போட்டுக்கொடுக்கும் திமுக தலைவர் கருணாநிதி
தனக்கு தானே கேள்வி-பதில் திட்டத்தில் இன்று செம்மொழி மாநாட்டு ஊழல் பற்றி குறிப்பிட்ட திமுக தலைவர் கருணாநிதி
கேள்வி:- கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டுக்காக செய்யப்பட்ட செலவில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, யாரோ ஒருவர் தாக்கல் செய்த வழக்கின் மீது உங்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது என்று இரண்டொரு ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?
என்ற தன் கேள்விக்கு
இதுபோல அரசு நடத்தும் மாநாட்டிற்கான செலவினை முதலமைச்சரோ, அமைச்சர்களோ, உறுப்பினர்களோ கையிலே வைத்துக்கொண்டு செலவு செய்வதில்லை.
அதிகாரிகள்தான் செலவு செய்வார்கள். மாநாடு நடைபெற்ற நேரத்தில் நிதித்துறை செயலாளராக யார் இருந்தாரோ அவர்தான் தற்போதும் செயலாளராக இருக் கிறார். மாநாடு நடைபெற்றபோது கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து செயல் பட்டவர் தற்போது நிதித்துறையிலேதான் பணியாற்றுகிறார். இந்த செம்மொழி மாநாட்டிற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனி அதிகாரி யாகவே நியமிக்கப்பட்டார். இந்த மாநாட்டிற்காக செலவு செய்யப்பட்ட தொகை குறித்து அப்போது மாநாட்டை நடத்தும் பொறுப்பை மேற் கொண்டவர்களுக்கு எந்தத் தொடர்பாவது இருந்ததா என்பதை இந்த மூத்த அதிகாரிகள் இடத்திலும், அவர்கள் கையாண்ட கோப்புகளை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.
என்று அதிகாரிகளை போட்டுக்கொடுத்துள்ளார்.
Saturday, 28 September 2013
மன்கோகன் சிங் பதவி விலக வேண்டும் - சந்திரபாபு நாயுடு
குற்ற பின்னணி உள்ள எம்பி, எம்எல்ஏ க்களை பாதுகாக்கும் வண்ணம் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ராகுல் காந்தி "சட்டம் முட்டாள்தனமானது. கிழித்து குப்பையில் வீசுங்கள்" என்று விமர்சித்தார்.
இதனால் பிரதமர் மன்கோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
மறக்கப்பட்ட குமரி தமிழன் : "திரு.ஜே.சி.டேனியேல்"
மறக்கப்பட்ட குமரி தமிழன் : "திரு.ஜே.சி.டேனியேல்"
கேரள சினிமாவின் தந்தையாக போற்றப்படும் நம் கன்னியாகுமரி மண்ணின் மைந்தனை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த திரு.ஜே.சி.டேனியேல் கன்னியாகுமரி மண்ணிலிருந்து (நாகர்கோவிலில்) கேரளாவின் முதல் திரைப்படமான "விகதகுமாரன்" - ஜ தயரித்து, இயக்கி, நடித்து கேரள சினிமாவின் தந்தையாக போற்றப்படுகிறார். இவர் பெயரில் கேரள அரசு வருடந்தோறும் "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி அவரை கௌரவப்படுத்துகிறது. சினிமா தயாரித்ததில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் பின்பு மருத்துவம் படித்து டாக்டராக பணியாற்றி வயோதிக காலத்தில் அகஸ்தீஸ்வரத்திலேயே வாழ்ந்து இப்பூவுலகை விட்டு மறைந்தார். அவரது கல்லறை அகஸ்தீஸ்வரத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சினிமாவின் நூற்றாண்டு நடக்கும் இத்தருணத்தில் அவரை நினைவு கூர்வோம்.
Lelin Raj posted toசற்றுமுன் செய்திகள்

Friday, 27 September 2013
ஈழப்போரில் 40,000 கொல்லப்பட்டுள்ளனர், ஐ.நா.மனித உரிமை ஆணையம் அறிவிப்பு
இலங்கையில் 2009-ம் ஆண்டு ஈழப் போரின்போது 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதா க ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கை அரசு மீது குற்றம் சாட்டி உள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவி பிள்ளை இலங்கை அரசு தானாக முன்வந்து போர்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். இந்த அறிவுறுத்தலை இலங்கை அரசு நிராகரித்து உள்ளது.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - FIR - பட விமர்சனம்
மிஷ்கினின் தொடர்ந்து மூன்று தோல்விகளுக்கு பின் வந்திருக்கும் மிஷ்கின் படம், திரில்லர் ரக பாணியில் மெல்லிய நகைச்சுவை கூடவே இழையோடும் படம், எதார்த்தத்துக்கு மிக அருகில் எடுக்கப்பட்டுள்ளது, துப்பாக்கியால் சுடப்பட்டு குண்டடிபட்டு ரோட்டில் கிடக்கும் மிஷ்கினை அனைவரும் கை விட மருத்துவ கல்லூரி மாணவன் ஸ்ரீ காப்பாற்றுகிறார். அதன் பின் மிஷ்கின் காணாமல் போய்விட மிஷ்கினை தேடிப்பிடித்து சுடும் பொறுப்பு ஸ்ரீ தலையில் விழுகிறது, மிச்சம் என்ன ஆனது என்பது தான் படம்.
தற்போதைய ட்ரெண்ட் காமெடியன்கள் இல்லை, குத்துப்பாட்டு இல்லை, அபத்தங்கள் இல்லாமல் சமரசங்கள் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள படம், படத்தை சரியாக கவனித்து பிந்தொடடவில்லையென்றால் படம் புரியாமல் போக வாய்ப்புண்டு. உலக சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல நல்ல திரைப்படங்களை விரும்புபவர்களுக்கும் படம் பிடிக்கும்.
கொஞ்சநாள் கழித்து இது இந்த உலகப்படத்தின் காப்பி என்று யாரும் சொல்லவில்லையென்றால் நல்ல படத்தை தந்ததற்கு மிஷ்கினுக்கு ஒரு பாராட்டு.
மதிப்பெண்கள் 3.5 / 5
Thursday, 26 September 2013
Wednesday, 25 September 2013
Tuesday, 24 September 2013
ஆதார் அட்டை பெறுவது கட்டயாம் அல்ல
ஆதார் அட்டை பெறுவது கட்டயாம் அல்ல. விருப்பபட்டால் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிர அரசு திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டது.
இந்த விசாரணையில், ஆதார் அட்டை பெறுவது அவரவர் விருப்பம் என்று பதில் தந்துள்ளது மத்திய அரசு.
விரல் ரேகை, விழித் திரையைப் பதிவு செய்து ஆதார் அட்டை வழங்கும் திட்டம் 2009-ல் ஆரம்பிக்கப் பட்டது. இந்த திட்டத்திற்காக மட்டும் இது வரை ரூ. 50,000 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது.

Monday, 23 September 2013
பாஜகவுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணியா?
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை சந்தித்தார், காங்கிரசை விளாசிய அவர் பாஜக வுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தற்போதைக்கு தான் எந்த வாய்ப்பையும் மறுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். எனவே சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை நோக்கி நகருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
# சந்திரபாபுவுக்கு நல்ல நேரமே அமையாதா?
Sunday, 22 September 2013
Subscribe to:
Posts
(
Atom
)