புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு கொலைவழக்கில் மைனர் குற்றவாளிக்கு வெறும் 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்க வேண்டும் என தண்டனை. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் ஏமாற்றப்பட்டதாக கதறல்
Saturday, 31 August 2013
சிரியா ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொன்றதற்கு ஆதாரம் உள்ளது - அமெரிக்கா
பஷீர் ஆசாத் தலைமையிலான சிரியா அரசாங்கம் தனது குடிமக்கள் மீதே ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்துள்ளதற்கு விவரமான, தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று அமெரிக்க அரசின் செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
கெர்ரி மேலும் தெரிவித்ததாவது சிரிய அரசு 1400 பேரை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி கொன்றுள்ளதாகவும் அதில் 400 பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் கூறியதை அடுத்து போரில் குதித்தது, ஆனால் பேரழிவு ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்பதை குறித்து பேசிய ஜான் கெர்ரி ஈராக்கில் நடைபெற்றது போன்ற இண்டெலிஜென்ஸ் தவறு நடக்காதவாறு நாங்கள் இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட்களை மிகவும் கவனமாகவும் எச்சரிகையாகவும் ஆராய்வதாக கூறினார்.
# ஏற்கனவே 1$க்கு 68ரூபாய் போய்விட்டது, சிரியாவோடு போரை ஆரம்பித்து கச்சா எண்ணென்ய் விலையை ஏற்றி 1$க்கு 100 ரூபாய் ஆக்கிவிடாதீர்கள்
புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு வழக்கில் மைனர் குற்றவாளிக்கு இன்று தீர்ப்பு

கடந்த டிசம்பர் மாதம் புதுடில்லியில் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஆறு பேர் கொண்ட கும்பலால் கூட்டு கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார், இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவன் 17 வயது கொண்ட மைனர், மற்ற 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் வைக்கப்பட்டபோது இந்த ஒருவன் மட்டும் சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டான்.

ஆந்திராவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம், கிரன்குமார் ரெட்டி புதுக்கட்சி தொடங்குகிறார்?
ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளித்ததிலிருந்து சீமாந்திர காங்கிரஸ் பகுதியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
Friday, 30 August 2013
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கற்றது தமிழ் ராம் மின் தங்கமீன்கள் இன்று ரிலீஸ், அடுத்த படம் "தரமணி"யும் அறிவிப்பு.

ஒரு படம் பெயர் ஓடினாலே அடுத்தடுத்த படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி போட்டு படங்களை எடுத்து தள்ளி பிஸியாக இருக்கும் இயக்குனர்கள் மத்தியில் ராம் எடுத்த கற்றது தமிழ் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் , தயாரிப்பாளருக்கு பணத்தையும் கூட சம்பாதித்து கொடுத்தது, ஆனாலும் அவர் அடுத்தடுத்த படங்கள் செய்யவில்லை.Thursday, 29 August 2013
Wednesday, 28 August 2013
Tuesday, 27 August 2013
நெஞ்சுவலியால் மருத்துவமனை சென்ற சோனியா வீடுதிரும்பினார்.
நேற்று மக்களவையில் உணவு பாதுக்காப்பு மசோதா குறித்தான ஓட்டெடுப்பு நடந்து மசோதா நிறைவேறியதும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தமக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார், உடனடியாக எய்ம்ஸ் மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார்
45 நாட்களில் 4 பத்திரிக்கையாளர்கள் கொலை - உ.பி.பயங்கரம்
உத்திரபிரதேசம் புலந்த்ஷஹர் மாவட்டர் குஜ்ரா நகர சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜகவுல்லா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனார்,

Monday, 26 August 2013
இலங்கை இறுதிப்போரில் இந்திய கொடி தாங்கிய கப்பல்.
இலங்கையில் நடந்த இறுதி புத்தத்தின் போது ராணுவத்தினரிடம் சரணடந்த கைதிகள் சிலர் காணாமல் போயுள்ளனர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டுமென இலங்கை நீதிமன்றத்தில் காணாமல் போனவர்களில் உறவினர்கள் ஐந்து ஆட்கொணர்வு மனு கொடுத்திருந்தனர், தற்பொழுது மேலும் ஏழு ஆட்கொணர்வு மனு புதிதாக கொடுக்கபட்டுள்ளது.
மைனர் பெண்களுடன் செக்ஸ் உறவு குற்றமல்ல, சர்ச்சையை கிளப்பியிருக்கும் நீதிமன்ற தீர்ப்பு - மக்கள் அலசல்
சம்மதத்துடன் மைனர் பெண்களுடன் செக்ஸ் உறவு குற்றமல்ல, சர்ச்சையை கிளப்பியிருக்கும் நீதிமன்ற தீர்ப்பு - மக்கள் அலசல்
சமீபத்தில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் டெல்லி காவல்துறையும் சேர்ந்து ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தது, அதில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களிடம் உறவு வைத்து கொள்வது சட்ட விரோதம் என சட்ட திருத்தம் வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்கள்.

சீருடையை கழட்டி கொடுத்த காவலர் - சாதி பெயர் சொல்லி திட்டுவதாக குற்றசாட்டு
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார் ரமேஷ், அதே காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரமேஷ்பாபு, இவர் காவலர் ரமேஷை சாதிபெயர் சொல்லி திட்டுவதாகவும், உடன் பணிபுரிபவர்கள் மத்தியில் அவமானபடுத்துவதாகவும் புகார் செய்து விழுப்புரம் எஸ்.பியிடம் தனது சீருடையை கழட்டி கொடுக்க வந்திருந்தார்.
Sunday, 25 August 2013
சுப.உதயகுமார் மீது இடிந்தகரையில் வெடிகுண்டு வீசியதாக வழக்கு

நேற்று இடிந்தகரையில் இரண்டு இடங்களில் நான்கு பேர் கொண்ட அணு உலை ஆதரவு கும்பல் பைக்கில் வந்து வெடிகுண்டு வீசி சென்றதாக சுப.உதயகுமார் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்று காலை
சுப.உதயகுமார், புஸ்பராயன் , முகிலன் , மைபா.ஜேசுராஜன், மில்டன், ஹெபிச்டன், ராஜலிங்கம் மற்றும் இன்னும் அடையாளம் தெரியாத 35 நபர்கள் என்றும் இவர்கள்தான் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.
# அடுத்த என்னங்க கஞ்சா கேசா? ஹெராயின் கேசா? கேஸ் போடுவதென்று முடிவாகிவிட்டதென்றால் எந்த கேஸ் வேணா போடுவிங்களே!

கரையும் விஜயகாந்த் கட்சி, மாநில துணைச் செயலர் ஆஸ்டின் கட்சியிலிருந்து அவுட், அதிமுகவிலிருந்து அழைப்பு?
நாகர்கோவிலை சேர்ந்த அதிரடி பார்ட்டியான எஸ்.ஆஸ்டின் அதிமுக கவுன்சிலராக இருந்து நகராட்சி சேர்மனாக உயர்ந்து பின் திருநாவுக்கரசு கட்சியாக இருந்த எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சி சார்பாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், நாகர்கோவில் பகுதியில் குறிப்பிடதகுந்த அளவு
கட்டைபஞ்சாயத்து செய்ய மறுத்ததால் கவிதா திருமாவளவன் மீது பொய்புகார் என விடுதலை சிறுத்தைகள் அறிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் இன்று (24-08-2013) கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார்.

Saturday, 24 August 2013
Friday, 23 August 2013
பாகிஸ்தான் சிறையில் இருந்து 357 மீனவர்கள் விடுதலை.
இந்திய அரபிக்கடல் பகுதியில் மும்பை மற்றும் குஜராத் மீனவர்கள் அதிகமாக மீன் பிடித்து வருகிறார்கள், இரவு நேரங்களில் வழி தெரியாமல் அவர்கள் பாகீஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்த விசயத்தில் அவர்களிடம் இருக்கும் நேர்மை உடனே இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து விடுவார்கள்.
தேசிய பாதுகாப்பு சட்டம் தவறாக பயன்படுத்தக்கூடாது - மத்திய உள்துறை அமைச்சகம்.
கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் மாபெரும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது, அதை தொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து வன்னியர்கள் மாமல்லபுரம் நோக்கி விரைந்தனர், அதில் ஒரு குழுமம் மரக்காணம் பகுதியை கடக்கும் பொழுது அங்கிருந்த சமூதாயத்தினருடன் மோதல் ஏற்பட்டு ஒரு காவலர் உட்பட இருவர் இறந்தனர்.
மீண்டும் 5 ஆண் நாய்களின் வெறிச்செயல்
மும்பை லைஃப் ஸ்டைல் பத்திரிக்கையை சேர்ந்த 22 வயது போட்டோ கிராஃபர் தன்னுடன் வேலை பார்ப்பவருடன் மாலை ஐந்து மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், மகாலட்சுமி நகர் பகுதியில் பூட்டிகிடக்கும் ஒரு மில் அருகே ரயில்வே கேட்டை கடக்க வண்டியின் வேகத்தை குறைத்த பொழுது வழிமறிக்கபட்டு வாகனம் ஓட்டி வந்த நண்பர் அடையாளம் தெரியாத ஐந்து நபர்களால் தாக்கபட்டார்.
Thursday, 22 August 2013
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் தீர்மானம்.
கடந்த சில தினங்களாக காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் பலியானர்கள், பலர் படுகாயம் அடைந்தனர், இதை பயன்படுத்தி சில பங்கரவாதிகளும் இந்திய எல்லைக்குள் ஊடுறுவும் முயற்சிகளும் நடந்தது. இந்திய ராணுவத்தினர் அவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களது முயற்சியை முறியடித்தனர்.
தாயாளுஅம்மாளை வழக்கிலிருந்து விடுவிக்க இயலாது -உச்சநீதி மன்றம்
தமக்கும் 2ஜி வழக்கிற்கும் எந்த சம்பந்தமுமில்லை, என்னை வழக்கிலிந்து விடுவித்து விடுங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தாயாளுஅம்மாள் சிறப்பு சி.பி.ஐ உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என அறிவித்தார்.
மெட்ராஸ் கஃபே திரைபடுத்துக்கு பா.ஜ.க எதிர்ப்பு.
நாளை வெளியிட தயாராக இருந்த மெட்ராஸ் கஃபே திரைப்படம் தமிழில் வெளியிட மதுரை நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து தமிழகத்தில் ஹிந்தியில் வெளியிட இருந்தது. தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து அப்படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆவது கடினம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறன.
மெட்ராஸ் கபேக்கு எதிராக மாணவர்கள் ஆர்பாட்டம்
ஈழத்தமிழர்களின் போராட்டத்தை தீவிரவாதம் என சித்தரிப்பது போலவும், அவர்களுடன் தமிழக அரசியல் தலைவர்கள் பலருக்கு நேரடி தொடர்பிருந்து தீவிரவாதத்தை வளர்த்து விட்டது போலவும் சித்தரிக்கபட்டு ஜான் ஆபிரஹாம் நடித்து ஹிந்தியில் வெளியாகியுள்ள மெட்ராஸ் கபே படத்தை தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பலரும் எதிர்த்து வருகிறார்கள்.
விஷவாயு குண்டு வீசிய ஷிரியா ராணுவம்
ஷிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் புரட்சியாளர்களை கட்டுபடுத்த ஷிரிய ராணுவம் ரசாயனகுண்டு தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது, இதில் 1300 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் பெரும்பாலோர் குழந்தைகள். இந்த குண்டு நேற்று அதிகாலை மூன்று மணியளவில் வீசப்பட்டதால் ஏராளமான மக்கள் தூக்கத்திலேயே இறந்ததாக தகவல் தெரிவிக்கிறது.
Wednesday, 21 August 2013
ஆந்திர அரசியலில் வாரிசு சண்டை!
ஆந்திராவிலும் வாரிசு போர் துவங்கிவிட்டதாம், தெலுங்கு தேசம் கட்சியில் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் இளைஞரணியின் தலைவராக நியமிக்கப்பட்டு கட்சி விழாக்களில் முன்னிலைப்படுத்தப்படுகிறார். இது
சென்னையின் வயது 374
ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை
தினம் கொண்டாடப்படுகிறது
.
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை.
ஈழதமிழர் போராட்டங்களை இழிவாக சித்தரிக்கும் மெட்ராஸ் கஃபே என்ற படம் இம்மாதம் இறுதியில் வெளியாக இருந்தது. அப்படத்தை ஹிந்தியில் பார்த்த சில தமிழர்கள் மூலம் தகவல் அறிந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பூமியை தாக்க இருக்கும் சூரியப்புயல்.
இன்று அதிகால சூரியனில் மாபெரும் சூரியபுயல் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், புயலில் துகள்கள் மணி மூணு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் மூன்று தினங்களுக்குள் அவை பூமியை வந்தடையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் காங்கிரஸ் மண்ணை கவ்வும் - கருத்து கணிப்பு
தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லியை ஆளும் ஹாட்ரிக் காங்கிரஸ் அரசு இம்முறை நிச்சயம் மண்ணை கவ்வும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.
கொலையில் முடிந்த கொழயடி சண்டை
மதுரை சோழவந்தான் மேலக்கால் பகுதியில் செல்லம்மாளும் அவரது மகள் முருகேஸ்வரியும் வசித்து வந்தனர். இருவரும் கணவரை இழந்து கூலி வேலைக்கு சென்று தனியாக வசிந்து வந்தனர். அப்பகுதியில் இவர்களிடம் யாரும் வாய் கொடுத்து ஜெயிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு ரவுடி பெண்களாக வாழ்ந்து வந்தனர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பொருளாதாரம் மீண்டு வருமா- வல்லுனர்கள் கருத்து.
தொடர்ந்து சரிந்து வரும் இந்திய பொருளாதாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த முடியுமா என்ற சந்தேகம் ஆட்சியாளர்களுக்கே வந்துவிட்டது. இதுவரை அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை பார்த்தால் என்ன செய்வதென்று அவர்களுக்கே புரியவில்லை என்பது புலனாகிறது.
Tuesday, 20 August 2013
வாரிசுக்கு வேலை கட்டாயமில்லை
ராஸ்தான் மாநில வங்கியொன்றில் பணி புரிந்த ஊழியர் ஒருவர் உடல்நல குறைபாட்டால் மரணமடைந்தார், அவரது மகன் சக்கரவர்த்தி சிங் அந்த வங்கிக்கு கருணை அடிப்படையில் தமக்கு அந்த வேலையை வழங்க வேண்டும் என கடிதம் எழுதினார், அதை அந்த வங்கி நிராகரித்து விட்டது.
இதை தொடர்ந்து சக்கரவர்த்தி சிங் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், ராஜஸ்தான் நீதிமன்றம் சக்கரவர்த்தி சிங்கிற்கு வேலை வழங்குமாறு தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து அந்த நீதிமன்றம் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணியில் இருக்கும் போது இறந்தவர் குடும்ப பிண்ணணி அறிந்தே வேலை கொடுப்பதா வேண்டாமா என தீர்மானிக்கும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு எனவும், பணிக்கு தேர்தெடுக்கப்படும் வாரிசிற்கு போதிய கல்வி தகுதி இல்லையென்றால் அவரது மனுவை நிராகரிக்கும் உரிமை நிறுவனத்திற்கு உண்டென்றும் தீர்ப்பு அளித்துள்ளது.
# வாரிசுக்கு பதவி அரசியலில் மட்டும் தான் போல

அடப்பாவிகளா, மசுரை கூட விடமாட்டிங்களா?
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்துவது வேண்டுதல்களில் முக்கியமான ஒன்று. பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்படும் முடிகாணிக்கைகள் அருகில் இருக்கும் குடோனில் பாதுகாக்கப்பட்டு வருடம் ஒருமுறை ஏலம் விடப்படும்.
இந்த முடி கருப்பு சாயம் தயாரிக்க மற்றும் பல வண்ண கலவைகள் செய்ய பயன்படுவதால் பலர் இதை ஏலம் எடுத்து செல்வார்கள், இந்த வருடம் ஏலம் விடுவதற்கு முன்னாள் குடோனை சோதனையிட்ட அதிகாரிகள் அதில் பத்து லட்சம் மதிப்புள்ள முடி காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கபட்டது.
இதை தொடர்ந்து கோவில் பணியாளர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், செல்வராஜ், பாலசுப்புரமணி. லட்சுமணன் மற்றும் ஆனந்தன் ஆகிய ஆறு பேரை கோவில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்!
இன்று மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ஜ் பகுதியில் இந்திய ராணிவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது, நடப்பு ஆண்டில் மட்டும் 82 முறைக்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து மக்களவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தாலும் எந்த வித பேச்சுவார்த்தைக்கும் மத்திய அரசு முன்னெடுத்து செல்வதாக தெரியவில்லை.
பாகிஸ்தான் அரசோ பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து இரண்டு தீவிரவாதிகளின் மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது, இது பாகிஸ்தான் அரசு சுயமாக மக்கள் நலனை குறித்து எந்த முடிவும் எடுப்பதில்லை என்றே காட்டுகிறது.
பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் பாகிஸ்தான் அரசு, அவர்கள் தூண்டுதலின் பேரிலே இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதை ஊக்குவித்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது போலவே தோன்றுகிறது.
இன்னும் மத்திய அரசு மெளனம் காத்தால் இந்தியாவின் பெரும் பகுதியை நாம் இழக்க வேண்டியிருக்கும்.
ஆசிட் வீச்சுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.
காரைக்காலை சேர்ந்த விநோதினி என்ற சாஃப்ட்வேர் இஞ்சினியர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார், அவரை ஒருதலையாக காதலித்து சுரேஷ் என்ற கட்டிடதொழிலாளி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார், அவரது காதலை ஏற்க மறுத்த விநோதினி மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி சுரேஷ் ஆசிட் ஊற்றினார்
பலத்த காயமடைந்த விநோதினி மதுரை மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார், அவரது உடல்நிலை மேலும் மோசமடையவே சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி சிகிச்ச பலனின்றி இறந்தார்
சுரேஷின் மீதான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது, இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி சுரேஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ஒரு லட்சரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார், மேலும் ஆசிட் விற்பனையில் அரசு சில கட்டுபாடுகளை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மரணதண்டனையை நிறுத்திய பாகிஸ்தான்.
பாகிஸ்தானில் கடந்த 2004 ஆம் ஆண்டு லஷ்கர் இ ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த காசிம் மற்றும் முகமது ஆசாம் என்ற இருவரும் சேர்ந்து டாக்டர் ஒருவரை கொடூரமாக கொன்றனர். அவர்களை கைது செய்து சிறையிலடைத்தது பாகிஸ்தான் அரசு.
இவர்கள் மேல் பல்வேறு கொலை மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதை அறிந்து நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது, இவர்களது தண்டனை அடுத்த வாரம் நிறைவேற்றப்படும் என அறிவித்த நிலையில் இன்று அவர்களது தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் நவாஸ் ஷெரிஃபிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இவர்களது மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் நவாஸ் செரிஃப் அந்த அமைப்புகள் யாரென்று குறிப்பிடவில்லை.
# தமிழகத்திலும் மூவர் தூக்குக்கு ஒரு முடிவு வர வேண்டும்.

Monday, 19 August 2013
உளுந்தூர் பேட்டை டோல்கேட் தகராறு - பா.ம.கவினர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கடந்த 8–ந் தேதி மாலை பா.ம.க. டாக்டர் அன்புமணி சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் வாகன சீட்டு வழங்க தாமதமானதாகவும், அன்புமணி ராமதாஸ் இருந்த காரின் கண்ணாடியை இறக்க சொல்லி டோல்கேட்டில் இருந்த பணியாளர்கள் வற்புறுத்தியதாகவும் கூறி அவருடன் வந்திருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர், இது குறித்து டாக்டர் அன்புமணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் சக்திவேல், ஜீவானந்தம், ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மருதூரை சேர்ந்த ராஜாவின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
# போற போக்கை பார்த்தாள் மம்மி குண்டர் தடுப்பு சட்டத்தை பாமக தடுப்பு சட்டம்னு பெயர் மாற்றிவிடுவாங்களோ?

வன்னியர்களை அவதூறாக பேசியதாக அமைச்சர் மற்றும் நடிகர் ஆனந்த்ராஜ் மீது போலிசில் பாமக புகார் அளித்துள்ளது.

சனிக்கிழமை அன்று வந்தவாசியில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் மற்றூம் நடிகர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு பேசினார். நடிகர் ஆனந்த்ராஜ்க்கும் பாமகவுக்கும் எப்போதுமே ஏழாம் பொறுத்தம், பாண்டிச்சேரியில் பல ஒயின்ஷாப்களின் ஓனரான ஆனந்த்ராஜ் பேனர்கள், படங்களை கிழிப்பது பாமகவின் பொழுது போக்கு என்றால் பாமகவை வகைதொகையில்லாமல் பேசுவது ஆனந்த்ராஜ்ஜின் பொழுது போக்கு.
சனிக்கிழமை அதிமுக கூட்டத்தில் ஆனந்தராஜ் பேசுகையில்,டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதனால் அங்கு கூடிய பாமகவினர் மேடை அருகே சென்று ஆனந்தராஜுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து எழுந்த அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், வன்னியர் சமுதாயத்தினரைப் பற்றியும், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் குறித்து கடுமையாக பேசியதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து இன்று பாமகவினர் வந்தவாசி காவல்நிலையத்தில் அளித்த புகாரில் வன்னியர் சமுதாயத்தினரையும், பாமக தலைவர்களையும் அவதூறாகப் பேசியதாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், நடிகர் ஆனந்தராஜ் ஆகியோர் பேசியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
# அதே இடத்தில் அடுத்த வாரம் பாமக கூட்டம் நடத்தினால் அமைச்சரும், ஆனந்த்ராஜ்ம் காது கொடுத்து கேட்க முடியாது

Dial for Blood, தான் கொடுத்த ரத்தம் தன்னையே காப்பாற்றி இருக்கிறது...
தான் கொடுத்த ரத்தம் தன்னையே காப்பாற்றி இருக்கிறது...
இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும் சமூக ஆர்வலர் வினோத் மற்றும் பல விபரங்கள் பற்றிய சிவசங்கர் எஸ்.எஸ் எம்.எல்.ஏ அவர்கள் ஃபேஸ்புக் தகவல்
வினோத் வெளியூர் செல்லும் போது அணியும் டி-சர்ட் "Dial for Blood 94888 48222" என்ற வாசகங்களோடு இருக்கும். அன்று தர்மபுரியில் ரயில் நிலையத்தில் இந்த டி-சர்ட்டை பார்த்த ஒரு இளைஞர் "எல்லாம் காசு சம்பாரிக்கும் ஏமாற்று வேலை" என கமெண்ட் அடிக்க, வினோத் கோபப்படாமல் பத்து நிமிடம் அவருக்கு ரத்த தானத்தின் அவசியத்தையும், உயிர்காக்கும் விதத்தையும் விளக்கி விட்டு ரயிலேறி விட்டார்.
மதியம் சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து ஃபோன். "வினோத், ஒருத்தர் ரத்தம் கொடுக்க வந்தார். முதல்முறை என்றார். நீங்கள் சொன்னதை கேட்டு வந்ததாக சொன்னார். நன்றி." மறுநாள் காலை மற்றொரு ஃபோன்.
"சார், நேத்து தர்மபுரியில் ரயில்வே ஷ்டேசன்ல பார்த்தேனே, நீங்க சொன்னத கேட்டு மனம் மாறி ரத்ததானம் செய்தேன். மாலை உடையாம்பட்டி அருகே எனக்கு பைக் ஆக்சிடெண்ட். ஆப்ரேஷனுக்கு ரத்தம் தேவைப்பட்டிருக்கிறது "O-". எங்கும் கிடைக்காமல் நான் கொடுத்த ரத்தம் தான் என்னையே காப்பாற்றி இருக்கிறது. நினைச்சா பயமாயிருக்கு. நீங்க சொன்னத கேட்டதால் தான் உயிரோடிருக்கிறேன். மிக்க நன்றி"
ரத்த தானம் செய்வதை ஊக்கப்படுத்தி வந்த தர்மபுரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத், Indian Pillars என்ற அமைப்பை துவக்கி ரத்த தானம் செய்வோரை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு அதற்காக 24x7 இயங்கும் கால் செண்டர் துவங்கியிருந்த நேரம்.
மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை. அவருக்கு ரத்தம் தேவை. அவரது ரத்தம் "O bombay" பிரிவு. 15000 பேரில் ஒருவருக்கே இந்த இந்தப் பிரிவு இருக்கும். அன்று விடுமுறை நாள் என்பதால் எங்கு தொடர்பு கொண்டும் கிடைக்காமல் தர்மபுரி Indian Pillars அமைப்பிற்கு தொடர்பு கொள்கிறார்கள்.
மாலை இந்த "O bombay" பிரிவு ரத்தம் கேட்டு அழைப்பு வந்த உடன் தங்களிடம் உள்ள மூன்றரை லட்சம் பேர் கொண்ட data base-ல் தேடி மேட்டூர் அருகே இருந்த ஒருவரை கண்டுபிடித்தனர். அவரை தொடர்பு கொண்டு சேலம் வர செய்து ரத்தம் சேகரித்த போது இரவாகிவிட்டது.
அதற்குள்ளாக அதனை இந்தூர் வரை பாதுகாப்பாக கொண்டு செல்ல கோயம்புத்தூரில் இருந்து icepack box-ஐ வரவழைத்தார்கள். சேலத்திலிருந்து பெங்களூருக்கு தனியார் பேருந்தில் ரூ 900 செலவு செய்து அனுப்பப்பட்டது. அங்கிருந்து இரவே விமானம் மூலம் ரத்தம் இந்தூரை சென்றடைந்தது. ( விமானத்தில் ரத்தம் அனுப்பினால் இலவசம்)
விடியற்காலை வினோத்தின் செல் ஒலிக்கிறது. தூக்கக் கலக்கத்தில் செல்லை எடுத்தால், புரியாத இந்தியில் பேசுகிறார்கள், கடைசியாக சொன்ன "தன்யவாத்" மட்டுமே தெரிந்த வார்த்தை, நன்றி. காலை அங்கிருந்து டாக்டர் தொடர்பு கொண்டு உரிய நேரத்தில் ரத்தம் வந்து சேர்ந்து, இரவே அறுவை சிகிச்சை செய்யப் பட்டதால் நோயாளி காப்பற்றப்பட்டதை சொல்லி, நன்றி சொல்லியிருக்கிறார்.
இந்த சேவை அனைத்தும் இலவசம். யாரிடமும் உதவி கேளாமல் நண்பர்கள் துணையோடே, இந்த உயிர் காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளார் வினோத். "இந்த பாராட்டு, நன்றி போலவே திட்டும்,வசவும் சகஜம் சார். எதுவாக இருந்தாலும் உயிர் காக்கப்பட்டால் போதும் சார்." இது தான் வினோத்.
மற்றொரு நாள், அதே டி-சர்ட் பார்த்து விளக்கம் கேட்ட ஒரு சென்னை கல்லூரி மாணவி தன் விவரங்களை அளித்துள்ளார். அன்று இரவு சென்னையிலிருந்து ரத்தம் கேட்டு அழைப்பு. ரயில் பயணம். முக்கிய எண்களை கொண்ட மற்றொரு செல் சார்ஜ் போய் அணைந்து போய் விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் பையிலிருந்த பேப்பர்களை துழாவுகிறார். அந்தக் கல்லூரி மாணவியின் விபரத்தை பார்த்தால் அதே ரத்த வகை.
செல்லில் தொடர்பு கொண்ட வினோத் விபரத்தை சொல்ல அந்த பெண் உடனே கிளம்ப தயாராகிறார். இரவு மணி 11. துணைக்கு யாராவதை அழைத்து செல்ல சொல்ல, "அம்மா தூங்குகிறார், நான் தனியா போய் கொடுத்துடறேன்" என்கிறார். மனம் கேளாத வினோத் லேண்ட்லைன் நம்பருக்கு தொடர்பு கொள்கிறார். போனை எடுத்த தாயாரிடம் விளக்கினால்,"நீயெல்லாம் அக்கா,தங்கச்சியோடு பிறக்கலையா, இந்த நேரத்தில் எப்படி போவது?"
திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறார். உயிரை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் மீண்டும் போன் செய்கிறார். பத்து நிமிடம் திட்டி தீர்த்து, வினோத் பேசியதை கேட்டு மனம் மாறி அவரே மகளை அழைத்து சென்று ரத்த தானம் செய்கிறார். இப்போது அவர்கள் ரெகுலராக ரத்த தானம் செய்கிறார்கள் மனம் உவந்து.
ரத்த தானத்திற்கான கால்செண்டர் துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஜூன் 14 , காரணம் அன்று உலக ரத்ததான தினம். எதேச்சையாக அதுதான் வினோத்தின் பிறந்ததினமும். ரத்ததானத்திற்காகவே பிறந்திருப்பார் போலும்... சொந்த வேலையை பார்க்காமல், சம்பாரிப்பதையும் செலவு செய்து இப்படி பொதுப் பணியாக இருக்கிறாரே என்ற பெற்றோர் கோபத்திலும் பணியை தொடர்கிறார்.
கல்லூரி விடுமுறை என்றால் ரத்ததானம் குறைவாக இருக்குமாம். ஜூன் மாதம் Indian Pillarsஐ தொடர்பு கொண்டு 100 முகாம் நடத்தி ரத்தம் திரட்டி கொடுக்க கேட்கிறார்கள். டீம் களத்தில் இறங்கியது. இந்தியா முழுதும் தொடர்பு கொள்கிறார்கள். போன் மூலம் பேசியே முகாம் நடத்த இடம் ஏற்பாடாகிறது. முகநூல் மூலம் ரத்ததான முகாம் செய்தி பகிரப்படுகிறது. பேப்பர் விளம்பரமோ, பிட் நோட்டீஸோ கிடையாது. ஜூலை 5 அன்று இந்தியா முழுதும் 400 முகாம் நடத்தப்பட்டு 11,500 யூனிட் ரத்தம் திரட்டப் பட்டிருக்கிறது. மிகப் பெரிய சாதனை.
உடன் படித்த நண்பர் பாலாஜி, உறுதுணையாக இருக்கும் நண்பர் தாஜுதீன், பணிகளை பார்த்து தானாக உதவிட முன்வந்த அரசு பணியிலிருக்கும் பொறியாளர் சிவக்குமார், அவரது துணைவியார் வங்கி மேலாளர் பாமா என கோர் டீம். தர்மபுரி எம்.எல்.ஏ பாஸ்கர் இவர்கள் பணிக்கு ஆதரவு. பிரதிபலன் பாராமல் உதவிடும் வாலண்டியர்களாக, படித்த, பணியிலிருக்கும் இளைஞர்கள் என ஒரு படையின் உழைப்பாக இந்த உயிர்காக்கும் சாதனை.
இந்தியாவின் எந்த மூலையில் ரத்தம் வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்க Indian Pillars Call Centre : 94888 48222.
இன்று இவர்களின் தர்மபுரி அலுவலகம் சென்று வந்தேன். இவர்களின் ஒரே கோரிக்கை அரசு ஒரு டோல் ஃபிரீ எண் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்தால், இன்னும் பல மடங்கு பணி விரிவடையும்.
# உயிர்காக்கும் பணியில் நம் பங்கும் ஒரு துளி இருக்கட்டும். Indian Pillars பக்கத்தை like and share செய்யுங்கள் !

விஹெபி யாத்திரை தடை, இலங்கை நட்பு நாடல்ல, பீகார் ரயில்விபத்து மேலும் பல
இலங்கை நட்பு நாடல்ல - கருணாநிதி எச்சரிக்கை
# ஏன் தலைவரே ? ஆட்சி கைய விட்டுப் போனதும் அன்ஃபிரண்டு பண்ணிட்டீங்களா?
@சிவ சிவா
---
விஸ்வ இந்து பரிஷத்தின் அய்யோத்தி யாத்திரைக்கு உ.பி. அரசு தடை
இவ்வார இறுதியில், உத்திரபிரதேசத்தில் பிரச்சினைக்குறிய ராமர்கோவில் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி அய்யோத்தியை நோக்கி 300 கிலோ மீட்டர் யாத்திரை நடத்த விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்தது, அதற்கு தடைவிதித்துள்ளது உத்திர பிரதேச அரசு.
# ஒரு தடவை யாத்திரை நடத்தி ரத்தம் குடித்தது போதாதா?
--------
பீகாரில் ரயில் மோதி பலியாணவர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்வு.
பீகாரில் காஹாரியா மாவட்டத்தில் பாட்னா நோக்கி சென்ற ராஜ் ராணி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தோர் மீது 80கிமீ வேகத்தில் மோதியதில் பலர் உயிரிழந்தனர், இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மோதிய ரயிலின் சில பெட்டிகளுக்கு தீ வைத்தனர், மேலும் ரயில்வே ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.
பலியானோரில் பெரும்பாலானோர் அங்கிருக்கும் சிவன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆவார்கள், அடுத்த ரயிலுக்கு காத்திருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
---------
இந்தியாவின் பொறுமையை பாகிஸ்தான் பலவீனமாக கருதக் கூடாது,
ராஜ்யசபவில் பேசிய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி எச்சரிக்கை
#ஆடிமாசத்துல நான்-வெஜ் எடுக்க மாட்டேன்னு தெரிஞ்சிக்கிட்டு ஆட்டம் காட்டுறியா படவா பாக்கிஸ்தான் ராஸ்கல்

Subscribe to:
Posts
(
Atom
)